Published:Updated:

'உங்களில் ஒருவன்’ புத்தக வெளியீடு: ராகுலை மீண்டும் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவாரா ஸ்டாலின்?

ஸ்டாலின் - ராகுல் காந்தி

'உங்களில் ஒருவன்’ புத்தக வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தியை மீண்டும் பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றனவா..?

'உங்களில் ஒருவன்’ புத்தக வெளியீடு: ராகுலை மீண்டும் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவாரா ஸ்டாலின்?

'உங்களில் ஒருவன்’ புத்தக வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தியை மீண்டும் பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றனவா..?

Published:Updated:
ஸ்டாலின் - ராகுல் காந்தி

`உடன்பிறப்பே’ என்கிற தலைப்பில் கருணாநிதி, தான் உயிரோடு இருந்தவரை, முரசொலி பத்திரிகையில் தொண்டர்களுக்குக் கடிதம் எழுதிவந்தார். அதைப் பின்பற்றி முதல்வர் ஸ்டாலின், ‘உங்களில் ஒருவன்’ என்ற தலைப்பில் முரசொலியில் தொண்டர்களுக்குக் கடிதம் எழுதிவந்தார். தற்போது அதே தலைப்பை தனது புத்தகத்துக்குச் சூட்டியிருக்கிறார் ஸ்டாலின்.

உங்களில் ஒருவன்! கடிதம் எழுதும் ஸ்டாலின்
உங்களில் ஒருவன்! கடிதம் எழுதும் ஸ்டாலின்

இதற்கு ராகுல் காந்தியை அழைத்த நோக்கம் என்ன... மீண்டும் பிரதமர் வேட்பாளராக ராகுல் அறிவிக்கப்பட வாய்ப்பிருக்கிறதா என்று தி.மு.க சீனியர் நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். ``2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த கருணாநிதி மற்றும் அண்ணாசிலை திறப்புவிழாவில் ராகுலும் சோனியாவும் கலந்துகொண்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கருணாநிதி சிலை திறப்புவிழாவில் ராகுல், சோனியா
கருணாநிதி சிலை திறப்புவிழாவில் ராகுல், சோனியா

அப்போதுதான் ``ராகுலே வருக... தலைமையேற்க வருக...” என்று பிரதமர் வேட்பாளராக ராகுலை அறிவித்தார் ஸ்டாலின். காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே யாரும் பேசாத ஒன்றை, ஸ்டாலின் பேசியது அப்போது மிகப்பெரிய விஷயமாகப் பேசப்பட்டது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அது தேர்தல் நெருக்கத்தில் நடந்த விழா என்பதால் அப்படிப் பேசியிருந்தார் ஸ்டாலின். எனினும், காங்கிரஸ் தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டது. அதனால், மீண்டும் ஒரு விஷப்பரீட்சையில் இறங்க ஸ்டாலின் தயாரில்லை என்கிறார்கள். அதேநேரம் இது தேர்தல் காலமும் அல்ல. கூட்டணிக் கட்சி என்பதால் ராகுலைவைத்து முதல் பாகத்தை வெளியிடுகிறார். இப்புத்தகத்தில் ஸ்டாலினின் 23-வது வயது வரையிலான வரலாறுகள் இடம்பெற்றிருக்கின்றன. அடுத்த இரண்டாவது பாகத்தை மற்றொரு தேசியப் பிரபலத்தை வைத்து வெளியிட முடிவுசெய்திருக்கிறார். அநேகமாக அது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியாகக்கூட இருக்கலாம்.

மம்தா
மம்தா

பா.ஜ.க-வுக்கு எதிரான நான்கு தேசியத் தலைவர் வருகை தருவதால், ஒவ்வொருவரின் பேச்சும் சிறப்பு கவனம் பெறும். இறுதியாக ஏற்புரை வழங்கும் ஸ்டாலின் கண்டிப்பாக பா.ஜ.க-வை ஒரு பிடி பிடிக்காமல் விட மாட்டார் என்றே தோன்றுகிறது!” என்று முடித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தி.மு.க செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் கேட்டபோது, ``ராகுலை அழைக்க நோக்கம் எதுவும் தேவையில்லை. அவர் அகில இந்தியத் தலைவராக இருக்கிறார். ஏற்கெனவே கருணாநிதி சிலை திறப்பு விழாவின்போது ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் வந்திருந்தனர். கருணாநிதி இருந்தபோதும், அதன் பிறகும் சரி, தி.மு.க-வில் நடக்கும் முக்கியமான நிகழ்ச்சிகளில் அவர்கள் பங்கெடுப்பது வழக்கம். அதையொட்டித்தான் ராகுலும் கலந்துகொள்கிறார். மற்றபடி இதில் உள்நோக்கம் எதுவும் கிடையாது.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

தேசிய அளவில் நகர்வதற்கான நிகழ்வா என்றுகூட சிலர் கேட்கிறார்கள். நாங்கள் என்ன தேசிய அளவில் இல்லாமலா இருக்கிறோம்? ஒரே மாநிலத்துக்குள்ளேயேவா சுற்றிக் கொண்டிருக்கிறோம். ’ஸ்டாலின் துணைப் பிரதமர் ஆவதற்கு முயல்கிறார்’ என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை சொல்கிறார். அவருக்கொன்று சொல்லிக்கொள்கிறேன்.

நாங்கள் நினைத்தால் பிரதமராகக்கூட ஆவோம். அண்ணாமலையை முதலில் கவுன்சிலராக ஜெயிக்கச் சொல்லுங்கள். ஒரு தலைவரைப் பற்றிப் பேசும்போது, அவரும் ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் என்கிற அந்தஸ்தில் பேச வேண்டும், இல்லை தனக்கென்று ஒரு தகுதியையாவது உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

கருணாநிதி சிலை திறப்புவிழா
கருணாநிதி சிலை திறப்புவிழா

கருணாநிதி சிலை திறப்புவிழா நடந்த சமயம் தேர்தல் காலம். நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளிவரக்கூடிய நேரம் என்பதால் அப்போது ராகுலைப் பிரதமர் வேட்பாளர் என்று ஸ்டாலின் அறிவித்தார். இப்போது அது மாதிரி எந்தச் சூழ்நிலையும் இல்லை. தேர்தலுக்கும் நெடுங்காலம் உள்ளதால், அது போன்ற எந்த அறிவிப்பையும் எதிர்பார்க்க முடியாது” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism