Published:Updated:

பெட்ரோல், டீசல் விலை: ``தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் வாட் வரியைக் குறைக்கவில்லை” - பிரதமர் மோடி

முதல்வர்கள் கூட்டத்தில் மோடி

வாட் வரியைக் குறைக்காமல் மாநில அரசுகள் மக்களுக்குக் கூடுதல் சுமை ஏற்படுத்தியுள்ளதாகப் பிரதமர் மோடி கருத்து தெரிவித்திருக்கிறார்.

பெட்ரோல், டீசல் விலை: ``தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் வாட் வரியைக் குறைக்கவில்லை” - பிரதமர் மோடி

வாட் வரியைக் குறைக்காமல் மாநில அரசுகள் மக்களுக்குக் கூடுதல் சுமை ஏற்படுத்தியுள்ளதாகப் பிரதமர் மோடி கருத்து தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
முதல்வர்கள் கூட்டத்தில் மோடி

இந்தியாவில் அதிகரித்துவரும் கொரோனா பரவல் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் இன்று காணொலி வழியாக ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "6 வயது முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு நாளை முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கவிருக்கிறது. எனவே கொரோனாவுக்கு எதிராக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

இந்த அமர்வில் மிக முக்கியமான மற்றொரு செய்தியையும் பேச வேண்டும். அதுதான் பெட்ரோல், டீசல் விலை உயர்வு. நாட்டில் தற்போது அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதற்கு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு கலால் வரியைக் குறைத்திருக்கிறது.

மாநில அரசுகளும் இதேபோல பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியைக் குறைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தோம். இதன் அடிப்படையில் சில மாநிலங்கள் வாட் வரியைக் குறைத்துள்ளன. அதனால் உத்தரப்பிரதேசத்தில் தற்போது பெட்ரோல் விலை அதிகபட்சம் ரூ.103 முதல் 105 ரூபாய் வரைதான் உள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெட்ரோல்
பெட்ரோல்

ஆனால், மத்திய அரசின் வார்த்தைக்குச் செவி சாய்க்காத சில மாநிலங்கள், மத்திய அரசின் கோரிக்கையான வாட் வரியைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றவில்லை. இதனால் பெட்ரோல் விலை ரூ.110-ஐ கடந்து விற்கிறது. மத்திய அரசின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காமல் குடிமக்களுக்குக் கூடுதல் சுமையை மாநில அரசுகள் சுமத்திவருகின்றன. நான் யாரையும் விமர்சிக்கவில்லை, ஆனால் மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், தெலங்கானா, ஆந்திரா, கேரளா, ஜார்க்கண்ட், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இப்போது வாட் வரியைக் குறைத்து மக்களுக்கு நன்மைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

எனவே, உங்களால் முடியுமானால் உடனடியாக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியைக் குறையுங்கள். ஏனென்றால், மத்திய அரசு மீது சில மாநில அரசுகள் தொடர்ச்சியாக விலை உயர்வு தொடர்பான குற்றச்சாட்டை முன்வைக்கின்றன" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism