Published:Updated:

தி.மு.க-வில் தனி ஆவர்த்தனங்கள் அதிகரிப்பு: கடுப்பில் டி.ஆர்.பாலு!

தயாநிதி மாறன் மீது டி.ஆர்.பாலு வருத்தத்தில் இருக்கிறார். நாடாளுமன்றக் குழுத் தலைவராக இருந்து அவர் செய்யாத ஒரு காரியத்தை, சத்தமில்லாமல் தயாநிதி மாறன் செய்திருக்கிறார்.

anbil mahesh
anbil mahesh

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்பு விரைவில் வரப்போகிறது. செப்டம்பர் இறுதிக்குள் தேர்தலை முடித்துவிட மத்திய தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளதாம். வேலூர் தேர்தல் வெற்றிக்குப் பிறகு உற்சாகமாக இருக்கிறது தி.மு.க தலைமை. ஆனால், மாவட்டச் செயலாளர்கள் மத்தியில்தான் பீதி நிலவுகிறது. நாடாளுமன்றத் தேர்தல், வேலூர் தேர்தல், இப்போது இரண்டு தொகுதி இடைத்தேர்தல் என எல்லாவற்றுக்கும் மாவட்டச் செயலாளர்களையே தலைமை செலவழிக்கச் சொல்வதால், எல்லோரும் திணறுகிறார்கள். https://bit.ly/2z87Tv6

இதனிடையே, தி.மு.க இளைஞரணிக் கூட்டம் நட்சத்திர ஹோட்டலில் நடக்கவிருக்கிறது. அதை முரசொலியில் முக்கிய அறிவிப்பாகவே வெளியிட்டிருக்கிறார்கள். நட்சத்திர விடுதியில் நடத்தவேண்டும் என்று உதயநிதிக்கு ஐடியா கொடுத்ததே அன்பில் மகேஷ்தானாம். நிர்வாகிகளைக் கவரும் கார்ப்பரேட் உத்தியை கட்சிக்குள் அமல்படுத்தியிருக்கிறார்கள். நிர்வாகிகள் கூட்டம் என்று சொன்னாலும், பெரிதாக எந்த விவாதமும் இருக்காதாம். பிரமாண்டமான விருந்து உபசரிப்பு நடத்தி, இளம் உடன்பிறப்புகளை உற்சாகப்படுத்தவே இந்த அறிவிப்பு என்கிறார்கள்.

இது ஒருபக்கம் இருக்க, தயாநிதி மாறன் மீது டி.ஆர்.பாலு வருத்தத்தில் இருக்கிறார். நாடாளுமன்றக் குழுத் தலைவராக இருந்து அவர் செய்யாத ஒரு காரியத்தை, சத்தமில்லாமல் தயாநிதி மாறன் செய்திருக்கிறார். ஆகஸ்ட் 13-ம் தேதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பொருள்கள் அனுப்பிவைக்கும் நிகழ்ச்சி அறிவாலயத்தில் நடைபெற்றது.

''ஆளாளுக்கு நாட்டாமை செய்கிறார்களே!' என்று வெளியே நின்றவர்களிடம் புலம்பியிருக்கிறார்.

அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு, மூத்த நிர்வாகிகளை தலைவர் அறைக்குள் அழைத்துள்ளார் தயாநிதி மாறன். அங்கு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வுசெய்யப்பட்ட பிறகு 90 நாள்களில் செய்த மக்கள் பணிகளை விளக்கும், 'மக்கள் பணியில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர்' என்ற புத்தகத்தை ஸ்டாலின் கையில் கொடுத்து வெளியிடச் செய்திருக்கிறார். இப்படியொரு நிகழ்வு நடைபெறுவது டி.ஆர்.பாலுவுக்கே தெரியாதாம்.

'நாடாளுமன்றக் குழுத் தலைவராக இருந்து என்ன செய்ய... ஆளாளுக்கு நாட்டாமை செய்கிறார்களே!' என்று வெளியே நின்றவர்களிடம் புலம்பியிருக்கிறார். ஏற்கெனவே டெல்லியில் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி என தனி ஆவர்த்தனங்கள் அதிகமாகிவிட்ட நிலையில், அறிவாலயத்திலும் அது எட்டிப்பார்க்க ஆரம்பித்துவிட்டது.

anbil mahesh
anbil mahesh

கனிமொழி அறிவாலயம் பக்கம் வருவதேயில்லை. ஆனால், தொகுதிக்கு நன்றி சொல்லப் போன இடத்தில் சில சங்கடங்கள் அவருக்கு நேர்ந்திருக்கின்றன. குறிப்பாக, அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு கனிமொழிக்கு சரியாக ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்கிறார்கள். நாயுடு மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களைச் சந்தித்து கனிமொழி இன்னும் நன்றி சொல்லவில்லை, அதற்குக் காரணம், கீதா ஜீவன்தான் என்று சிலர் புலம்புகிறார்கள்.

- இவை, ஜூனியர் விகடன் மிஸ்டர் கழுகு பகுதியில் வெளியான தகவல்களில் சில. எடப்பாடி வெளிநாடு போகும்போது, முதல்வர் பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது என்பது பற்றி அமித் ஷா முன்னிலையில்தான் பெரிய பஞ்சாயத்தே நடந்திருக்கிறது. அதன் பின்னணியை விரிவாக வாசிக்க > மிஸ்டர் கழுகு: எடப்பாடி போகிறார் டூருக்கு... முதல்வர் பொறுப்பு யாருக்கு? https://www.vikatan.com/government-and-politics/politics/mr-kazhugu-politics-and-current-affairs-12

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/