Published:Updated:

18 மாடி; ரூ.20,000 கோடி; 2 கால்பந்து மைதானத்தின் நீளம் - வியக்கவைக்கும் `விக்ராந்த்' போர்க் கப்பல்!

விக்ராந்த்

`விக்ராந்த்' போர்க் கப்பல் - சிறப்பம்சங்கள் என்னென்ன?

18 மாடி; ரூ.20,000 கோடி; 2 கால்பந்து மைதானத்தின் நீளம் - வியக்கவைக்கும் `விக்ராந்த்' போர்க் கப்பல்!

`விக்ராந்த்' போர்க் கப்பல் - சிறப்பம்சங்கள் என்னென்ன?

Published:Updated:
விக்ராந்த்

ஐ.என்.எஸ் விக்ராந்த் - முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கிப் போர்க் கப்பல். இந்தக் கப்பலை இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி. 20,000 கோடி ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்தக் கப்பலில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கின்றன? - விரிவாகப் பார்ப்போம்!

* நீளம், அகலம் - 262 மீட்டர் நீளம்கொண்ட விக்ராந்த் போர்க் கப்பல், இரண்டு கால்பந்து மைதானங்களைவிட நீளமானது. 62 மீட்டர் அகலமுடைய இந்தக் கப்பல், சுமார் 45,000 டன் எடைகொண்டது.

* மாடிகள் - இந்தக் கப்பலில் மொத்தம் 18 மாடிகள் இருக்கின்றன.

*கொள்ளளவு - இந்தக் கப்பலில் ஒரே நேரத்தில் 1,700 பேரைத் தங்கவைக்க முடியும். கப்பலின் மூன்று பகுதிகளில், உணவு எடுத்துக்கொள்ளும் டைனிங் அறைகள் இருக்கின்றன. ஒரே நேரத்தில் மொத்தம் 600 பேர் உணவு உண்ண முடியும். கப்பலிலுள்ள கிச்சனில் வைக்கப்பட்டிருக்கும் சப்பாத்தி போடும் இயந்திரத்தில், மணிக்கு 3,000 சப்பாத்திகள் போட முடியும்!

ஐஎன்எஸ் விக்ராந்த்
ஐஎன்எஸ் விக்ராந்த்
*விமான தளம் - கப்பலில் போர் விமானங்களை நிறுத்திவைப்பதற்காக ஒரு பகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது சுமார் இரண்டரை ஹாக்கி மைதானங்களின் அளவைப் பெற்றிருக்கிறது. அங்கு மொத்தம் 30 போர் விமானங்களை நிறுத்திவைக்க முடியும். இதுபோக, ராணுவ ஹெலிகாப்டர்களும் இந்தத் தளத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றன. அந்த விமான தளத்திலிருந்து, லிஃப்ட் மூலம் மேல் தளத்துக்கு விமானங்களைக் கொண்டுவருகின்றனர். மேல் தளத்திலுள்ள மிக நீண்ட Run Way-ல் வந்து விமானங்கள் பறக்கின்றன.

* வேகம் - மணிக்கு 52 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடியது. நடுக்கடலில் எவ்வளவு உயர அலைகள் வந்தாலும், கப்பலுக்குள் அதன் தாக்கம் தெரியாது. துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்தால், எந்தவொரு சலனமும் இருக்காது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
*நவீன மருத்துவமனை - கப்பலிலுள்ள மருத்துவமனையில் மொத்தம் 16 படுக்கைகள் இருக்கின்றன. இரண்டு அறுவை சிகிச்சை அறைகள், ஐ.சி.யூ வார்டுகள், சி.டி.ஸ்கேன் வசதிகளும் இருக்கின்றன. எக்ஸ்ரே உட்பட பல்மருத்துவ வசதிகளும் இருக்கின்றன. ஐந்து மருத்துவர்கள், 15 துணை மருத்துவர்களால் இந்த மருத்துவமனை நிர்வகிக்கப்படுகிறது.
ஐஎன்எஸ் விக்ராந்த்
ஐஎன்எஸ் விக்ராந்த்

* மின்சாரம் - இந்தக் கப்பலிலுள்ள நான்கு இன்ஜின்களும் சேர்ந்து ஒரு மணி நேரத்துக்கு 88 மெகவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன.

* கம்பார்ட்மென்ட்டுகள் - விக்ராந்த் போர்க் கப்பலில் மொத்தம் 2,300 கம்பார்ட்டுமென்ட்டுகள் இருக்கின்றன. இந்தக் கப்பலில் பயணப்படுபவர்களுக்குப் படுக்கை வசதியுடன்கூடிய தனித் தனி அறைகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

* ஏசி வசதி - கப்பல் முழுவதும் குளிர்சாதன வசதி இருக்கிறது. வெளியிலுள்ள வெப்பநிலைக்கு ஏற்றவாறு அவை செயல்படும் எனச் சொல்லப்படுகிறது.