Published:Updated:

`இமயமலை செல்வோர் பெரியாரை விமர்சிப்பதா?'- பெயர் குறிப்பிடாமல் விமர்சித்த சுப.வீ

சுப.வீரபாண்டியன்
சுப.வீரபாண்டியன்

இயற்கையை அறிந்துகொள்வது அறிவியல். இயற்கை குறித்து நாம் தொடர்ந்து ஆராயும்போது அறிவியல் வளர்ச்சி ஏற்படுகிறது. அந்த அறிவியல் வளர்ச்சியை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுவே மானுட வளர்ச்சியாக அமையும்.

திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பாக நெல்லையில் `அறிவுத்தேடல்-6’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, `அறிவியல் அடிப்படையில், உண்மை அடிப்படையில் ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்துகளைக் கூட ஏற்றுக்கொள்ளாமல் இன்று மாறுபட்ட கருத்துகளை தொடர்ந்து கூற வேண்டும் என ஒரு கூட்டம் வந்துள்ளது. 

கூட்டம் நடந்த அரங்கம்
கூட்டம் நடந்த அரங்கம்

தற்போது கூட பொய்யான கருத்தை தமிழகத்தின் அரசியல் சூழலில், அரசியலுக்கு வராத அல்லது எப்போதுமே அரசியலுக்கு வராமலேயே முடித்துக்கொள்ளக் கூடியவர்கள் இல்லாத ஒன்றை நிறுவப்பார்க்கிறார்கள். அவர்களுக்கு இதுபோன்ற அறிவியல் தளத்தின் மூலம் வலுவான ஆதாரங்களை எடுத்து வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது’’ என்று பேசினார்.

திராவிட இயக்கத் தமிழ் பேரவையின் பொதுச்செயலாளரான சுப.வீரபாண்டியன் பேசுகையில், ``தந்தை பெரியார் கையில் ஏடும், சுடர் ஓளியும் வைத்திருப்பார். அந்தச் சுடர்தான்  அறிவுச்சுடர். 19-ம் நூற்றாண்டிலேயே தமிழில் எட்டு அறிவியல் இதழ்கள் வெளிவந்துள்ளன.  

Vikatan

இயற்கையை அறிந்துகொள்வது அறிவியல். அறிவியல் வளர்ச்சியே மானுட வளர்ச்சிக்குக் காரணம். இயற்கை பற்றி நாம் தொடர்ந்து அறியும்போது அறிவியல் வளர்ச்சி ஏற்படுகிறது. அந்த அறிவியல் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நாம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறுகளைக் கடந்து வந்திருக்கிறோம். மனிதன் எப்போது நிமிர்ந்து நடக்கத் தொடங்கினானோ அன்று முதல் மானுட வரலாறு தொடங்கியது. அதன் பின்னர் நெருப்பு, சக்கரம் ஆகியவற்றைக் கண்டுபிடித்து அடுத்த தளத்துக்கு நகர்ந்தான். தற்போதைய அறிவியல் வளர்ச்சியில் குளோனிங், ஜீன், நானோ என உயர்ந்திருக்கிறது’’ என்றார். 

அரங்கக் கூட்டம்
அரங்கக் கூட்டம்

தொடர்ந்து பேசிய சுப.வீரபாண்டியன், ``மக்களுக்காக ஓய்வின்றி உழைத்தவர், பெரியார். ஆனால், ஓய்வுக்காக இமயமலை செல்பவர்கள் எல்லாம் இன்று அவரை விமர்சிக்கிறார்கள். பெரியாரை விமர்சிக்கவும் தகுதி இருக்க வேண்டும்’’ என்று பெயர் குறிப்பிடாமல் விமர்சித்தார்.

பின் செல்ல