Published:Updated:

"சீமான் கட்சியும் ஆர்.எஸ்.எஸ் பாணியைப் பின்பற்றுகிறது!" - சீறும் சுந்தரவள்ளி

sundaravalli

திராவிடர் கழகத்தைச் சேர்ந்த முற்போக்குப் பெண்கள் என்றாலே, பண்பாட்டைச் சிதைப்பவர்கள் என்ற போர்வையில் என்மீதான தாக்குதல்கள்

"சீமான் கட்சியும் ஆர்.எஸ்.எஸ் பாணியைப் பின்பற்றுகிறது!" - சீறும் சுந்தரவள்ளி

திராவிடர் கழகத்தைச் சேர்ந்த முற்போக்குப் பெண்கள் என்றாலே, பண்பாட்டைச் சிதைப்பவர்கள் என்ற போர்வையில் என்மீதான தாக்குதல்கள்

Published:Updated:
sundaravalli

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர், பேராசிரியர் சுந்தரவள்ளி. இவர், பாரதிய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள், சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி ஆபாசமாகச் சித்திரித்து பாலியல்ரீதியாகத் துன்புறுத்தல் கொடுப்பதாக அண்மையில் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார். சுந்தரவள்ளியை அவமதிக்கும் வகையில், சமூக வலைதளங்களில் சுற்றிக்கொண்டிருந்த பொய்யான பிரசாரங்களை எதிர்த்து, பல்வேறு அமைப்புகளும் தனிநபர்களும் தங்களுடைய கண்டனத்தைப் பதிவு செய்துவருகின்றனர். பெண்கள் மீது தொடரும் சைபர் தாக்குதல்கள் குறித்தும், இதன் பின்னணி அரசியல் குறித்தும் சுந்தரவள்ளியிடம் பேசினோம். விரிவாக படிக்க... http://bit.ly/2l86T78

"உங்கள் மீதான சைபர் தாக்குதல்கள் எப்போதிலிருந்து தொடங்கின?"

எந்த ஒரு கொள்கைவாதியாலும் சகபெண்ணை பாலியல்ரீதியாகத் தாக்க முடியாது

"நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்புதான் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுக்கத் தொடங்கினேன். வாசிப்பு அனுபவமும் இடதுசாரிச் சிந்தனைகளும் இருப்பதால் தவறுகளை வரலாற்று உதாரணங்களோடு சுட்டிக்காட்டுவேன். ஒருகட்டத்தில் என்னை கருத்தியல்ரீதியாக எதிர்கொள்ள முடியாததால், பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் பாலியல்ரீதியாகத் தாக்கத் தொடங்கினர். நாம் தமிழர் கட்சியும் இதில் ஈடுபடத் தொடங்கியது. கறுப்புச் சட்டை அணிந்திருந்த காரணத்தினாலேயே நான் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவள் என்றும், திராவிடர் கழகத்தைச் சேர்ந்த முற்போக்குப் பெண்கள் என்றாலே, பண்பாட்டைச் சிதைப்பவர்கள் என்ற போர்வையில் என்மீதான தாக்குதல்கள் தொடங்கின. அதன் நீட்சியாகவே இந்தத் தாக்குதலும் நடந்திருக்கிறது."

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"கருத்தியல்ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்கள் என்று, 'நாம் தமிழர்' கட்சியைச் சொல்லக் காரணம் என்ன?"

"அந்தக் கட்சியின் கொள்கை மற்றும் சித்தாந்தங்களின் மீது நமக்கு நூறு சதவிகித விமர்சனப் பார்வை உண்டு. தமிழ்த் தேசியம் என்ற பெயரில் சாதியைத் தூக்கிப் பிடிக்கிறார்கள். மற்ற சித்தாந்தங்களையும் அதன் பெயரால் காலில் போட்டு மிதிக்கிறார்கள். அதுதான் அவர்களுடைய சித்தாந்தம் என்றே வைத்துக்கொள்வோம். ஆனால், எந்த ஒரு கொள்கைவாதியாலும் சகபெண்ணை பாலியல்ரீதியாகத் தாக்க முடியாது. நாம் தமிழர் கட்சியினர் அவர்களுடைய கொள்கைகள் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கிறது."

> "இதுகுறித்து அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் முறையிடப்பட்டதா, ஏதேனும் நடவடிக்கை எடுத்தார்களா?"

> "ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க-வில் இருக்கும் ஒற்றுமை, கொள்கைரீதியாக வலுவாக இருக்கும் இடதுசாரிகளிடம் இல்லை என, கருத்து நிலவுகிறதே?"

> "உங்கள்மீதான இந்தத் தாக்குதலுக்கு இடதுசாரி இயக்கத் தலைவர்கள் பெரிதாகக் குரல் கொடுக்கவில்லையே?"

> "பேரலையாக எழுந்த 'மீ டு' பிரச்னைகூட அப்படியே அடங்கிவிட்டது. இதுபோன்ற சமூக வலைதளப் பாலியல் தாக்குதல்களுக்கு என்னதான் தீர்வு?"

- இந்தக் கேள்விகளுக்கு சுந்தரவள்ளி அளித்துள்ள பதில்களை, ஜூனியர் விகடன் இதழில் விரிவாக வாசிக்க > ஆர்.எஸ்.எஸ் பி.ஜே.பி-க்கு ஈடாக, நாம் தமிழர் நடந்துகொள்கிறது! - வெடிக்கும் சுந்தரவள்ளி https://www.vikatan.com/government-and-politics/politics/sundaravalli-interview-about-naam-tamilar-katchi

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 300K சிறப்புக் கட்டுரைகள்!

> ரூ.200 மதிப்பிலான் ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2mjxazv |