Published:Updated:

கடுகடுத்த ஸ்டாலின்... புலம்பிய கனிமொழி? - தி.மு.க புகைச்சல்கள்!

வைகோவை தி.மு.க-விலிருந்து நீக்கியதற்காகத் தீக்குளித்து உயிரிழந்த ஆறு பேரின் உருவப்படங்களும் மேடையில் திறக்கப்பட உள்ளன.

stalin
stalin

பி.ஜே.பி தரப்பு தி.மு.க மீது கடும் வருத்தத்தில் இருப்பதைக் கண்டு அதைச் சரிகட்ட முயற்சி செய்ததாம் சபரீசன் தரப்பு. தமிழக ஆளும் புள்ளிகளுக்கு நெருக்கமான மத்திய அமைச்சர் ஒருவரைச் சமீபத்தில் தொடர்புகொண்டு பேசியுள்ளதாம் சபரீசன் தரப்பு. ஆனால், 'தமிழ்நாட்டு விவகாரத்தில் இப்போது நான் அதிகம் தலையிடுவதில்லை' என்று அவர் சொல்ல, 'ப்யூஸ்' போன பல்பாக அடுத்து பெண் மத்திய அமைச்சர் ஒருவரைத் தொடர்புகொண்டுள்ளதாம் சபரீசன் தரப்பு. அவரும் பிடி கொடுக்கவில்லையாம். இந்த டென்ஷனில் வெளிநாட்டுக்குப் பறந்துவிட்டாராம் சபரீசன். அவர் திரும்பி வந்த பிறகே அடுத்தகட்ட ஆலோசனையில் இறங்கவுள்ளது தி.மு.க தலைமை. விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2kx557r

நான் என்ன கட்சிக்கு எதிராகவா செயல்படுகிறேன்? அவருக்குக் கட்டுப்பட்டுதானே இருக்கிறேன்' என்று

கனிமொழி தரப்புக்கு பி.ஜே.பி தரப்பிலிருந்து ஏதும் அழுத்தம் வருகிறதோ என்கிற சந்தேகம் ஸ்டாலின் தரப்புக்கு இருக்கிறதாம். 'கறுப்பு சிவப்பு கழகம்' என்ற அட்டைப்படக் கட்டுரையுடன் கடந்த ஜூ.வி இதழ் வெளியான அன்று, கனிமொழியும் ஸ்டாலினும் சிவகாசிக்குத் திருமணம் ஒன்றுக்குச் சென்றுள்ளனர். திருமண மண்டபத்தில் வைத்தே கனிமொழியிடம் கடுகடுவென பேசினாராம் ஸ்டாலின். 'எதற்காக என்மீது அண்ணன் இத்தனை கோபமாக இருக்கிறார்? நான் என்ன கட்சிக்கு எதிராகவா செயல்படுகிறேன்? அவருக்குக் கட்டுப்பட்டுதானே இருக்கிறேன்' என்று தனக்கு நெருக்கமான ஒரு பெண் நிர்வாகியிடம் கனிமொழி புலம்பினாராம்.

இதனிடையே, "ம.தி.மு.க நடத்தும் அண்ணா பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் கலந்துகொள்ளவுள்ளார். வைகோவை தி.மு.க-விலிருந்து நீக்கியதற்காகத் தீக்குளித்து உயிரிழந்த ஆறு பேரின் உருவப்படங்களும் மேடையில் திறக்கப்பட உள்ளன. 'ஸ்டாலினின் வளர்ச்சிக்காகத்தான் வைகோவைக் கட்சியைவிட்டு நீக்கினார்கள். அதனால்தான், இந்த ஆறு பேர் தீக்குளித்து உயிர் துறந்தனர். இப்போது ஸ்டாலினையே மேடையேற்றி, ஆறு பேரின் உயிர்த் தியாகத்தை அர்த்தம் இல்லாமல் செய்யப் பார்க்கிறார் வைகோ' என்று புகைச்சல் எழுந்துள்ளது.

வைகோ
வைகோ

- வேலூர் எம்.பி-யாகியுள்ள கதிர் ஆனந்த், தென்னக ரயில்வேயின் சென்னை கோட்டத்துக்கான நாடாளுமன்றக் குழுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதன் பின்னணி அரசியல், திகார் சிறையிலிருக்கும் சிதம்பரத்துக்கு அதிகரிக்கும் சிக்கல்கள், எடப்பாடியின் அணுகுமுறையில் அதிருப்தியில் இருக்கும் அமைச்சர்கள், பி.ஜே.பி-யை வலுப்படுத்துவதற்காக, மாற்றுக் கட்சியில் இருந்து முக்கியப் பிரமுகர்களை இழுக்கும் படலம் முதலான உள்ளரசியல் விவகாரங்களை, ஜூனியர் விகடன் கழுகார் பகுதியில் விரிவாக வாசிக்க > மிஸ்டர் கழுகு: தனி ரூட் துரைமுருகன்... தலைமையிடம் போட்டுக் கொடுத்த டீம்! https://www.vikatan.com/government-and-politics/politics/duraimurugan-in-trouble-over-acting-independently

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/