Published:Updated:

சொத்துக்குவிப்பு வழக்கு: அக்டோபர் 16-ம் தேதி விடுதலையாகிறார் சுதாகரன்!

சொத்துக்குவிப்பு வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சுதாகரன், வரும் 16-ம் தேதி விடுதலையாகிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வர்மீது சொத்துக்குவிப்பு வழக்கு இருந்துவந்தது. 2016, டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா காலமானதும், சசிகலா கட்சியின் பொதுச்செயலாளரானார். அதோடு முதல்வராகவும் ஆக முயன்றார். அந்தச் சமயத்தில்தான் சொத்துக்குவிப்பு வழக்கின் இறுதித் தீர்ப்பு வெளியானது. நால்வரும் குற்றவாளிகள் என்றும், நான்காண்டு சிறைத் தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு மட்டும் 100 கோடி ரூபாய் அபராதத் தொகை விதிக்கப்பட்டது.

ஜெயலலிதா - சசிகலா
ஜெயலலிதா - சசிகலா

2017, பிப்ரவரி 14-ம் தேதி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்றனர். நான்காண்டுகள் கடந்த பின்னர் அபராதத் தொகையைக் கட்டியதால் சசிகலாவும் இளவரசியும் இந்த ஆண்டு தொடக்கத்தில் விடுதலையாகிவிட்டனர். அபராதத் தொகை கட்டாததால், சுதாகரன் கூடுதலாக ஓராண்டு சிறைவாசம் அனுபவிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது அந்தக் காலமும் முடிவடையவே, வரும் அக்டோபர் 16-ம் தேதி சுதாகரன் விடுதலையாகப்போகிறார்.

சசிகலா விடுதலை: ஜெ.நினைவிடத் திறப்பு...  டி.டி.வி.தினகரன் சூளுரைப்பு... பின்னணி என்ன?
சுதாகரன் திருமணம்
சுதாகரன் திருமணம்

சசிகலாவின் மூத்த சகோதரி வனிதாமணியின் மகன்தான் சுதாகரன். அவரை வளர்ப்பு மகனாக அறிவித்த ஜெயலலிதா, 1991 காலகட்டத்தில் மிக பிரமாண்டமான முறையில் சுதாகரனுக்குத் திருமணம் நடத்திவைத்தார். இந்த சொத்துக்குவிப்பு வழக்குக்கே அந்தத் திருமணத்தின் பிரமாண்டம்தான் மூல காரணம் என்றாலும் மறுப்பதற்கில்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு