Published:Updated:

ஆளுநரை அடக்க வழி தெரியாமல்... துணைவேந்தர்களை துன்புறுத்துகிறதா அரசு?

துணைவேந்தர்கள் மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
துணைவேந்தர்கள் மாநாடு

ஊட்டியில் நடந்த மாநாட்டில் அனைத்து துணைவேந்தர்களிட மும் தனித்தனியாகவும், ஐந்து பேர்கொண்ட குழுவாகவும் ஆளுநர் ஆலோசனை மேற்கொண்டார்.

ஆளுநரை அடக்க வழி தெரியாமல்... துணைவேந்தர்களை துன்புறுத்துகிறதா அரசு?

ஊட்டியில் நடந்த மாநாட்டில் அனைத்து துணைவேந்தர்களிட மும் தனித்தனியாகவும், ஐந்து பேர்கொண்ட குழுவாகவும் ஆளுநர் ஆலோசனை மேற்கொண்டார்.

Published:Updated:
துணைவேந்தர்கள் மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
துணைவேந்தர்கள் மாநாடு

ஆளுநர் ஊட்டியில் நடத்திய துணைவேந்தர்கள் மாநாட்டுக்குப் போட்டியாக, சென்னையில் நடத்தப்பட்ட மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ‘மாநில அரசின் கொள்கை முடிவுகளுக்கு கட்டுப்பட்டு பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும்’ என்று எச்சரிக்கும் தொனியில் பேசியிருக்கிறார். இதுதான் தமிழ்நாட்டில் தற்போதைய ஹாட் டாபிக்.

தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றதிலிருந்து உயர்கல்வித்துறைக்கும், அவருக்குமான பனிப்போர் தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை ஊட்டியிலுள்ள ராஜ் பவனுக்கு வரவழைத்து, கடந்த ஏப்ரல் 25, 26-ம் தேதிகளில், ‘துணை வேந்தர்கள் மாநாடு’ ஒன்றை நடத்தினார் ஆளுநர். இந்த மாநாட்டில், கல்வி சார்ந்து மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்குப் பல்கலைக்கழகங்கள் ஒத்துழைக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார்.

ஆர்.என்.ரவி
ஆர்.என்.ரவி

அதே நாளில், துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதற்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்க வில்லை. ஆளுநருக்குப் போட்டியாக அண்ணா பல்கலைக் கழகத்தில், ஆகஸ்ட் 17-ம் தேதி துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், பிரதமர் மோடியைச் சந்திக்க முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்றதால், மாநாடு தள்ளிவைக்கப்பட்டது. ஆனால், அன்றைய தினமே காரைக்குடி அழகப்பா, வேலூர் திருவள்ளுவர், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணைவேந்தர்களை நியமித்திருந்தார் ஆளுநர்.

இந்தப் பின்னணியில்தான் ஆகஸ்ட் 30-ம் தேதி சென்னை அண்ணா பல்கலையில் துணைவேந்தர்கள் மாநாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடத்தப்பட்டது. இதில், அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ரகுபதி, அனிதா ராதாகிருஷ்ணன், மா.சுப்பிரமணியன், மெய்யநாதன், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, ‘ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்த ஆண்டுதோறும் ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்’ என்று அறிவித்த ஸ்டாலின், “மாநில அரசின் கொள்கை முடிவுகளுக்குக் கட்டுப்பட்டு பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும். மாநில அரசின் கொள்கை முடிவுகளை பிரதிபலிக்கும் வகையில் துணைவேந்தர்கள் செயல்பட வேண்டும்” என்று பேசியிருந்தார்.

முதல்வர் ஸ்டாலினின் இந்தப் பேச்சு, ஆளுநருக்கு பதிலளிக்கும் வகையில் அமைந்ததோடு, `துணைவேந்தர்கள் எங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்’ என்று வார்னிங் செய்வதாக அமைந்திருக்கிறது.

ஆளுநரை அடக்க வழி தெரியாமல்... துணைவேந்தர்களை துன்புறுத்துகிறதா அரசு?

இது குறித்து மாநாட்டில் கலந்துகொண்ட துணைவேந்தர் கள் மற்றும் பதிவாளர்கள் சிலர் நம்மிடம் பேசுகையில், “ஊட்டியில் நடந்த மாநாட்டில் அனைத்து துணைவேந்தர்களிட மும் தனித்தனியாகவும், ஐந்து பேர்கொண்ட குழுவாகவும் ஆளுநர் ஆலோசனை மேற்கொண்டார். இரண்டு நாள்களும் மாநாட்டில் முழுமையாக இருந்தார். தனியாருடன் இணைந்து எவ்வாறு பல்கலைக்கழகத்தை மேம்படுத்த வேண்டும், தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட முக்கிய கருத்துகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இருந்தபோதிலும், `மாநில அரசை மீறி எங்களால் எதுவும் செய்ய முடியாது’ என்று ஆளுநர் தரப்பினரிடம் கூறினோம்.

முதல்வர் தலைமையில் நடந்த மாநாட்டில், அண்ணா பல்கலைக்கழகம், பாரதியார், டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், வேளாண் பல்கலைக்கழகம், தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு மட்டுமே பேச அனுமதி வழங்கப்பட்டது. அதுவும் வெறும் ஐந்து நிமிடங்கள் தான். அப்போதும், பிரச்னை என்ன என்பது குறித்து பேசப்படவே இல்லை. முதல்வரோ அமைச்சரோ எங்களிடம் ஆலோசனை நடத்தவில்லை. `மத்திய அரசின் திட்டங்களைச் செயல்படுத்த அறிவுறுத்திக் கடிதம் வந்தால், அரசுக்கு உடனே தெரிவிக்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கையின் அம்சங்கள் எந்த ரூபத்தில் வந்தாலும் அதை செயல்படுத்தக் கூடாது. பல்கலைக்கழகங்களில் விழா நடத்துவது குறித்து ஆளுநர் மாளிகை உங்களை அணுகினால், முதலில் எங்களிடம் தகவல் கொடுக்க வேண்டும்’ என்று அதிகாரம் குறித்து மட்டுமே அதிகமாக பேசப்பட்டது. ஏ.ஐ.சி.டி.இ., யு.ஜி.சி ஆகிய மத்திய அமைப்புகள்தான் நாட் டிலுள்ள எல்லா பல்கலைக்கழகங்களுக்கும் தலைமையாகச் செயல்படுகின்றன. அவர்களிடமிருந்து மாதந்தோறும் நூற்றுக் கணக்கில் அறிவிப்புகள் வருகின்றன. அதையெல்லாம் அரசுக்கு அனுப்பி, அதைச் செயல்படுத்த வேண்டுமா, வேண்டாமா என்று அவர்கள் பதில் சொல்வதற்குள் ஒரு செமஸ்டரே முடிந்துவிடும். வேந்தராக ஆளுநர் இருக்கும்போது அவரது பேச்சை எங்களால் எப்படித் தட்டிக்கழிக்க முடியும்... இதற்கான தீர்வு குறித்து மாநாட்டில் பேசப்படவேயில்லை. ஆளுநரை அடக்க வழி தெரியாமல், துணைவேந்தர்களைத் துன்புறுத்துகிறது இந்த அரசு. ஆளுநருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே மாட்டிக்கொண்டு மத்தளம்போல இருபக்கமும் அடி வாங்குகிறோம்” என்றனர் ஆதங்கத்துடன்.

கலாநிதி
கலாநிதி

இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கலாநிதியிடம் கேட்டபோது, “துணைவேந்தர்கள் மாநாடு என்ற பெயரில் ஆளுநரும் முதல்வரும் மோதிக் கொள்ள, பல்கலைக்கழகங்களைப் போர்க்களமாகப் பயன் படுத்திக்கொள்கிறார்கள் என்றே நான் கருதுகிறேன். பல்கலைக்கழகங்கள் யார் தலையீடும் இல்லாமல் சுயமாகச் செயல்பட்டால்தான் வளர்ச்சியடையும். நிர்வாகத்தை மட்டுமே அரசும் ஆளுநரும் கவனிக்க வேண்டும். தற்போதைய ஆட்சி யாளர்கள் தங்கள் கொள்கையைச் செயல்படுத்த பல்கலைக் கழகத்தை வற்புறுத்துகிறார்கள். ஒருவேளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய ஆட்சியாளர்கள் வந்தால், அவர்கள் கொள்கை யைச் செயல்படுத்தச் சொல்வார்கள். இப்படியே ஆட்சி மாறும் போதெல்லாம் கொள்கையை மாற்றினால், தமிழக உயர் கல்வியின் நிலைமை என்னவாகும்... இதைப் புரிந்துகொண்டு அரசும் ஆளுநரும் செயல்பட வேண்டும்” என்றார் விரக்தி யுடன்.

ஜெயப்பிரகாஷ் காந்தி
ஜெயப்பிரகாஷ் காந்தி

கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறுகையில், “கடந்த காலத்தில் துணைவேந்தர்களை ஆளுநர் நியமித்தாலும், அரசுடன் சுமுகமான உறவில் இருந்தனர். ஆனால், சமீபகால மாக அரசுக்கும் ஆளுநருக்கும் சுமுகமான போக்கு இல்லை. இதனால்தான் பல்கலைக்கழகங்களில் முழு அதிகாரம் செலுத்த அரசு முனைப்பு காட்டிவருகிறது. பல்கலைக்கழகங்களுக்கு அரசுதான் மொத்த நிதியும் கொடுக்கிறது. எனவே, மாநில அரசின் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்று அரசு எதிர்பார்ப்பதில் தவறில்லை. மாநில அரசின் கொள்கையைப் பல்கலைக்கழகங்கள் பின்பற்றி வருவதால், இந்தியாவிலேயே தமிழகம் உயர்கல்வி யில் சிறந்து விளங்குகிறது. ஆனால், பல்கலைக் கழகங்களில் அரசியலை யாரும் திணிக்கக் கூடாது. ஆளுநருக்கும் அரசுக்கும் ஏற்படும் போட்டி மாணவர்களைத்தான் பாதிக்கிறது” என்றார்.

எரிவதைப் பிடுங்காமல் கொதிப்பதை அடக்கப் பார்க்கிறது தமிழ்நாடு அரசு... விறகின் மீது பயமா?!