Published:Updated:

``வீழ்ச்சியில் இருக்கும் கட்சிகளின் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்" - பிரதமர் மோடி

தெலங்கானா பாஜக செயற்குழுக் கூட்டத்தில் மோடி ( ட்விட்டர் )

``சர்தார் வல்லபாய் படேல் பிராந்தியத்தை யூனியனுடன் ஒருங்கிணைத்து `ஏக் பாரத்’ (ஐக்கிய இந்தியா)-க்கு அடித்தளம் அமைத்தார். எனவே, 'ஷ்ரேஷ்டா பாரதம்' என்பது பா.ஜ.க-வின் வரலாற்றுக் கடமை.”

``வீழ்ச்சியில் இருக்கும் கட்சிகளின் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்" - பிரதமர் மோடி

``சர்தார் வல்லபாய் படேல் பிராந்தியத்தை யூனியனுடன் ஒருங்கிணைத்து `ஏக் பாரத்’ (ஐக்கிய இந்தியா)-க்கு அடித்தளம் அமைத்தார். எனவே, 'ஷ்ரேஷ்டா பாரதம்' என்பது பா.ஜ.க-வின் வரலாற்றுக் கடமை.”

Published:Updated:
தெலங்கானா பாஜக செயற்குழுக் கூட்டத்தில் மோடி ( ட்விட்டர் )

தெலங்கானாவில் கடந்த இரண்டு நாள்களாக பா.ஜ.க-வின் தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.18 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், 18 மாநில முதல்வர்கள், துணை முதல்வர்கள், அனைத்து மத்திய அமைச்சர்கள் மற்றும் கட்சியின் ஒட்டுமொத்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். விழாவின் இறுதி நாளான நேற்று பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது, ``ஹைதராபாத் நகரின் இந்து கலாசார பாரம்பர்யத்தில் வேர்கொண்டது, இந்தக் கூட்டம் நடக்கும் பாக்யநகர் பகுதி. சர்தார் வல்லபாய் படேல் பிராந்தியத்தை யூனியனுடன் ஒருங்கிணைத்து `ஏக் பாரத்’ (ஐக்கிய இந்தியா)-க்கு அடித்தளம் அமைத்தார். எனவே 'ஷ்ரேஷ்டா பாரதம்' என்பது பா.ஜ.க-வின் வரலாற்றுக் கடமை. இந்தியாவை நீண்டகாலமாக ஆட்சி செய்த கட்சிகளின் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

தெலங்கானா பாஜக செயற்குழுக் கூட்டம்
தெலங்கானா பாஜக செயற்குழுக் கூட்டம்
ட்விட்டர்

இந்தியாவை `சிரேஷ்ட’ (விரிவாக்க) பாடுபட வேண்டும். இதுதான் 'சப்கா விகாஸ்' (அனைவரின் வளர்ச்சி)-க்கு வழிவகுக்கும். யாரும் பின்தங்கியிருக்கக் கூடாது. பல்வேறு தரப்பு மக்களை பா.ஜ.க சென்றடைவதன் மூலம் சமூகத்தில் பாசத்தையும் ஒருங்கிணைப்பையும் அதிகரிப்பதை உறுதிசெய்ய வேண்டும். மேலும், நாடு குடும்ப அரசியல் மற்றும் குடும்பக் கட்சிகளால் தளர்ந்திருக்கிறது. இறுதிக்கட்ட வீழ்ச்சியில் இருக்கும் கட்சிகளைக் கேலி செய்யக் கூடாது. மாறாக அவர்களின் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நாட்டிலுள்ள நல்லவை அனைத்தும் ஒவ்வோர் இந்தியனுக்கும் சொந்தமானவை. இந்தத் தத்துவத்தில் பா.ஜ.க நம்பிக்கை வைத்திருக்கிறது, அதனால்தான், காங்கிரஸ் தலைவர் பட்டேல் போன்ற தலைவர்களைக் கொண்டாடுகிறோம். ஒவ்வொரு பிரதமருக்கும் அர்ப்பணிக்கப்பட்ட அருங்காட்சியகம் மூலம் அஞ்சலி செலுத்துகிறோம். பா.ஜ.க-வின் ஜனநாயக நற்சான்றிதழ்கள் குறித்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சிகள் அவர்களின் அமைப்புகளுக்குள் ஜனநாயகத்தின் நிலை என்ன என்பது குறித்தும் சிந்திக்க வேண்டும்.

தெலங்கானா பாஜக செயற்குழுக் கூட்டம்
தெலங்கானா பாஜக செயற்குழுக் கூட்டம்
ட்விட்டர்

எனது அரசு அனைவருக்காகவும் உழைத்திருக்கிறது, நாடு முழுவதும் 200 கோடி கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக மக்களுக்குச் செலுத்தப்பட்டுள்ளன. இந்தியாவின் ஏற்றுமதி உயர்ந்திருக்கிறது. நாடு வரலாறு காணாத அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்றிருக்கிறது. பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக மத்தியிலும், மாநிலங்களிலும் உள்ள பா.ஜ.க அரசுகளின் முயற்சிகளால்தான், தேர்தலில் பா.ஜ.க-வுக்கு பலமுறை பெண்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

எனவே, அவர்களின் நலனுக்காகத் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். மேலும், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்முவைக் கட்சி எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டார்.