Published:Updated:

``காங்கிரஸ் 7 ஆண்டுக்காலம் ஆட்சியில் இல்லையென்றால் அழிந்துவிடுமா?" - கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி ( ட்விட்டர் )

`7ஆண்டு காலம் ஆட்சியில் இல்லை என்றால் காங்கிரஸ் அழிந்து விடுமா? நிச்சயமாக இல்லை படிப்பினைகளை கற்றுக்கொண்டு தவறுகளை சரிசெய்து கடின உழைப்பின் மூலம் மீண்டும் வருவோம்.' - கே.எஸ்.அழகிரி

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராக விச்சு லெனின் பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு கூட்டுத் தலைமை தேவை இல்லை. ராகுல் காந்தியை இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்க தமிழக காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றவும் தயாரக இருக்கிறது. 7ஆண்டு காலம் ஆட்சியில் இல்லை என்றால் காங்கிரஸ் அழிந்து விடுமா? நிச்சயமாக இல்லை படிப்பினைகளை கற்றுக்கொண்டு தவறுகளை சரிசெய்து கடின உழைப்பின் மூலம் மீண்டும் வருவோம்.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி
ட்விட்டர்

காங்கிரஸ் கட்சியால் மட்டும்தான் தேசத்தை ஒற்றுமையாக வழிநடத்த முடியும். ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியின் தலைவர் பதவி உட்பட சில இடங்களில் காங்கிரஸுக்கு கிடைக்க வேண்டிய பதவிகள் கிடைக்கவில்லை. இது தொடர்பாக தி.மு.க. தலைமையிடம் பேசி வருகிறோம். திருப்பூரில் காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்களில் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் உறுதிமொழி ஏற்கிறார்கள். வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் இந்தியா'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism