Published:Updated:

நீட் தேர்வு : மாணவச் செல்வங்கள் மனம் தளர வேண்டாம்; சட்ட ரீதியான போராட்டம் தொடரும்- முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

தனுஷ் என்ற 19 வயது மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், சித்தா, ஆயுர்வேதா போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. இந்தச் சூழலில் நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த சேலம் மாவட்டம், கூளையூரைச் சேர்ந்த தனுஷ் என்னும் 19 வயது மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வின் அச்சம் காரணமாக மாணவர் தனுஷ் தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்திகள் வெளியான நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,

``இந்த தடவையும் பாஸ் ஆகலைன்னா!" - நீட் தேர்வு பயத்தால் சேலம் மாணவர் தற்கொலை!
ஸ்டாலின் அறிக்கை
ஸ்டாலின் அறிக்கை

``நீட் அச்சம் காரணமாக தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்ட செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் நீட் தேர்வில் நடந்த பல்வேறு மோசடிகளும் தற்கொலைகளும் ஒன்றிய அரசின் மனதை மாற்றவில்லை இது கல்வி மாநிலப் பட்டியலுக்கு வந்தே தீர வேண்டும் என்ற அவசியத்தை மேலும் வலுவடைய வைக்கிறது. நீட் தேர்வுக்கு எதிரான நமது சட்டப் போராட்டம் இப்போது தொடங்குகிறது. நாளை சட்டமன்றத்தில் நிரந்தர விலக்குபெறும் மசோதா நிறைவேற இருக்கிறது. அதை, அனைத்து மாநில முதலமைச்சர்களின் கவனத்துக்கும் கொண்டு சென்று ஆதரவு திரட்டி வெற்றி பெறுவோம். மாணவச் செல்வங்கள் மனம் தளர வேண்டாம் சிறந்த எதிர்காலத்தை உங்களுக்கு அமைத்துத் தரும் பெரும் பொறுப்பும் கடமையும் இந்த அரசுக்கு இருக்கிறது. நீட் தேர்வை ஒன்றிய அரசு நீக்கும் வரை நமது சட்ட ரீதியான போராட்டம் தொடரும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு