Published:Updated:

ஸ்டாலின் குடும்பத்தின் ‘வணக்கம் துபாய்’!

துபாயில் ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
துபாயில் ஸ்டாலின்

துபாயில் உள்ள காஸ்ட்லியான ஹோட்டல்களில் ஒன்றான ஓப்ராயில் முதல்வர் அவரின் மகன் உள்ளிட்ட குடும்பத்தினர் தங்கியிருந்தனர்

ஸ்டாலின் குடும்பத்தின் ‘வணக்கம் துபாய்’!

துபாயில் உள்ள காஸ்ட்லியான ஹோட்டல்களில் ஒன்றான ஓப்ராயில் முதல்வர் அவரின் மகன் உள்ளிட்ட குடும்பத்தினர் தங்கியிருந்தனர்

Published:Updated:
துபாயில் ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
துபாயில் ஸ்டாலின்

“அட்ரஸ் ஹோட்டலில் லன்ச். புர்ஜ் கலிபாவில் டின்னர், பிர்தவுஸ் ஸ்டூடியோவில் ரஹ்மானுடன் சந்திப்பு என்று தமிழக முதல்வர் ஸ்டாலினின் நான்கு நாள்கள் வளைகுடா நாட்டுப் பயணம் சமூகவலைதளங்களில் ஒரு கலக்கு கலக்கியது. அதிலும் கார் கதவைத் திறந்தபடி ஸ்டாலின் இறங்கும் புகைப்படத்தை, சினிமா ஃபர்ஸ்ட் லுக் லெவலுக்கு ஷேர் செய்தார்கள் இணைய உ.பி-க்கள். துபாய் பயணத்தில் எவையெல்லாம் ஸ்பெஷல்?

மார்ச் 24-ம் தேதி சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த கையோடு, மனைவி மருமகன், பேரன் பேத்திகள் சகிதமாக சென்னை விமானநிலையத்திற்குப் புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின். மதியம் வரை சட்டமன்றத்தில் வெள்ளைச்சட்டை வேட்டி சகிதமாக இருந்தவர், விமான நிலையத்திற்கு வந்தபோது டிஷர்ட், ஓவர் கோட், கூலிங் கிளாஸ் என ஆளே வேறு கெட்டப்பில் மாறியிருந்தார்.

ஸ்டாலின் குடும்பத்தின் ‘வணக்கம் துபாய்’!
ஸ்டாலின் குடும்பத்தின் ‘வணக்கம் துபாய்’!

முதல்வர் துபாய் செல்வதற்காக மைத்ரிஸ் நிறுவனத்தின் ஜெட் விமானத்தை புக் செய்திருந்தார்கள். ‘சுமார் 200 பேர் அமரக்கூடிய அளவுள்ள இந்த விமானத்தில் 20 பேர் மட்டுமே அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தனியாக டைனிங் வசதி, படுக்கை வசதி, உயர்தர புஷ்பேக் சீட்டுகள், டிஸ்கஷன் செய்யும் அறை உள்ளிட்ட சகல வசதிகளோடு இந்த விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில்தான் முதல்வர் ஸ்டாலின், அவரின் மனைவி துர்கா, மருமகன் சபரீசன், பேரன், பேத்தி, தனிச்செயலாளர், அரசுச் செயலாளர்கள் என சுமார் பதினைந்து பேருடன் துபாய்க்குச் சென்றனர்’ என்கிறார்கள் விமானத்துறையினர்.

முதல்வர் துபாய் செல்லும் இரண்டு தினங்களுக்கு முன்பாகவே அவரின் மகனும் தி.மு.க இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதியும் தனி விமானத்தில் துபாய் பறந்துவிட்டார். தி.மு.க ஐ.டி.விங் பொறுப்பாளர் டி.ஆர்.பி ராஜா, ராஜ்யசபா எம்.பி அப்துல்லா உள்ளிட்டவர்கள் இவர்களுக்கு முன்பாகவே பயண ஏற்பாடுகளைக் கவனிக்க துபாய்க்குப் பறந்துவிட்டனர்.

ஸ்டாலின் குடும்பத்தின் ‘வணக்கம் துபாய்’!
ஸ்டாலின் குடும்பத்தின் ‘வணக்கம் துபாய்’!

துபாயில் உள்ள காஸ்ட்லியான ஹோட்டல்களில் ஒன்றான ஓப்ராயில் முதல்வர் அவரின் மகன் உள்ளிட்ட குடும்பத்தினர் தங்கியிருந்தனர். 25-ம் தேதி காலை ஓப்ராய் ஹோட்டலில் சிற்றுண்டியை முடித்துவிட்டு, அந்த நாட்டின் வர்த்தகத் துறை அமைச்சருடன் முதல்வர் சந்திப்பு நடந்தது. அன்று மாலையே துபாய் எக்ஸ்போவில் அமைக்கப்பட்டுள்ள, தமிழ்நாட்டு பெவிலியனை முதல்வர் திறந்துவைத்தார். சவுதி அரசின் பெவிலியனைப் பார்வையிட்ட முதல்வரிடம் உதயநிதி “இதன் அருகில்தான் ஏ.ஆர்.ரஹ்மானின் பிர்தவுஸ் ஸ்டூடியோவும் உள்ளது. நீங்கள் அங்கு வரவேண்டும் என ரஹ்மான் விரும்புகிறார்” என்று சொன்னதும், முதல்வரும் ஓகே சொல்ல, பிர்தவுஸ் ஸ்டூடியோவிற்குள் என்ட்ரி கொடுத்தார் முதல்வர். ஸ்டாலின் முன்னிலையில் தான் உருவாக்கிவரும் `மூப்பில்லாத தமிழே... தாயே’ ஆல்பத்தைப் போட்டுக்காட்டியிருக்கிறார். அதோடு, உதயநிதி நடிக்கும் மாமன்னன் திரைப்படத்திற்கான இசைகோவை பற்றியும் முதல்வரிடம் ரஹ்மான் சொல்ல, ஆர்வத்துடன் அதைக் கேட்டுள்ளார்.

பிறகு உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிபாவைப் பார்வையிடச் சென்றார் ஸ்டாலின். அங்கே `செம்மொழியான தமிழ்மொழி’ பாடலுடன் தமிழ் மொழி குறித்த காட்சிகள் கட்டடத்தில் ஒளிபரப்பாக, அதை முதல்வர் உள்ளிட்டவர்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

ஸ்டாலின் குடும்பத்தின் ‘வணக்கம் துபாய்’!
ஸ்டாலின் குடும்பத்தின் ‘வணக்கம் துபாய்’!
ஸ்டாலின் குடும்பத்தின் ‘வணக்கம் துபாய்’!

முதல்வரின் அலுவலகச் சந்திப்பு நேரத்தில் அவரின் மனைவி துர்கா, பேரன், பேத்திகளுடன் துபாயில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு விசிட் அடித்துள்ளார். அபுதாபி நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, 28-ம் தேதி இரவு அதே தனி விமானத்தில் சென்னை திரும்பினார் முதல்வர்.

‘முதல்வர் போனது முதலீடுகளுக்கா, குடும்பச் சுற்றுலாவுக்கா?’ என்று எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்ப, ‘முதல்வரின் பயணச்செலவு அரசின் பணமல்ல, தி.மு.கவே பொறுப்பேற்றுக்கொண்டது’ என்று பதிலடி கொடுத்திருந்தார், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு. துபாயின் பிரமாண்ட நிறுவனமான லுலு நிறுவனத்தின் 3,500 கோடி முதலீடு உட்பட பல்வேறு முதலீடுகளுக்கான ஒப்பந்தத்துடன் தமிழகம் வந்திருக்கிறார் ஸ்டாலின்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism