Published:Updated:

தமிழக காங்கிரஸ் தலைவர் ரேஸ்: கார்த்தி சிதம்பரம் `என்ட்ரி’யா?

கார்த்தி சிதம்பரம்

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியைப் பிடிப்பதற்குத் தலைவர்களிடையே நடக்கும் யுத்தத்தில், திடீரென கார்த்தி சிதம்பரம் 'என்ட்ரி'யாகியிருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழக காங்கிரஸ் தலைவர் ரேஸ்: கார்த்தி சிதம்பரம் `என்ட்ரி’யா?

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியைப் பிடிப்பதற்குத் தலைவர்களிடையே நடக்கும் யுத்தத்தில், திடீரென கார்த்தி சிதம்பரம் 'என்ட்ரி'யாகியிருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
கார்த்தி சிதம்பரம்

தமிழக காங்கிரஸ் தலைவராக இருக்கும் கே.எஸ்.அழகிரியின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. இதையடுத்து அந்த பதவியைப் பிடிப்பதற்குப் பலரும் முயற்சி செய்து வருகிறார்கள். குறிப்பாக ஜோதிமணி, செல்லகுமார், கார்த்தி சிதம்பரம், ரூபி மனோகரன், செல்வப்பெருந்தகை, மாணிக்கம் தாகூர் ஆகியோர் மிக தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்கள் என்பது தகவல்.

ஆனால் மறுபுறம் அழகிரி பதவியை விட்டுத்தருவதாக இல்லை என்கிறார்கள். இதற்காக ஆடுபுலி ஆட்டம் ஆடும் அழகிரி ஒவ்வொரு காயாக வீழ்த்திவருகிறாராம். இந்த பிரச்னையில் சிக்கி ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் 3 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து செல்வப்பெருந்தகை தலைமையில் ஒரு புதிய அணி உருவானது. அவர்கள் அழகிரி தலைமையில் நடந்த நிகழ்ச்சிகளைப் புறக்கணித்தனர்.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

மேலும் ரகசிய கூட்டம் நடத்திய செல்வப்பெருந்தகை குழுவினர், அழகிரிக்கு எதிராக பல்வேறு தகவல்களைத் திரட்டினர். பிறகு அதை கட்சியின் தலைமைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். இதனால் சத்தியமூர்த்தி பவன் கலவர பூமியாக மாறியிருக்கிறது. இந்த பிரச்னை அடங்குவதற்குள் கார்த்தி சிதம்பரம் தலைவர் பதவிக்காக நடக்கும் யுத்தத்தில் முழுமையாகக் களம் கண்டிருக்கிறார் என்கிறார்கள் கட்சி வட்டாரத்தில்.

முன்னதாக அவரின் ஆதரவாளர்கள் தமிழக காங்கிரஸுக்கு தலைமையேற்க வர வேண்டும் என்று கூறி சென்னையில் பேனர் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவர் சைலன்டாக தான் காய் நகர்த்தி வந்தார். தற்போது மெயின் சீனுக்கே வந்துவிட்டார். இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் இவ்வாறு கார்த்தி தலைவர் தேர்தலுக்கான ரேஸில் முழுமையாக 'எண்ட்ரி'யாகியிருப்பதால் வரும் நாள்களில் களேபரம் பெரிதாக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் கதர் சட்டைகள்.

சத்தியமூர்த்தி பவன் - காங்கிரஸ்
சத்தியமூர்த்தி பவன் - காங்கிரஸ்

இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் கார்த்தி சிதம்பரம், "சத்தியமூர்த்தி பவனில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக நடுநிலையாக, நேர்மையான முறையில் நடவடிக்கை எடுத்தாக வேண்டும். சம்பவத்தின்போது வெளியாள்கள் யாராவது வந்து தாக்குதலில் ஈடுபட்டார்களா என்று ஆய்வுசெய்ய வேண்டும். காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை முதலில் பலப்படுத்த வேண்டும். இக்கட்டான இந்தச் சூழலில் கட்சித் தலைவர் பதவியை எனக்கு அளித்தால், அதை ஏற்று சிறப்பாகச் செயல்பட நான் தயாராக இருக்கிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவர், "தமிழக காங்கிரஸ் தலைவரை எப்படியும் விரைவில் மாற்றி விடுவார்கள். எனவே தான் இந்த பதவியை பிடிப்பதற்குத் தலைவர்கள் பலரும் முயற்சி செய்து வருகிறார்கள். இருப்பினும் ஜோதிமணி, செல்லகுமார்க்கு தான் அதிக வாய்ப்பிருக்கிறது. கார்த்தி சிதம்பரம் தலைவர் பதவியை எனக்கு அளித்தால், அதை ஏற்று சிறப்பாகச் செயல்பட நான் தயாராக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

காங்கிரஸ்
காங்கிரஸ்

இதுபோல் ஏற்கனவே 2010, 2020-ம் ஆண்டில் சொல்லியிருக்கிறார். தற்போதும் சொல்கிறார். வரும் 2030-ம் ஆண்டிலும் சொல்லுவார். ஆனால் அவருக்கு வாய்ப்பு மிகவும் குறைவுதான். இதை அறிந்துகொண்டு தான் அவர் வெளியில் தெரியாமல் காய் நகர்த்தி வந்தார். தற்போது பலரும் வேகமாக முயற்சி செய்து வருவதை பார்த்துவிட்டு, இவரும் வேகமாக செயல்படத் தொடங்கியிருக்கிறார். இதனால் அவருக்கு பதவி கிடைக்கிறதோ இல்லையோ வரும் காலங்களில் பிரச்னை பெரிதாக வாய்ப்பிருக்கிறது" என்றனர்.