Election bannerElection banner
Published:Updated:

``ஆட்சியைப் பிடிப்போமா, தலைவரே?!" - ஸ்டாலினைத் திகைக்கவைத்த தி.மு.க நிர்வாகி

ஸ்டாலின்
ஸ்டாலின்

ஸ்டாலினிடம் அவர் நேரடியாக, 'நம் கட்சியினருக்கு ஆட்சியைப் பிடிப்போமா என்றே சந்தேகம் எழுந்துவிட்டது தலைவரே. கட்சியின் கட்டமைப்பைத்தான் இப்போது வலுப்படுத்த வேண்டும். அதற்கு பதிலாக இந்த நேரத்தில் மாவட்டங்களைப் பிரித்து மனஸ்தாபங்களை உருவாக்கிவிட்டீர்கள்

பணியாரங்களைச் சுவைத்தபடியே செய்திகளைத் தொடர்ந்த கழுகார், "கொங்கு மண்டல தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் அக்டோபர் 21-ம் தேதி அறிவாலயத்தில் நடந்தது.

கூட்டத்தில், 'ஒவ்வொரு தொகுதிக்கும் பத்தாயிரம் உறுப்பினர்களைச் சேர்க்கச் சொன்னது என்ன ஆனது?' என்று தலைமையிலிருந்து கேட்டிருக்கிறார்கள். சில நிர்வாகிகள் எழுந்து, 'ஓர் உறுப்பினர் அட்டை அடிப்பதற்கு ஆகும் செலவு 25 ரூபாய். கூடவே, முப்பெரும் விழாவுக்குப் பொற்கிழி வேறு கொடுக்கச் சொல்லிவிட்டீர்கள். செலவைத் தாங்க முடியலை தலைவரே...' என்று ஓப்பனாகச் சொல்லியிருக்கிறார்கள். இதுகூடப் பரவாயில்லை, கோவையைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் பேசியதுதான் ஹைலை

"ஸ்டாலினிடம் அவர் நேரடியாக, 'நம் கட்சியினருக்கு ஆட்சியைப் பிடிப்போமா என்றே சந்தேகம் எழுந்துவிட்டது தலைவரே. கட்சியின் கட்டமைப்பைத்தான் இப்போது வலுப்படுத்த வேண்டும். அதற்கு பதிலாக இந்த நேரத்தில் மாவட்டங்களைப் பிரித்து மனஸ்தாபங்களை உருவாக்கிவிட்டீர்கள். கூட்டம் நடத்தி எங்களிடம் கருத்து கேட்கிறீர்கள். அதற்குப் பிறகு எந்த நடவடிக்கையும் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்னர் புகார் பெட்டிவைத்து புகார்களைப் பெற்றீர்கள். அதைச் சரியாக விசாரித்து நடவடிக்கை எடுத்திருந்தாலே, கட்சியினர் உற்சாகமாகியிருப்பார்கள்" என்று வெண்கலச்சட்டியைச் சபையில் போட்டு உடைக்க... ஸ்தம்பித்துவிட்டாராம் ஸ்டாலின்."

கனிமொழி
கனிமொழி

"ஓஹோ..."

"அவர் பேசியதைக் கேட்டு உத்வேகம் பெற்ற மேலும் சில நிர்வாகிகள், 'வரும் தேர்தலில் ஓட்டுக்கு 2,000 ரூபாய்கூடத் தருவதற்கு அ.தி.மு.க தயாராக இருக்கிறது. அக்டோபர் 18-ம் தேதி சூலூர் தொகுதிக்கு உட்பட்ட நீலாம்பூரில் அ.தி.மு.க கொடியேற்றும் விழாவில் பேசிய அமைச்சர் வேலுமணி, 'எத்தனை ஸ்டாலின் வந்தாலும் நம்மை அசைக்க முடியாது' என்று பேசியிருக்கிறார்.

கொங்கு மண்டலத்தில் தி.மு.க-வை செயலிழக்கச் செய்யும் அனைத்து அஸ்திரங்களையும் தயார் செய்துவிட்டது வேலுமணி தரப்பு. ஆனால், நாம் அலட்சியமாக இருக்கிறோம்' என்று ஆவேசப்பட்டிருக்கிறார்கள். இதையெல்லாம் அமைதியாகக் கேட்டுக்கொண்ட ஸ்டாலின், 'இந்தத் தேர்தலில் ஓட்டுக்குப் பணம் கொடுத்தாலும் மக்கள் மனநிலை மாறாது. அதனால் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. நீங்கள் சொல்லும் பிரச்னைகளையெல்லாம் சரிசெய்துவிடுவோம்' என்று சமாதானம் செய்திருக்கிறார்.

ஆனாலும், ஒன்றியம், வட்டம் எல்லாம் துடுக்குத்தனமாகப் பேசியதில் ஸ்டாலின் அப்செட் என்கிறார்கள். இனி இது போன்ற கூட்டங்களில் கீழ்நிலைப் பொறுப்பிலிருப்பவர்களைப் பேசவைக்க வேண்டாம்; மேல்மட்ட நிர்வாகிகள் பேசினால் போதும் என்ற முடிவிலிருக்கிறதாம் கட்சித் தலைமை!"

> தேர்தலே வரவில்லை... அதற்குள் அமைச்சர் பதவிக்குப் போட்டி!"

> முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தி.க தலைவர் கி.வீரமணி மனம்விட்டுப் பேசினாராமே?"

> "சசிகலா விடுதலை எந்த நிலையில் இருக்கிறது?"

> 'விஜய் மக்கள் இயக்கம் தேவைப்பட்டால் அரசியல் கட்சியாக மாறும்' என்று எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டியளித்தன் பின்னணி?

> 2ஜி வழக்கின் மேல்முறையீடு விசாரணையும் பின்புல அரசியலும்...

- இந்த விவகாரங்கள் குறித்து கழுகார் தந்த தகவல்களை ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/3e2sBR7 > ஐந்து எம்.பி-க்களுக்கு குறி! - தி.மு.க-வை நெருக்கும் 'டெல்லி' https://bit.ly/3e2sBR7

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு