Published:Updated:

மீண்டுமொரு முள்ளிவாய்க்காலுக்குத் தயாராகும் இலங்கை அரசு!

முள்ளிவாய்க்கால்
பிரீமியம் ஸ்டோரி
முள்ளிவாய்க்கால்

- எச்சரிக்கும்  சண் மாஸ்டர்

மீண்டுமொரு முள்ளிவாய்க்காலுக்குத் தயாராகும் இலங்கை அரசு!

- எச்சரிக்கும்  சண் மாஸ்டர்

Published:Updated:
முள்ளிவாய்க்கால்
பிரீமியம் ஸ்டோரி
முள்ளிவாய்க்கால்
இலங்கை, முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் நினைவாக, யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவு ஸ்தூபி, ஜனவரி 8-ம் தேதி நள்ளிரவில் அதிகார வர்க்கத்தால் இடிக்கப்பட்டது. இது உலகெங்கும் வாழும் தமிழர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். தமிழக அரசியல் தலைவர்களும் கண்டனங்களையும், போராட்ட அறிவிப்புகளையும் வெளியிட்டனர். இதையடுத்து, மீண்டும் அதே இடத்தில் நினைவு ஸ்தூபி அமைப்பதற்கு தற்போது அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் உட்பட இலங்கை அரசியல் சூழல்கள் குறித்து ஈழத்தைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் சண் மாஸ்டரிடம் பேசினோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் அழிக்கப்பட்டதன் நோக்கம் என்னவாக இருக்கும்?’’

‘‘படுகொலைகளின் நினைவுச்சின்னத்தை அழித்தது என்பது இன்னொரு முள்ளிவாய்க்கால் சம்பவத்தை ஈழத்தில் நடத்தப்போகிறார்கள் என்பதற்கான முன்னறிவிப்பே. இறந்தவர்களை தெய்வமாக வழிபடும் நடுகல் பண்பாட்டுக்கு ரியவர்கள் தமிழர்கள். முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்ன அழிப்பு பண்பாட்டு இன அழிப்பு முயற்சியாகும். தமிழர்களை எந்த அடையாளமும் இல்லாமல் முற்றாகத் துடைத்தழிக்கும் நோக்கத்தில் ராஜபக்சே சகோதரர்கள் நடத்தும் இன அழிப்பின் ஒரு பகுதியே இது.

ராணுவத்தின் கடும் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், பல்கலைக்கழக மாணவர்களின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் காரணமாக அங்கு மீண்டும் அடிக்கல் நாட்டியிருக்கிறார்கள். மாணவர்களின் உணர்வெழுச்சியும், உலகத் தமிழர்களின் ஒன்றுபட்ட போர்க்குரலும்தான் இதைச் சாத்தியமாக்கியிருக்கிறது.’’

மீண்டுமொரு முள்ளிவாய்க்காலுக்குத் தயாராகும் இலங்கை அரசு!

‘‘இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் சமீபத்திய இலங்கைப் பயணத்தால் தமிழர்களுக்கு என்ன பயன்?’’

‘‘அவர் இலங்கை சென்று திரும்பிய அடுத்த நாளே, முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை இடித்துள்ளார்கள். `கொலை செய்யப் பட்டவர் களின் நினைவுகளைச் சுமக்கவும், கண்ணீர்விட்டு அழவும்கூட தமிழர்களுக்கு உரிமையில்லை’ என்று இந்தியாவுக்குச் சொல்லியிருக்கிறார்கள் ராஜபக்சேக்கள். இலங்கையில் வடக்கு, கிழக்கு இணைந்த பிரதேசமே எமது வரலாற்றுத் தாயகம். இந்திய - இலங்கை ஒப்பந்தப்படி வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இலங்கை அரசு அதைக்கூடச் செய்ய மறுக்கிறது.

இப்போது மாகாணங்களைக் கலைப்பதற்கும் தயாராகிவருகிறார்கள் ராஜபக்சேக்கள். இலங்கைத் தீவின் இனச்சிக்கலுக்கு 13-வது சட்டத் திருத்தம் தீர்வல்ல. சிங்கள ஆட்சியாளர்கள் எம்மை ஒரு தேசிய இனமாக அங்கீகரித்ததே கிடையாது. அது மட்டுமன்றி, ஒற்றையாட்சியின்கீழ் 13-வது சட்டத் திருத்தம் இருக்கும்போதுதான் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடத்தப்பட்டது. எனவே, தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை இந்தியா அங்கீகரித்து, தமிழ் மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த வழிவகுப்பதுதான் தமிழின அழிப்புக்கு முடிவு கட்டும். தமிழர்களின் இருப்பும், அரசியல் வலிமையும்தான் இலங்கைத் தீவு இந்தியாவுக்கு எதிரான வல்லரசுகளின் ஆடுகளமாக மாறுவதைத் தடுக்கும். மேலும், இந்தப் பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தும்.’’

மீண்டுமொரு முள்ளிவாய்க்காலுக்குத் தயாராகும் இலங்கை அரசு!

‘‘மார்ச் மாதம் நடக்கவிருக்கும் ஐ.நா மனித உரிமை மன்றக் கூட்டத்தொடரை முன்னிட்டு ஈழத்தமிழர்களின் கோரிக்கை என்ன?"

‘‘சிங்கள அரசால் திட்டமிட்டு தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலைக் குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் ஆகியவற்றை இலங்கை அரசே விசாரிக்க வேண்டும் என்று சொல்வது, கொலை செய்தவனிடமே நீதி கேட்பதற்கு ஒப்பாகும். சர்வதேச விசாரணையிலிருந்து தப்பித்துக்கொள்ளும் நோக்கத்தோடு, 2015-ல் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் விசாரணைக் குழுவில், சர்வதேசப் பிரதிநிதிகளும் பங்குபெறும் கலப்புப் பொறிமுறை தீர்மானத்தைத் தாமே முன்மொழிந்து, அதை ஏற்றுக்கொள்வதுபோல் நாடகமாடியது இலங்கை அரசு. ஆனால், அதை நிறைவேற்றாமல் கால அவகாசம் பெற்று உலகை ஏமாற்றிக்கொண்டிருந்தது.

கோத்தபய ராஜபக்சே இலங்கையின் அதிபரானவுடன், 2020-ல் இந்தத் தீர்மானத்திலிருந்து விலகிக்கொள்கிறோம் என்று அறிவித்துவிட்டு, தமிழர்களுக்கு எதிராகச் சத்தமில்லாத யுத்தத்தை நடத்திவருகிறார். இனி பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு இலங்கை அரசை நிறுத்துவதே, நீதிக்கு ஒரே வழி. இதை ஐ.நா மனித உரிமைப் பேரவை பரிந்துரை செய்து, ஐ.நா பாதுகாப்பு அவைக்கு அனுப்ப வேண்டும். மேலும், வடக்கு, கிழக்கு தமிழர் பிரேதசங்களில் ஐ.நா-வின் சிறப்புக் கண்காணிப்பு அலுவலகங்களை அமைக்க வேண்டும். இன அழிப்புச் சாட்சியங்களை அழியவிடாமல் காக்க ஐ.நா-வின் பொறியமைவு ஒன்று அமைக்கப்பட வேண்டும். இவையே எமது கோரிக்கைகள். தாயகத்தில் தமிழ்த் தேசிய தளத்தில் செயல்படும் அனைத்துப் பிரதான கட்சிகளின் பிரதிநிதிகளும், சிவில் பிரதிநிதிகளும் ஜனவரி 9-ம் தேதி ஒன்றுகூடி இதை முடிவு செய்திருப்பதாக அறிகிறேன்.’’

மீண்டுமொரு முள்ளிவாய்க்காலுக்குத் தயாராகும் இலங்கை அரசு!

‘‘தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் ஈழத்தமிழர்களின் எதிர்பார்ப்புகள் என்னென்ன?’’

‘‘கடந்த 2013-ல் தமிழக சட்டப் பேரவையில், ‘இன அழிப்புக்கு சர்வதேச விசாரணை, அரசியல் தீர்வுகாண தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்; இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்’ ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏழாண்டுகளாகியும் இது நடைமுறைக்கு வரவில்லை. இந்தத் தீர்மானம் இந்திய நாடாளுமன்றத் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு ஐ.நா-வுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று தமிழகக் கட்சிகள் தமது தேர்தல் அறிக்கையில் வலியுறுத்த வேண்டும்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism