Election bannerElection banner
Published:Updated:

`யூனியன் அரசாங்கம்; கூட்டாட்சி’ - பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் சொன்ன நன்றியில் குறியீடா?!

ஸ்டாலின், மோடி
ஸ்டாலின், மோடி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறி ட்வீட் போட்டார். அதற்கு பதிலளித்து ஸ்டாலின் பதிவிட்டுள்ள ட்வீட்டிலுள்ள வார்த்தைகளில் உள்ளரசியல் ஒளிந்திருக்கிறது.

2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று, தி.மு.க ஆட்சியமைக்கவிருக்கிறது. மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடியாதபோதே மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீத்தாராமன் போன்றோர் ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறினர். தொடர்ந்து பல்வேறு தேசியத் தலைவர்களும் வாழ்த்துகளைக் கூற ஒவ்வொருவருக்கும் பதில் அனுப்பிய ஸ்டாலின், அனைத்து ட்வீட்டிலும் சமூகநீதி, மதச்சார்பின்மை, சம உரிமை, மாநில சுயாட்சி போன்ற வார்த்தைகளையே பயன்படுத்தினார்.

ஸ்டாலின் ட்வீட்
ஸ்டாலின் ட்வீட்

இரவு 7:33 மணிக்கு பிரதமர் மோடி ஸ்டாலினுக்கு ட்விட்டரில் வாழ்த்து கூறினார். அவருக்கு பதிலளித்து ஸ்டாலின் வெளியிட்ட நன்றி அறிவிப்பு ட்வீட்டில், சில குறியீடுகள் இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள் திமுக-வினர். அதாவது பிரதமரின் வாழ்த்துக்கு நன்றி கூறிவிட்டு, ``I look forward to working with the Union Government to fulfill aspirations of the State” என்று பதிவிட்டுள்ளார். `Central Government ’அதாவது மத்திய அரசு என்று சொல்லாமல், `Union Government’ அதாவது ஐக்கிய அரசு என்று சொல்லியிருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறதாம்.

இது குறித்துப் பேசிய தி.மு.க-வினர், ``மத்திய அரசு என்பது அனைத்து அதிகாரங்களையும் ஒற்றை இடத்தில் குவித்திருக்கும் அரசு என்று இல்லாமல், ஐக்கிய அரசு என்பதன் மூலம் பலவகையான மாநிலங்கள் அடங்கிய ஐக்கிய இந்தியாவை ஆட்சி செய்யும் அரசு என்ற பொருள்படும் வகையில் பதிவிட்டுள்ளார். Through federal co-operation என்கிற வார்த்தை மூலம் கூட்டாட்சியின் மூலம் கொரோனாவை வெல்வோம் என்று பதிலளித்துள்ளார். எந்த ஒரு நிலையிலும் மத்திய அரசுக்கு அடிபணியாத அரசை நடத்திச் செல்வேன் என்பதை மறைமுகமாகப் பதிவிட்டிருக்கிறார் ஸ்டாலின்” என்கிறார்கள். சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் சிலரும் இந்தக் கருத்துகளைப் பகிர்ந்துவருகிறார்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு