Published:Updated:

ஸ்ரீப்ரியா மீது கமல் அதிருப்தி; ம.நீ.ம-வில் உமாதேவி 'என்ட்ரி' பின்னணி!

விகடன் டீம்

முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி மெளரியா, ஐ.ஏ.எஸ் அதிகாரி பஷீர் அகமது உள்ளிட்டோருக்கும் பதவி வழங்கப்பட்டுள்ளது. கமலுக்கு நெருக்கமான டாக்டர் மகேந்திரன், துணைத் தலைவராகவே தொடர உள்ளார்.

kamal
kamal

மக்கள் நீதி மய்யம், கடந்த வாரம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் 'தமிழகத்தின் ஒவ்வொரு வாக்காளரையும் கட்சியின் பொறுப்பாளர்கள் சந்திக்கும்வண்ணம், புதிய பொறுப்புகள் அறிவிக்கப்படவுள்ளன. அதன் அடிப்படையில், ஆறு பொதுச்செயலாளர்கள் அடங்கிய பட்டியல் முதலில் வெளியிடப்படுகிறது' என்று அந்தப் பட்டியலை கமல்ஹாசன் வெளியிட்டிருந்தார். அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் குழு, மக்கள் நீதி மய்யத்துக்கு ஆலோசனை வழங்கி வந்தது. அதன் அடிப்படையிலேயே செயல்பாடுகள் தொடங்கியிருக்கின்றன. https://bit.ly/30lCQYY

ஏற்கெனவே மக்கள் நீதி மய்யத்தில் பொறுப்பில் இருந்த ஸ்ரீபிரியா மற்றும் கோவை சரளா ஆகியோரின் செயல்பாடுகள், கமலுக்கு திருப்தியளிக்கவில்லை என்கிறார்கள். இதனால் இந்த முறை அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பிரபல குடும்பத்தைச் சேர்ந்த உமாதேவி என்பவரை, பொதுச்செயலாளராக அறிவித்துள்ளார் கமல்.

Uma Devi
Uma Devi

"என்னுடைய தொழிற்சாலையில் ஏராளமான பெண்கள் வேலை செய்கிறார்கள். இதனால், பெண்களின் நிலையை நன்கு அறிவேன். அதைப் பற்றி தலைமைக்குச் சில கருத்துகளை அனுப்பியிருந்தேன். அதன் அடிப்படையில் எனக்கு இந்தப் பதவியைக் கொடுத்திருக்கலாம்" என்கிறார் உமாதேவி.

அதேபோல், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி மெளரியா, ஐ.ஏ.எஸ் அதிகாரி பஷீர் அகமது உள்ளிட்டோருக்கும் பதவி வழங்கப்பட்டுள்ளது. கமலுக்கு நெருக்கமான டாக்டர் மகேந்திரன், துணைத் தலைவராகவே தொடர உள்ளார். இன்னும் சில நாள்களில் வேறு சில அறிவிப்புகளும் வரவுள்ளன.

என்னுடைய தொழிற்சாலையில் ஏராளமான பெண்கள் வேலை செய்கிறார்கள். இதனால், பெண்களின் நிலையை நன்கு அறிவேன்.

இந்தச் சூழலில், 'ஆபரேஷன் 500' என்ற புதிய திட்டத்துடன் களத்தில் இறங்கியுள்ளது, நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம்.

நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான வாக்குகள் வாங்கிய கட்சி, அடுத்த சட்டமன்றத் தேர்தலில் இரண்டு திராவிட கட்சிகளுக்கும் மாற்றாக இருக்க வேண்டும் என்ற முடிவுடன் இந்தத் திட்டத்தை கையில் எடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள் கட்சி நிர்வாகிகள்.

- கிராமங்களைக் குறிவைக்கும் இந்தத் திட்டம் குறித்த ஜூனியர் விகடன் இதழின் செய்திக் கட்டுரையை முழுமையாக வாசிக்க > கமலின் ‘ஆபரேஷன் 500’ சக்சஸ் ஆகுமா? https://www.vikatan.com/government-and-politics/politics/kamal-haasan-new-strategy-for-makkal-needhi-maiam

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/