Published:Updated:

`அசராத' ஸ்டாலின், அசரடிக்கும் எடப்பாடி, 'கிட்னாப்' முருகன்... - தலைவர்கள் ரெடி!

எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின், தினகரன்
எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின், தினகரன்

வாக்குச்சாவடிகள் தயாராக இன்னும் எட்டு மாதங்களே இருக்கும் நிலையில், கட்சித் தலைவர்கள் தங்களது வியூகங்களைக் கட்டமைக்கத் தயாராகிவிட்டார்கள்.

தடுமாறும் ஸ்டாலின்!

எல்லாக் கட்சித் தலைவர்களும் தேர்தலுக்குத் தயாராகிவருகின்றனர் என்றால், தி.மு.க தலைவர் ஸ்டாலின் பதவியேற்பு விழாவுக்கே தயாராகிவிட்ட மனநிலையில் மந்தகாசப் புன்னகையைச் சிந்துகிறார். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக 90-ஸ் கிட்ஸ்களையே கிளர்ந்தெழவைக்கிறது அவரது சிகை அலங்காரம். ஸ்டாலின் என்ன பேச வேண்டும், என்ன உண்ண வேண்டும், என்ன உடுத்த வேண்டும் என்று அனுதினமும் படுத்தியெடுக்கிறது 11 பேர் கொண்ட குழு ஒன்று. பிசிறில்லாமல் பழமொழிகளை உச்சரிக்க, பயிற்சி வகுப்புகள் நடப்பதாகவும் கேள்வி. ஆக, மனிதர் அசராமல் உழைக்கிறார்.

தந்தைக்குச் சற்றும் சளைக்காமல் இளைஞரணியைத் திரட்டி 'தனிக்கட்சி'யே நடத்துகிறார் தனயன் உதயநிதி. அதைச் சமாளிக்கத் தடுமாறுகிறார் ஸ்டாலின். சித்தரஞ்சன் சாலை கிச்சனில் அன்றாடம் மூன்று வேளையும் சமைக்கப்படுகின்றன சுடசுடத் தேர்தல் திட்டங்கள்!

ஆல் பாஸ் எடப்பாடி!

39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் கட்சி சார்பில் நிர்வாகப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, 15,000 ரூபாய் சம்பளமும் வழங்குகிறார்கள். 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வழங்குகிறார்கள். பெட்ரோல் அலவன்ஸ் 3,000 ரூபாய் தனி. இப்படிச் சம்பளத்துக்காக மட்டுமே சுமார் அரைக்கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறதாம். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்ததாக இதையும் ஆட்சி சாதனைக் கணக்கில் எடப்பாடி சேர்த்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

`அசராத' ஸ்டாலின், அசரடிக்கும் எடப்பாடி, 'கிட்னாப்' முருகன்... - தலைவர்கள் ரெடி!

எல்லோரையும் தூக்கிச் சாப்பிடும்விதமாக 'பத்தாம் வகுப்பு ஆல் பாஸ்... அரியர் ஆல் கிளியர்' என எல்லாப் பந்துகளையும் பெவிலியனுக்குத் தூக்கியடித்து, அமைச்சர்களையே அசரடிக்கிறார் எடப்பாடி!

விடை தெரியாத கேள்வி...

அ.ம.மு.க-வுக்குப் புது ரத்தம் பாய்ச்ச சசிகலாவின் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள். சிறையிலிருந்து அவர் வெளியே வந்தால் அ.ம.மு.க-வுக்கு புது ரத்தம் பாய்ச்சுவாரா, அ.தி.மு.க-வுக்கு புது ரத்தம் பாய்ச்சுவாரா என்பதுதான் இரு கட்சித் தொண்டர்களின் விடை தெரியாத கேள்வியாக இருக்கிறது. இப்படியான சூழலில்தான் வரும் தேர்தலை எதிர்கொள்கிறார் தினகரன்!

'கிட்னாப்' முருகன்...

எல்.முருகனை 'எல் போர்டு' முருகனாகக் கேலி செய்து காண்டானார்கள் பதவிக்காகக் காத்திருந்த சீனியர்கள். ஆனால், சத்தமில்லாமல் சாதிக்கிறார் முருகன். தி.மு.க-விலிருந்து வி.பி.துரைசாமி, கு.க.செல்வம் என சீனியர்களையே 'கிட்னாப்' செய்து கிலியேற்றினார். போதாக்குறைக்கு இவர் அறிவித்துள்ள இன்னோவா கார் பரிசுத் திட்டத்தால் 'கீ' கொடுத்ததுபோல வேலை செய்கிறார்கள் மாவட்ட நிர்வாகிகள்.

ஆனாலும், கட்சிப் பதவி கிடைக்காத முருகனின் எதிர்கோஷ்டியினரோ, "பார்த்து... அண்ணன் கடைசியில ரிமோட் கார் கொடுத்துடப் போறாரு...'

என்று உள்குத்து வேலை செய்யவும் தவறுவதில்லை. இவர்களுக்கு இடையே குறுக்கும் நெடுக்குமாய் தன் ஆட்டுக்குட்டிகளை ஓட்டிவருகிறார் அண்ணாமலை ஐ.பி.எஸ்.

- இந்த நான்கு முகாம்கள் குறித்து இன்னும் சற்று விரிவாக வாசிப்பதுடன்... 'ஹைஜாக்' டி.டி.வி... அஸ்தமனமான 18 பேர்! | கதறும் கதர்... சிதறும் கூட்டணி?! | 'அக்னி டாட்டூ' அன்புமணி; அமையுமா கூட்டணி?! | திகில் கதை சீமான்... தேர்தலில் 'கவரிமான்'! | தரைதட்டிய கப்பல்; தாளம் தப்பும் முரசு?! | ஆயிரம் விளக்கு... அத்தனை பேரையும் குழப்பு என அனைத்து முகாம்களின் காட்சிகளையும் ஜூனியர் விகடன் கவர்ஸ்டோரி மூலம் முழுமையாக அறிய க்ளிக் செய்க... https://bit.ly/2QMQhy4 > "வாக்காளப் பெருமக்களே..." - வேஷம்கட்டும் தலைவர்கள்! https://bit.ly/2QMQhy4

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு