Published:Updated:

சாதகமாக இருந்தால் வெளியிடு... இல்லையேல் தூக்கிப்போடு... குப்பைக்குப் போன விசாரணை கமிஷன் அறிக்கைகள்!

விசாரணை கமிஷன் அறிக்கை
பிரீமியம் ஸ்டோரி
விசாரணை கமிஷன் அறிக்கை

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் 2011-ம் ஆண்டு நடந்த கலவரத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஏழு பேர் பலியானார்கள்.

சாதகமாக இருந்தால் வெளியிடு... இல்லையேல் தூக்கிப்போடு... குப்பைக்குப் போன விசாரணை கமிஷன் அறிக்கைகள்!

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் 2011-ம் ஆண்டு நடந்த கலவரத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஏழு பேர் பலியானார்கள்.

Published:Updated:
விசாரணை கமிஷன் அறிக்கை
பிரீமியம் ஸ்டோரி
விசாரணை கமிஷன் அறிக்கை

காவல்துறை அத்துமீறல், சாதிக் கலவரம், மனித உரிமை மீறல்கள், ஊழல் போன்ற பிரச்னைகள் பூதாகரமாகும்போது ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கும் வழக்கத்தை தமிழ்நாடு அரசு நீண்டகாலமாகக் கையாள்கிறது. ‘விசாரணை கமிஷன் சட்டம் 1952’-ன்படி, அப்படி அமைக்கப்படும் ஆணையத்தின் அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும். ஆனால் நடப்பதோ வேறு!

சாதகமாக இருந்தால் வெளியிடு... இல்லையேல் தூக்கிப்போடு... குப்பைக்குப் போன விசாரணை கமிஷன் அறிக்கைகள்!

ஆணையங்களின் சோக வரலாறு!

நாட்டையே உலுக்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் அறிக்கை கடந்த மே மாதம் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், அதை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யாமல் இழுத்தடித்த நிலையில், அந்த அறிக்கை கசியவிடப்பட்டது. இதையடுத்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “ஆணைய அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்” என்று அறிவித்திருக்கிறார். சொன்னதுபோலவே சட்டமன்றத்தில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டால், ‘ஒரு பிரச்னைக்காக அரசு அதிகாரிகள்மீது நேரடியாகக் குற்றச்சாட்டு வைக்கப்பட்ட விசாரணை ஆணைய அறிக்கை’ என்ற பெருமையைப் பெறும். தமிழ்நாட்டில் விசாரணை ஆணையத்தின் வரலாறு அப்படி!1995-ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியில் கொடியன்குளம் கலவரத்தில் போலீஸாரின் அத்துமீறலை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கோமதிநாயகம் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. 1996-ம் ஆண்டு, மார்ச் மாதம் கோமதி நாயகம் தன் அறிக்கையைச் சமர்ப்பித்தார். ஆனால், இந்த அறிக்கை மூன்று ஆண்டுகள் கழித்து (1999), தி.மு.க ஆட்சியில்தான் சட்டமன்றத்தில் வைக்கப்பட்டது. அந்த அறிக்கை, கொடியன்குளம் கிராமத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டை நியாயப்படுத்தியதோடு, எந்த அத்துமீறலும் நிகழவில்லை என்று சான்றளித்திருந்தது.

சாதகமாக இருந்தால் வெளியிடு... இல்லையேல் தூக்கிப்போடு... குப்பைக்குப் போன விசாரணை கமிஷன் அறிக்கைகள்!

மாஞ்சோலை அடக்குமுறை

1999-ம் ஆண்டு மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் கூலி உயர்வுக்காகப் போராடியபோது, போலீஸ் தடியடியால் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 17 பேர் பலியானார்கள். இது தொடர்பாக நீதிபதி மோகன் தலைமையிலான விசாரணை கமிஷன் அளித்த அறிக்கையில், உயிரிழந்த மக்களுக்கு எந்த நீதியும் கிடைக்கவில்லை.தி.மு.க ஆட்சியின்போது பெரம்பூரில் மேம்பாலம் கட்டும் பணியில் ஊழல் நடைபெற்றதாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகம் தலைமையில் 2001-ம் ஆண்டு விசாரணை கமிஷன் போடப்பட்டது. அவரது அறிக்கை தாக்கல் செய்யப்பட்டும், இதுவரை அறிக்கை வெளியிடப்படவில்லை. 2003-ம் ஆண்டு வெங்கடேச பண்ணையார் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட சம்பவத்தின் உண்மைநிலையை அறிய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ராமன் தலைமையிலான ஆணையத்தின் அறிக்கையும் இதுவரை வெளியாகவில்லை.

சிறுதாவூரில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து, ஜெயலலிதா பங்களா கட்டியிருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், நீதிபதி சிவசுப்பிரமணியம் தலைமையில் 2006 ஜூலையில் விசாரணைக்குழு அமைத்தார் அப்போதைய முதல்வர் கருணாநிதி. இந்த கமிஷன் நான்கு ஆண்டுகள் விசாரணை நடத்தி 805 பக்கங்கள் கொண்ட அறிக்கையை 2010-ம் ஆண்டு, மே மாதம் தாக்கல் செய்தது. இதில் ஜெயலலிதாவுக்குத் தொடர்பு இருப்பதை ஆணையத்தால் நிரூபிக்க முடியவில்லை. இந்த விவகாரத்தில் முன்னாள் முதல்வரின் பெயர் தொடர்புபடுத்தப் பட்டதால்தான் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது என்று வெட்ட வெளிச்சமானது. இதன் காரணமாக வேறு வழியில்லாமல் அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

பரமக்குடி துப்பாக்கிச்சூடு!

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் 2011-ம் ஆண்டு நடந்த கலவரத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஏழு பேர் பலியானார்கள். இந்தச் சம்பவத்தை விசாரிக்க, அதே ஆண்டு செப்டம்பரில் ஓய்வுபெற்ற நீதிபதி சம்பத் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. 20 மாதங்களுக்குப் பின்னர், சம்பத் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தார். இந்த அறிக்கையை 2013-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் சட்டமன்றத்தில் முன்வைத்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. அதில், கலவரங்களைக் கட்டுப்படுத்தவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக, போலீஸாருக்கு ஆதரவான கருத்துதான் முழுக்க முழுக்க இடம்பெற்றிருந்தது. அறிக்கையில், “கலவரத்தில் தங்களைத் தாக்கியவர்களில் சிலரைக் காவல்துறையினர் பழிவாங்கும் நோக்கத்துடன் திருப்பித் தாக்கியுள்ளனர்” என்ற வாக்கியத்தை அரசு புறக்கணிக்கிறது என்று அறிவித்தார் ஜெயலலிதா.சென்னை மெரினாவில் 2017-ம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் இறுதிக் கட்டத்தை அடையும்போது, வன்முறை வெடித்தது. இது குறித்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை நடத்திய ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் தலைமையிலான கமிஷன், தனது அறிக்கையை 2020-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியது. ஆனால், இன்றுவரை அறிக்கை வெளியிடப்படவில்லை.

ஆறுமுகசாமி
ஆறுமுகசாமி

ஜெயலலிதா மரண சர்ச்சை!

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த சூரப்பா ரூ.250 கோடிக்கு மேல் முறைகேட்டில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. அதை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான கமிஷன் 2020-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் அ.தி.மு.க ஆட்சியில் அமைக்கப்பட்டது. அந்த அறிக்கை 2021-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், இதுவரை சட்டமன்றத்தில் அது தாக்கல் செய்யப்படவில்லை. அதேபோல, இளவரசன் மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையில் விசாரணை ஆணைய அறிக்கை, மவுலிவாக்கம் கட்டட விபத்தில் 61 பேர் பலியானது தொடர்பாக நீதிபதி ரெகுபதி தலைமையில் விசாரணை ஆணைய அறிக்கை போன்றவையும் இன்னும் ரகசியமாகவே இருக்கின்றன. இந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை ஆணைய அறிக்கை கசிந்திருக்கிறது. ‘ஸ்மார்ட் சிட்டி’ முறைகேடு தொடர்பாக ஆய்வுசெய்த விசாரணைக்குழுத் தலைவர் டேவிதார், தனது விசாரணை அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் தாக்கல் செய்திருக்கிறார். அதேபோல, நீண்டகாலமாக நடைபெற்றுவரும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் தனது அறிக்கையைத் தாக்கல் செய்யவிருப்பது குறிப்பிடத்தக்கது. பழைய வரலாற்றைவைத்துப் பார்க்கும்போது, இவையும் பொதுமக்களின் பார்வைக்கு வருமா, நடவடிக்கை இருக்குமா என்பது சந்தேகமே.

ஹென்றி திபேன்
ஹென்றி திபேன்

மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஹென்றி திபேன் கூறுகையில், “என்னைப் பொறுத்தவரை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷனே அமைக்கக் கூடாது. இதன் மூலம் மக்கள் வரிப்பணம் வெட்டியாகச் செலவு செய்யப்படுகிறது. மனித உரிமை மீறல் ஏற்படும்போது, அதை உண்மையிலேயே சரிசெய்ய வேண்டும் என்று கருதும் அரசு, பிரச்னையை மனித உரிமை ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும். அதேபோல, மகளிர் நலம், எஸ்.சி., எஸ்.டி நல ஆணையங்கள் மிகுந்த அதிகாரத்தோடு இருக்கின்றன. பிரச்னையைப் பொறுத்து, அது குறித்து விசாரணை நடத்த உரிய கமிஷனிடம் ஒப்படைக்க வேண்டும். அதோடு கமிஷனுக்குத் தேவையான உதவிகளை அரசு செய்தால், பிரச்னைக்கான தீர்வை எட்ட முடியும்” என்றார்.

ஜல்லிக்கட்டு விசாரணை ஆணையத்தின் உறுப்பினரும், வழக்கறிஞருமான ச.பாலமுருகன் நம்மிடம் பேசுகையில், “தமிழ்நாட்டில் காவல்துறையின் அத்துமீறல் தொடர்பாகத்தான் அதிகமான விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், விசாரணை ஆணையத்தின் பரிந்துரையின்பேரில் இதுவரை எந்த போலீஸாரும் தண்டிக்கப்பட்டதாக வரலாறே இல்லை. ஒரு பிரச்னையால் பொதுமக்கள் மத்தியிலிருக்கும் கோபத்தைத் தணிப்பதற்கான கருவியாகத்தான் ஆணையத்தை அரசு அமைக்கிறது. அது முறையாகச் செயல்படுகிறதா, இல்லையா என்பதை அரசு கண்டுகொள்வதே இல்லை. இல்லையென்றால், விசாரணை எவ்வாறு நடக்க வேண்டும், முடிவு எப்படியிருக்க வேண்டும் என்று அரசே உத்தேசித்து, ஆணையத்தை அமைக்கிறது. அதையும் தாண்டி, நேர்மையாக விசாரணை நடைபெற்று, அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டால், அதைக் கிடப்பில் போட்டுவிடுகிறது. அரசைப் பொறுத்தவரை, யார் ஆட்சியில் தவறு நடந்தாலும் காவல்துறைக்குக் களங்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது காவல்துறையால், ஏராளமான பொதுமக்கள் தங்கள் உடைமைகளை இழந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை” என்றார் ஆதங்கத்துடன்.

ச.பாலமுருகன்
ச.பாலமுருகன்

‘பிரச்னை என்றால் கல்லைப் போடு; இல்லைன்னா... கமிஷனைப் போடு’ என்ற பழைய நையாண்டியுடன், ‘அறிக்கை சாதகமாக வரவில்லையென்றால் தூக்கிக் குப்பையில் போடு’ என்ற வாசகத்தையும் இணைத்துக்கொள்ள வேண்டும்போலும்!