Published:Updated:

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தி.மு.க-வில் இணைந்தார்! NowAtVikatan

தோப்பு வெங்கடாசலம்
தோப்பு வெங்கடாசலம்

11-07-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

11 Jul 2021 11 AM

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தி.மு.க-வில் இணைந்தார்!

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க- வில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் பெருந்துறை தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டார் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம்.இந்நிலையில் அவர் தி.மு.கவில் இணையவுள்ளதாகச் செய்திகள் வெளியான நிலையில் இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவி்ல் இணைந்தார். ம.நீ.ம-லிருந்து விலகிய மகேந்திரன், பத்மப்ரியா உள்ளிட்ட பலர் அண்மையில் தி.மு.க-வில் இணைந்தனர். அதே போலவே தோப்பு வெங்கடாசலமும் தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க-வில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு