Published:Updated:

``என் தந்தையின் படத்தை வைத்து ஓட்டு யாசகம் பெறுவதை நிறுத்துங்கள்” - உத்தவ் தாக்கரே சாடல்

ஏக்நாத் ஷிண்டே - உத்தவ் தாக்கரே

``சொந்தப் பெற்றோரின் புகைப்படங்களை ஓட்டு வங்கிக்குப் பயன்படுத்துங்கள்” என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்திருக்கிறார்.

``என் தந்தையின் படத்தை வைத்து ஓட்டு யாசகம் பெறுவதை நிறுத்துங்கள்” - உத்தவ் தாக்கரே சாடல்

``சொந்தப் பெற்றோரின் புகைப்படங்களை ஓட்டு வங்கிக்குப் பயன்படுத்துங்கள்” என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
ஏக்நாத் ஷிண்டே - உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தபோது கொரோனா தொற்று கடுமையாக இருந்தது. அதோடு உத்தவ் தாக்கரேயும் உடல்நலம் பாதிக்கப்பட்டார். இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே கட்சியை இரண்டாக உடைத்து, பாஜக-வோடு இணைந்து ஆட்சியமைத்திருக்கிறார். தற்போது யாரின் அணி உண்மையான சிவசேனா என்ற போட்டி எழுந்திருக்கிறது. இரு தரப்பினரும் தேர்தல் கமிஷனில் மனு கொடுத்துள்ளனர். இந்த நிலையில் உத்தவ் தாக்கரே கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான சாம்னாவின் நிர்வாக ஆசிரியர் சஞ்சய் ராவத்துக்கு சிறப்புப் பேட்டி கொடுத்திருக்கிறார் உத்தவ் தாக்கரே. அதில் பல்வேறு பிரச்னைகள் குறித்துப் பேசியியிருக்கிறார். பேட்டியில் ``எனது அரசு போய்விட்டது. முதல்வர் பதவியும் போய்விட்டது. அதற்காக நான் வருத்தப்படவில்லை. ஆனால் எனது சொந்தக் கட்சியினரே எனக்கு துரோகிகளாகிவிட்டனர்.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

நான் மருத்துவமனையில் ஆபரேஷன் செய்டு நடக்க முடியாத நிலையில் குணமடைந்து வந்தபோது, எனது ஆட்சியைக் கவிழ்க்க முயன்றார்கள். கட்சியிலிருந்து சென்றவர்கள் மரத்தின் அழுகிய இலைகள். மரத்துக்குப் புதிய கிளைகள் முளைக்கும். என் தந்தை உருவாக்கிய கட்சியை இப்போது அவர்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயல்கிறார்கள்.

சிவசேனா நீதிமன்றத்தில் வெற்றிபெறும். அவர்கள் எனக்கு துரோகம் செய்து கட்சியை உடைத்துவிட்டனர். அவர்கள் தங்களுடைய சொந்தத் தந்தையின் புகைப்படங்களைப் பயன்படுத்தி வாக்கு கேட்க வேண்டும். என் தந்தையின் புகைப்படத்தைப் பயன்படுத்தி ஓட்டு யாசகம் எடுப்பதை நிறுத்த வேண்டும்.

நான் கழுத்தில் மிகப்பெரிய ஆபரேஷன் செய்து கைகால்களை அசைக்க முடியாமல் இருந்தபோது, சிலர் நான் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்கள். சிலர் நான் அப்படியே உடல்நலம் சரியில்லாமல் இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்ததாக எனக்குத் தகவல் கிடைத்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நான் கட்சியின் பக்‌ஷ பிரமுக். குடும்பத்தின் தலைவன். ஆபரேஷனுக்குப் பிறகு என்னால் நடமாட முடியாமல் இருந்தபோது எனக்கு எதிராகச் சிலர் தீவிர சதியில் ஈடுபட்டுள்ளனர். நான் இந்தக் கடினமான உண்மையுடன் தொடர்ந்து வாழ்வேன். கட்சியில் சிலருக்கு இரண்டாம் கட்ட தலைவர்கள் அந்தஸ்து கொடுத்திருந்தேன். அவர்களிடம் கட்சியை கவனித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டிருந்தேன். ஆனால் அவர்கள் எனது நம்பிக்கையைத் தகர்த்துவிட்டனர்.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

பால் தாக்கரேவின் மரணத்துக்குப் பிறகு சிவசேனாவை வளர்க்க முடிந்ததை எண்ணி அதிருப்தியாளர்களுக்குக் கோபம். காந்தி இல்லாத காங்கிரஸ் கட்சியை உருவாக்க நினைப்பதுபோல் தாக்கரே இல்லாத சிவசேனாவை உருவாக்க நினைக்கின்றனர். பாஜக-வினர் மற்ற கட்சிகளின் பெரிய தலைவர்களைக்கூட சந்தித்துப் பேசியுள்ளனர். காங்கிரஸ் கட்சியிலிருந்து சர்தார் வல்லபாய் பட்டேலைக்கூடப் பிரிக்க முயன்றனர். இப்போதும் அதைத்தான் செய்கின்றனர். தாக்கரேயையும் சிவசேனாவையும் பிரியுங்கள் பார்க்கலாம்... ஓட்டுக்காக என் தந்தையின் புகைப்படத்தைப் பயன்படுத்தாதீர்கள். உங்களுடைய பெற்றோரின் புகைப்படத்தைப் பயன்படுத்துங்கள். உங்கள் பெற்றோரிடம் ஆசீர்வாதம் வாங்கி, பிரசாரத்தைத் தொடங்கி வாக்கு கேளுங்கள். என் தந்தையை ஏன் திருடுகிறீர்கள்... உங்களிடம் போதிய அர்ப்பணிப்பு இல்லை. உங்களிடம் கடமை உணர்வு, தைரியம் இல்லை. துரோகிகள். தற்போதுள்ள அனைத்துப் பிரச்னைக்கும் நான்தான் காரணம். சில சிவசேனா தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தேன். அவர்களை நம்பியது எனது தவறு” என்று தெரிவித்திருந்தார்