Published:Updated:

“பாதுகாப்பாய் வந்துவிட்டோம்”- விடுதியில் சந்தித்த முதல்வர்; வீட்டிற்கு வரவழைத்த கனிமொழி!

கனிமொழி

ரஷ்யாவின் தாக்குதல் அதிகரித்த நிலையில், உக்ரைனிலிருந்து இந்தியா திரும்புதவற்கான உதவியை எதிர்பார்த்து கனிமொழியை சமூக வலைதளத்தின் மூலம் தொடர்பு கொண்டுள்ளனர்.

“பாதுகாப்பாய் வந்துவிட்டோம்”- விடுதியில் சந்தித்த முதல்வர்; வீட்டிற்கு வரவழைத்த கனிமொழி!

ரஷ்யாவின் தாக்குதல் அதிகரித்த நிலையில், உக்ரைனிலிருந்து இந்தியா திரும்புதவற்கான உதவியை எதிர்பார்த்து கனிமொழியை சமூக வலைதளத்தின் மூலம் தொடர்பு கொண்டுள்ளனர்.

Published:Updated:
கனிமொழி

மகளிர் தினத்தை முன்னிட்டு தி.மு.க மகளிர் அணி செயலாளர் கனிமொழிக்கு தி.மு.க-வை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி ஆளுமைகள் பலரும் வாழ்த்து சொல்லிவருகிறார்கள்.ஆனால், போர்முனையிலிருந்து பத்திரமாய் தாயகம் திரும்பிய இரு மாணவிகள் சந்திப்பு மகளிர் தினத்திற்கு கனிமொழிக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாகச் சொல்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

 கனிமொழிக்கு நன்றி சொன்ன மாணவி
கனிமொழிக்கு நன்றி சொன்ன மாணவி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உக்ரைன் நாட்டின்மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலால் அங்கு படித்து வரும் இந்தியாவைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியகள் போர் சூழலில் சிக்கியுள்ளார்கள். அவர்களை மீட்கும் முயற்சியில் தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக உக்ரைன் நாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த பலரும் மருத்துவம் படித்து வருகிறார்கள். அவர்கள் போர் நடக்கும் பகுதியிலிருந்து பத்தி்ரமாக தயாகம் திரும்ப கடந்த சில தினங்களாகவே பல்வேறு முயற்சிகளை இந்திய அரசு எடுத்து வருகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், உக்ரைனில் மருத்துவம் படித்தும் வரும் தமிழக மாணவிகளான தேவி சேஷா மாலினி மற்றும் அஸ்வினி ஆகியோர் ரஷ்யாவின் தாக்குதல் அதிகரித்த நிலையில், உக்ரைனிலிருந்து இந்தியா திரும்புதவற்கான உதவியை எதிர்பார்த்து கனிமொழியை சமூக வலைதளத்தின் மூலம் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்கள் அங்கு வசித்த இருப்பிடம் உள்ளிட்ட விவரங்களை கேட்டுக்கொண்ட கனிமொழி, அதை வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார். அவர்களின் ஆலோசனை அடிப்படையில் உக்ரைனிலிருந்து இரண்டு மாணவிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

கனிமொழியிடம் கோரிக்கை...
கனிமொழியிடம் கோரிக்கை...

இந்த நிலையில், தமிழகம் திரும்பிய மாணவிகள் இருவரும் கனிமொழியை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். அந்த அடிப்படையில் இன்று காலை தனது வீட்டிற்கு மாணவிகளை வரவழைத்தார். மாணவிகளிடம் அங்குள்ள நிலவரங்களையும் கேட்டறிந்தார். அப்போது மாணவிகள் நாடு திரும்பிவிட்டோம், ஆனால் எங்கள் படிப்பு கேள்விக்குறியாக உள்ளது என்று சொன்னதும், முதலில் நீங்கள் பாதுகாப்பாக நாடு திரும்பியதே முக்கியம். படிப்பை பற்றி கவலைப்பட வேண்டாம், நான் அதற்கு ஆவணம் எடுக்கிறேன்” என்று மாணவிகளுக்கு உறுதி கொடுத்துள்ளார் கனிமொழி.

உக்ரைனிலிருந்து திரும்பி மாணவிகளை திருநெல்வேலியில் உள்ள விடுதியில் சந்தித்து நேற்று உரையாடினார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

மாணவிகளுடன் முதல்வர் சந்திப்பு
மாணவிகளுடன் முதல்வர் சந்திப்பு

அதே நேரம் தன்னுடைய முயற்சியால் மீட்கப்பட்ட இரண்டு மாணவிகளை வீட்டிற்கு வரவழைத்து அவர்களுடன் உரையாடியிருக்கிறார் கனிமொழி!