Published:Updated:

Tamil News Today: பாவனிப்பூர் தொகுதியில் மம்தா பானர்ஜி வெற்றி - முதல்வர் பதவிக்கு இருந்த தடை நீங்கியது!

மம்தா
Live Update
மம்தா

03-10-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

03 Oct 2021 5 PM

மம்தா பானர்ஜி வெற்றி!

Mamata Banerjee
Mamata Banerjee

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பாவனிப்பூர் தொகுதி இடைத் தேர்தலில் 58,389 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதனால், முதலமைச்சர் பதவியில் மம்தா பானர்ஜி தொடர்வதில் இருந்த தடை நீங்கியது.

" நந்திகிராம் தொகுதியில் என்னை வீழ்த்த திட்டமிடப்பட்ட சதிக்கு எதிரானது இந்த வெற்றி" என மம்தா தெரிவித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர், பிரியங்கா திப்ரேவால், " அனைத்து மக்களும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டிருந்தால் தேர்தல் முடிவு வேறாக இருந்திருக்கும். அதிக அளவில் கள்ள ஓட்டுகள் போடப்பட்டுள்ளது." என்றார்

03 Oct 2021 9 AM
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மம்தா பானர்ஜி முன்னிலை!

மம்தா
மம்தா

நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தோல்வியைத் தழுவினார். இருந்தபோதும் அவர் முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.

6 மாதகாலத்துக்குள் எம்எல்ஏ வாக வெற்றிபெற வேண்டும் என்பதால் அவருக்காக பவானிபூர் தொகுதி எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்தத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி களம் இறங்கினார். திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மம்தா பானர்ஜி, பாஜகவின் சார்பில் பிரியங்கா டிப்ரேவால் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர். செப்டம்பர் 30-ம் தேதி பவானிபூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 57% வாக்குகள் மட்டுமே பதிவானது. இன்று பவானிபூர் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியிருக்கிறது.