Published:Updated:

`சிவசேனாவுக்கு துணை நின்றது ஏன்..?’- 1978, 2001 ரெஃபரன்ஸ்களுடன் பதிலளித்த ஸ்டாலின்

உத்தவ் தாக்கரே, ஸ்டாலின்
உத்தவ் தாக்கரே, ஸ்டாலின்

மாநிலக் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கம், மீண்டும் மீண்டும் இந்திய அரசியலின் தவிர்க்க முடியாத ஆற்றல் மிகுந்த சக்தியாக விளங்குகிறபோது, அன்பான எதிரிகளான அரசியல் பிரமுகர்கள் சும்மா இருப்பார்களா?

மகாராஷ்டிராவில் அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கிய அரசியல் பரபரப்பு நவம்பர் மாதம் இறுதிவரை தொடர்ந்தது. தற்போது சிவசேனா - என்.சி.பி - காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியேற்ற பின்னர் அங்கு பரபரப்பு குறைந்துள்ளது. எனினும் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்ற விழாவுக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் சென்றது தொடர்பாக தமிழக அரசியலில் விமர்சனங்கள் எழுந்தன.

பட்னாவிஸ், உத்தவ் தாக்கரே
பட்னாவிஸ், உத்தவ் தாக்கரே

சித்தாந்தங்களின் அடிப்படையில் சிவசேனாவும் பா.ஜ.க-வும் ஒரே கொள்கைகளைக் கொண்ட கட்சி. அப்படி இருக்க சிவசேனாவைச் சேர்ந்த ஒருவர் பதவியேற்கும் நிகழ்வுக்கு ஸ்டாலின் சென்றது எப்படி முறையாகும் என கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவுக்கு தான் சென்றது தொடர்பான விளக்கத்தை அளித்துள்ளார்.

``மகாராஷ்டிராவுக்கு தமிழ்நாட்டின் சார்பில், தி.மு.கழகத்தின் தலைவர் என்ற முறையில் சென்றிருந்த உங்களில் ஒருவனான எனக்கு, மேடையில் நடுநாயகமாக அமரும் வாய்ப்பைத் தந்தனர். அது தனிப்பட்ட எனக்கானது அல்ல; ஜனநாயகம் காக்கும் போரில் சமரசமின்றிப் பங்கேற்கும் தி.மு.க எனும் மகத்தான பேரியக்கத்துக்கு அளிக்கப்பட்ட மரியாதை!

முதல்வர் பொறுப்பேற்ற சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேக்கு நான் வாழ்த்து தெரிவித்தபோது, அவரும் என் மீது தனிப்பட்ட அன்பு செலுத்தினார். அப்போது, மராட்டிய மாநிலத்தில் வாழும் 10 லட்சம் தமிழர்களின் நலன் காக்கும் வகையில் செயல்பட அவரிடம் வேண்டுகோள் விடுத்தேன்.

தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின்
தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின்
தே.சிலம்பரசன்

மாநிலக் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கம், மீண்டும் மீண்டும் இந்திய அரசியலின் தவிர்க்க முடியாத ஆற்றல் மிகுந்த சக்தியாக விளங்குகிறபோது, அன்பான எதிரிகளான அரசியல் பிரமுகர்கள் சும்மா இருப்பார்களா?

இந்துத்வா கொள்கைகொண்ட சிவசேனாவை தி.மு.க ஆதரிப்பதா? மராட்டியத் தமிழர்களுக்கு எதிராகச் செயல்பட்ட பால்தாக்கரே அவர்களின் கட்சிக்குத் துணை நிற்பதா? எனக் கேள்விக் கணைகள் பாய்கின்றன.

மாநிலக் கட்சிகளாக இருந்தாலும், கொள்கைரீதியாக தி.மு.க-வும் சிவசேனாவும் மாறுபட்டவை. `பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற அடிப்படையில் அனைத்து மதத்தினர் - சாதியினருக்குமான சமத்துவத்தை நிலைநாட்டும் சமூகநீதிதான் தி.மு.க-வின் கொள்கை. அதேநேரத்தில், ஜனநாயகத்தின் கழுத்தில் கொடுவாள் பாய்ச்சப்படும்போதும், குதிரைபேரத்தால் ஜனநாயகத்துக்குப் புதைகுழி தோண்டப்படும்போதும், மாநில உரிமைகளைப் பாதுகாத்து, ஜனநாயகத்தை மீட்டெடுத்திட தார்மீக ஆதரவை வழங்குவது என்பதே தி.மு.க-வின் நிலைப்பாடு.

பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் தி.மு.க அங்கம் வகித்தது. அப்போதும் இதுபோன்ற விமர்சனங்கள் வெளிப்பட்டன. ஆனால், தி.முக. ஒருபோதும் பா.ஜ.க வழியில் செல்லவில்லை. பா.ஜ.க-வின் குறிக்கோள்களாக இருந்த ராமர் கோயில் கட்டுவது, 370-வது பிரிவு நீக்கம், பொதுசிவில் சட்டம் ஆகியவற்றை ஓரங்கட்டச்செய்து, மாநிலங்களின் வளர்ச்சி அடிப்படையிலான குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தை உருவாக்கி அதனடிப்படையில்தான் வாஜ்பாய் அரசை ஆதரித்து, அதில் தி.மு.க பங்கேற்றது.

`சிவசேனாவுக்கு துணை நின்றது ஏன்..?’- 1978, 2001 ரெஃபரன்ஸ்களுடன் பதிலளித்த ஸ்டாலின்

இப்போது மராட்டியத்திலும் சிவசேனாவின் கொள்கைகளுக்கு நேரெதிர் கட்சிகளான தேசியவாத காங்கிரஸும், இந்திய தேசிய காங்கிரஸும், மாநிலத்தின் உரிமைகளைக் காத்திடவும், மாநில மக்களின் நலனைக் கருத்திற்கொண்டும் குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் இணைந்து மதச்சார்பற்ற ஆட்சி அமைத்துள்ளன. மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரேக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியிலும், ``மராட்டிய மாநிலத்துக்கான ஒருங்கிணைந்த வளர்ச்சி (inclusive growth) மற்றும் ஒட்டுமொத்த முன்னேற்றத்தை (overall development) சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வழங்கும் என நம்புகிறேன்” எனத் தெளிவாகத் தெரிவித்துள்ளேன்.

சிவசேனா கட்சி தொடங்கப்பட்டபோது, அது, `மராட்டிய மண்ணின் மைந்தர்' முழக்கத்துடன், அம்மாநிலத்தில் வாழ்ந்த தமிழர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய காலமாக இருந்தது. தாக்குதல்களும் நடைபெற்றிருக்கின்றன. கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, பிற மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டால், தமிழ்நாட்டில் வாழும் வடஇந்தியர்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் அபாயச் சூழலை விளக்கி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினார். அதன்பிறகு, மராட்டியம் உட்பட பல மாநிலங்களிலும் தமிழர்கள் மீதான தாக்குதல் கட்டுப்படுத்தப்பட்டது.

`சிவசேனாவுக்கு துணை நின்றது ஏன்..?’- 1978, 2001 ரெஃபரன்ஸ்களுடன் பதிலளித்த ஸ்டாலின்

அதுமட்டுமல்ல, 1978-ல் தமிழகத்தின் எதிர்க்கட்சித்தலைவராக இருந்தபோது கலைஞர் மும்பை சென்றார். மும்பைக்குச் செல்கின்ற அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும், பால்தாக்கரே அவர்களை வீடு தேடிச் சென்று சந்திப்பதுதான் வழக்கம். ஆனால், பால்தாக்கரே, கருணாநிதி தங்கியிருந்த ஓபராய் ஓட்டலுக்கு நேரில் வந்து சந்தித்து உரையாடினார். மாநில உரிமைகள் தொடர்பாக கருணாநிதி கடைப்பிடித்த உறுதியான நிலைப்பாட்டினைப் பாராட்டினார். மராட்டியத் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில் அந்தச் சந்திப்பு அமைந்தது.

2001-ம் ஆண்டு கருணாநிதி நள்ளிரவில் சட்டத்துக்குப் புறம்பாக கைது செய்யப்பட்டபோது, அதைக் கண்டித்தவர் பால்தாக்கரே. சிவசேனாவின் `சாம்னா' பத்திரிகையிலும் அந்தக் கைதைக் கண்டித்து செய்தி வெளியிடப்பட்டது.

அடிப்படைக் கொள்கைகளில் பல வேறுபாடுகள் இருந்தாலும், ஜனநாயகத்தின் மாண்பையும் மாநிலத்தின் நலன்களையும் பாதுகாப்பதற்கான புதிய தொடக்கமாக அமைந்திருக்கிறது மராட்டிய உறவு. அதிகாரக் கொம்பில் தொங்கிக்கொண்டு ஜனநாயகப் பூமாலையைப் பிய்த்தெறிய நினைத்த பிற்போக்கு சக்திகளிடமிருந்து அதைப் பத்திரமாக மீட்டெடுத்திருக்கிறது, மராட்டிய முதல்வர் பதவியேற்பு விழா.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தி.மு.கழகம் அதில் பங்கேற்றதும், அதற்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்கப்பட்டதும்; ஜனநாயகம் காக்கும் தொடர்ச்சியான போரில் தி.மு.க எப்போதும் இந்தியாவுக்கு வழிகாட்டும் இயக்கம் என்ற பெருமிதத்தால்தான்!” எனக் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு