Published:Updated:

அம்மா மறைஞ்ச பிறகு எல்லாம் கானல் நீராகிடுச்சு! - ஆதங்கத்தில் கழகப் பேச்சாளர்கள்...

அ.தி.மு.க
பிரீமியம் ஸ்டோரி
அ.தி.மு.க

சுதாரிக்குமா அ.தி.மு.க?

அம்மா மறைஞ்ச பிறகு எல்லாம் கானல் நீராகிடுச்சு! - ஆதங்கத்தில் கழகப் பேச்சாளர்கள்...

சுதாரிக்குமா அ.தி.மு.க?

Published:Updated:
அ.தி.மு.க
பிரீமியம் ஸ்டோரி
அ.தி.மு.க
தேர்தல் திருவிழா களைகட்ட ஆரம்பித்துவிட்டது. தலைவர்களின் பிரசாரச் சுற்றுப்பயணங்கள் டாப் கியரில் வேகமெடுத்திருக்கின்றன. ரேஷன் கடை தொடங்கி, கட்சி அலுவலகங்கள் வரை கரன்ஸிமழை பொழிகிறது. ஆனால், ஒருகாலத்தில் பேசிப் பேசியே கழகங்களை வளர்த்த பேச்சாளர்கள்தான் பாவம், சுணங்கிப் போயிருக்கிறார்கள். அதிலும், ஆளுங்கட்சியான அ.தி.மு.க பேச்சாளர்களின் நிலைமையோ பரிதாபமாக இருக்கிறது!
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ராயப்பேட்டை கட்சி அலுவலகம், கோட்டை என அ.தி.மு.க வட்டாரங்களில் வலம்வந்து கழகப் பேச்சாளர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘நம்ம கட்சியில நட்சத்திரப் பேச்சாளர்கள், சாதாரண பேச்சாளர்கள், கலைக்குழுவினர்னு மூணு வகைப் பேச்சாளர்களையும் சேர்த்து மொத்தம் 1,100 பேர் இருக்காங்க. இங்கே இருக்குற கட்சிகள்லயே அதிக பேச்சாளர்களைக்கொண்ட கட்சியும் அ.தி.மு.க-தான். ஆனா, இப்போ பேச்சாளர்களெல்லாம் பிச்சைக்காரங்க மாதிரி ஆகிட்டோம். வழக்கமா அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பிறந்தநாள்களுக்குப் பொதுக்கூட்டங்கள் நடக்கும். இது போக கழக ஆண்டுவிழா, கழக சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்னு வருஷத்துக்கு அஞ்சு கூட்டங்களை நடத்துவாங்க. இதுதான் எங்களை மாதிரியான கழகப் பேச்சாளர்களுக்கு வாழ்வாதாரம். அம்மா மறைஞ்ச பிறகு எல்லாம் கானல் நீராகிடுச்சு. அந்தக் கூட்டங்களையெல்லாம் உருப்படியா நடத்தறதில்லை.வைகைச்செல்வன்

வைகைச்செல்வன்
வைகைச்செல்வன்

அது மட்டுமா... அம்மா உயிரோட இருக்கறப்போ பேச்சாளர்களுக்கு பொங்கல், தீபாவளிக்கு வேட்டி, சட்டை, ஆளுக்கேத்த மாதிரி அஞ்சாயிரம் தொடங்கி முப்பதாயிரம் வரைக்கும் பணம்னு சிறப்பா கவனிப்பாங்க. ஆனா, இப்போ அதுவும் இல்லாமப்போச்சு. கொரோனா காலத்துல மட்டும் பத்தாயிரம் ரூபாய் உதவித்தொகையா கொடுத்தாங்க. இந்த ஒரேயொரு வேலையை மட்டுமே நம்பியிருக்கும் எங்களுக்குப் பத்தாயிரம் ரூபாய் எத்தனை நாளைக்கு வரும் சொல்லுங்க...

டிசம்பர் 27-ம் தேதி, அ.தி.மு.க-வோட தேர்தல் பிரசாரம் அதிகாரபூர்வமா தொடங்கப்பட்டுச்சு. அந்த நிகழ்ச்சிக்குக் கழகப் பேச்சாளர்கள் யாருக்கும் அழைப்பு இல்லை. விந்தியா, நாஞ்சில் பி.அன்பழகன், மனோபாலா, கவிஞர் முத்துலிங்கம், சிங்கமுத்துனு ஸ்டார் பேச்சாளர்கள் பலர் இருந்தும், ஒருத்தரையும் முன்வரிசையிலகூட அமரவைக்கலை. அம்மா இருந்தப்போ பேச்சாளர்களை மதிச்சார். அதனாலதான் ராமராஜன், எஸ்.எஸ்.சந்திரன் ரெண்டு பேருக்கும் ராஜ்யசபா எம்.பி பதவியளிச்சு அங்கீகாரம் கொடுத்தார். ஆனா இப்போ, எங்க வாழ்க்கையில ஒருவேளை சோத்துக்கே கஷ்டப்படுற நிலையைக் கழகம் உருவாக்கி வெச்சிருக்கு.

2019 நாடாளுமன்ற தேர்தலப்போ, கழகப் பேச்சாளர்கள் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுச்சு. அந்தப் பட்டியல்ல உள்ளவங் களுக்குத்தான் ஆணையத்தோட பாஸ் வழங்கப்பட்டு, பல்வேறு மாவட்டங்கள்ல பிரசாரம் செய்ய அனுமதிக்கப்படுவாங்க. 40 பேர் கொண்ட பட்டியல்ல அமைச்சர்கள் எல்லோரோட பேரும் இடம்பிடிச்சுடுச்சு. மீதியுள்ள இடங்கள்ல சீனியர்களுக்கு ஒதுக்கப்பட்டதுபோக, ஒண்ணு ரெண்டு பாஸ்கள்தான் பேச்சாளர்களுக்குக் கிடைச்சுது. ஆனா... அந்தத் தேர்தல்ல, அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், பெஞ்சமின், கே.பி.அன்பழகன் போன்றவங்க பிரசாரத்துக்கு வெளியே வரவே இல்லை. மாவட்ட அரசியலை கவனிக்கவே அவங்களுக்கு நேரமில்லாதப்போ, வெற்று கௌரவத்துக்காக பாஸ்களை வாங்கி அமைச்சர்கள் வீணடிச்சதுதான் மிச்சம். துடிப்போட செயல்படுற கழகப் பேச்சாளர்களுக்கு இந்த பாஸ்கள் வழங்கப்பட்டிருந்தா, அ.தி.மு.க-வோட செயல்திட்டங்களை மக்கள்கிட்ட கொண்டுபோய் சேர்த்திருப்பாங்க. வறுமையில வாடுற அவங்களுக்கும் உபயோகமா இருந்திருக்கும். இந்தமுறையும் அதுபோல நடந்துடுமோனு பயமா இருக்கு.

அம்மா மறைஞ்ச பிறகு எல்லாம் கானல் நீராகிடுச்சு! - ஆதங்கத்தில் கழகப் பேச்சாளர்கள்...

கொள்கையைப் பேசின காலங்கள் போய், வெற்றுக் கூச்சல் போடும் மேடையா அ.தி.மு.க மேடை மாறிடுச்சு. தலைமை சுதாரிக்கலைன்னா, தேர்தல் நேரத்துல தி.மு.க-வோட தர்க்கரீதியிலான தாக்குதலை எதிர்கொள்றது கடினம்’’ என்றவர்கள், இன்னொரு விஷயத்தையும் சுட்டிக்காட்டினார்கள்.

‘‘தி.மு.க-வுல 340 பேச்சாளர்கள் இருக்காங்க. இவங்களுக்கு கொரோனா காலத்துல ரெண்டு முறை உதவித்தொகை அளிக்கப்பட்டதோட, பொங்கல் பரிசா அஞ்சாயிரம் ரூபா வழங்கப்பட்டிருக்கு. திருப்பூர் கூத்தரசன், பெரம்பூர் கந்தன் வாரிசுகளுக்கு பி.ஆர்.ஓ பணிகளும், வெற்றிகொண்டான், கண்மணி தமிழரசன் வாரிசுகளுக்கு மருத்துவப் படிப்புக்கான சீட்களும் தி.மு.க ஆட்சிக்காலத்துல வழங்கப் பட்டிருக்கு. பேச்சாளர்களோட குடும்பங்களைக் கைதூக்கிவிடுவது போல அ.தி.மு.க எதுவும் செய்யலை’’ என்று குமுறியவர்களின் ஆதங்கத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது.

கழகப் பேச்சாளர்களின் மனக்குமுறலுக்கு என்ன பதில் வைத்திருக்கிறது அ.தி.மு.க? கட்சியின் அமைப்புச் செயலாளர் வைகைச்செல்வனிடம் பேசினோம். “அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், மாவட்டப் பேச்சாளர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். கொரோனா காலம் என்பதால், பொதுக்கூட்டங்களை நடத்த முடியவில்லை. இப்போது பேச்சாளர்கள் வகைப்படுத்தப்பட்டு, தெருமுனைக் கூட்டங்களை நடத்துவதற்கான பட்டியல் தயாராகிறது. அவர்களுக்கு என்ன மனக்குறை இருந்தாலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வத்தைச் சந்தித்து முறையிடலாம். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்துதான் வருகிறோம்’’ என்றார்.

அ.தி.மு.க., தி.மு.க இரண்டுமே தமிழகத்தில் பேசிப் பேசியே வளர்ந்த கட்சிகள். வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமுகம் போன்றோருக்குப் பெரிய ரசிகப் பட்டாளமே தமிழகத்தில் இருந்தது. இன்று பேச்சாளர்களை வெறும் துதிபாடும் கூட்டமாக மட்டுமே இரண்டு கட்சிகளும் மாற்றிவைத்திருக்கின்றன. சித்தாந்த ரீதியிலான போருக்குக் கழகப் பேச்சாளர்களைத் தயார்படுத்த வேண்டியதும், அவர்களின் வாழ்வாதாரத்துக்கு உத்தரவாதம் தருவதும் கழகங்களின் பொறுப்புதானே!