Published:Updated:

ஜம்மு காஷ்மீரில் எப்போது ஜனநாயகம் திரும்பும்?

ஜம்மு காஷ்மீர்
பிரீமியம் ஸ்டோரி
ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370 நீக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில், அங்கு பயங்கரவாதச் செயல்கள் மீண்டும் தலைதூக்கியிருக்கின்றன.

ஜம்மு காஷ்மீரில் எப்போது ஜனநாயகம் திரும்பும்?

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370 நீக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில், அங்கு பயங்கரவாதச் செயல்கள் மீண்டும் தலைதூக்கியிருக்கின்றன.

Published:Updated:
ஜம்மு காஷ்மீர்
பிரீமியம் ஸ்டோரி
ஜம்மு காஷ்மீர்

ரஜோரி ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், நான்கு ராணுவ வீரர்கள் மரணமடைந்த சம்பவம், ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில், அங்கு ‘இன்னும் ஏன் சட்டமன்றத் தேர்தலை நடத்தவில்லை?’ என்ற கேள்வி எல்லோராலும் எழுப்பப்படுகிறது!

தாக்குதலுக்குக் காரணம்?

ஜம்மு காஷ்மீரில் சுதந்திர தினத்துக்கு நான்கு தினங்களுக்கு முன்பாக, ஆகஸ்ட் 11-ம் தேதி அதிகாலையில், ரஜோரி ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதலை நடத்தினர். அதில், மதுரையைச் சேர்ந்த லட்சுமணன் உட்பட நான்கு ராணுவத்தினர் வீரமரணம் அடைந்தனர். ஜம்மு காஷ்மீரில் நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டிருக் கின்றன. காஷ்மீர் பள்ளத்தாக்கில் அனந்த்நாக், ஜம்முவில் ரஜோரி, பூஞ்ச் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய நாடாளுமன்றத் தொகுதி உருவாக்கப்பட்டிருக்கிறது. இதை விரும்பாத பயங்கரவாத அமைப்புதான், ரஜோரியில் தாக்குதல் நடத்தியிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ரஜோரியில் நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல், 2018-ம் ஆண்டுக்குப் பிறகு நடந்திருக்கும் பெரிய தாக்குதல் என்று பார்க்கப்படுகிறது. ரஜோரிக்கு முன்னதாக, குல்காம் உள்ளிட்ட சில இடங்களில் கடந்த ஜூலை 27-ம் தேதி பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் சம்பவங்கள் நடைபெற்றன. ஜம்மு காஷ்மீரில் அச்சமூட்டும் சூழலை உருவாக்க பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுச் செயல்படுகின்றன.

ஜம்மு காஷ்மீரில் எப்போது ஜனநாயகம் திரும்பும்?

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370 நீக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில், அங்கு பயங்கரவாதச் செயல்கள் மீண்டும் தலைதூக்கியிருக்கின்றன. இது, அந்த மாநில மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி யிருக்கிறது. அங்கு இயல்புநிலை திரும்புவதற்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் மேலோங்கியிருந்த சூழலில், பிரதமர் மோடி கடந்த ஏப்ரல் மாதம் காஷ்மீருக்குச் சென்றார். அங்கு, ரூ.20,000 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கிவைத்துப் பேசியவர், “ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுக்கு ஒன்றைக் கூற விரும்புகிறேன். உங்கள் பெற்றோரும் தாத்தா, பாட்டிகளும் பல கஷ்டங்களுடன் வாழ்ந்தனர். உங்கள் வாழ்க்கையில் அது போன்ற கஷ்டங்கள் இருக்காது” என்றார். மோடியின் வருகை ஜம்மு காஷ்மீரில் புதிய விடியலை ஏற்படுத்துவதாகச் சில ஊடகங்கள் வர்ணித்தன.

எப்போது தேர்தல்?

ஆனால், `சட்டமன்றத் தேர்தலை நடத்தாமல் எந்த விடியலுக்கும் வாய்ப்பில்லை’ என்று அங்குள்ள அரசியல் கட்சிகள் அடித்துச் சொல்கின்றன. அங்கு, 370 ரத்து செய்யப்படுவதற்கு முன்பாகச் சட்டமன்றம் கலைக்கப்பட்டது. அதனால், கடந்த நான்கு ஆண்டுகளாகக் குடியரசுத் தலைவர் ஆட்சி அங்கு நடைபெற்றுவருகிறது. ‘விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று பிரதமர் மோடி உள்ளிட்ட மத்திய ஆட்சியாளர்கள் பல முறை உறுதியளித்தும்கூட, அங்கு இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை. தேர்தல் நடத்துவது குறித்த வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை என்பதற்கான விளக்கத்தை மத்திய அரசு அளிக்க வேண்டும்’ என்று ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சிகள் வலியுறுத்துகின்றன. `யூனியன் பிரதேசம் என்கிற அந்தஸ்துடன் இருக்கும் நிலையில், ஜம்மு காஷ்மீரின் அனைத்துத் துயரங்களையும் தேர்தல் மூலம் தீர்த்துவிட முடியாது என்றாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருந்தால், மக்களுக்குச் சில நல்லவற்றைச் செய்ய முடியும்’ என்றும் அரசியல் கட்சிகள் கூறுகின்றன. மேலும், பிரிவு 370 நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசியல் செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உட்பட பல நூறு பேர் கைதுசெய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர். அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதை முக்கியக் கோரிக்கையாக ஜம்மு காஷ்மீர் கட்சிகள் முன்வைத்துவருகின்றன.

இந்த நிலையில், ‘பிரிவு 370-ஐ ரத்துசெய்து, மாநிலத்தை இரண்டாகப் பிரித்து, மாநில அந்தஸ்தைப் பறித்து, யூனியன் பிரதேசங்களாக மாற்றி, தொகுதிகளைத் தங்கள் வசதிக்கேற்ப மறுவரையறை செய்து, அரசியல் கட்சிகளை இயங்கவிடாமல் செய்த பா.ஜ.க-வுக்கு, ஜம்மு காஷ்மீர் வாக்காளர்களைச் சந்திக்கத் துணிவு இல்லை’ என்று முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்திருக்கிறார்.

அவருக்கு பதிலடி கொடுக்கும்விதமாக, வாக்காளர்களைச் சந்திக்கத் தயாராகிவிட்டதாக பா.ஜ.க-வினர் கூறிவருகிறார்கள். பா.ஜ.க-வின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, கடந்த மார்ச் மாதம் ஜம்மு காஷ்மீருக்குச் சென்றார். அப்போது, தேர்தலுக்குத் தயாராகுமாறு பா.ஜ.க-வினருக்கு உத்தரவிட்டார். ஆனாலும், இப்போதைக்குத் தேர்தல் நடைபெறுவதற்கான அறிகுறி தென்படவில்லை. ஏனென்றால், இறுதி வாக்காளர் பட்டியலை வரும் நவம்பர் 25-ம் தேதி வெளியிட தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருக்கிறது. எனவே, இந்த ஆண்டு தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.

தேர்தலை நடத்தி மக்களாட்சியை நிறுவினால் மட்டுமே அங்கு இயல்புநிலை திரும்புவது சாத்தியமாகும்!