‘திருவள்ளுவருக்கும் எனக்கும் காவி சாயம் பூச நினைக்கிறது பா.ஜ.க. ஆனால், இருவருமே தப்பிவிடுவோம்’ என்று ரஜினிகாந்த் பேசியிருப்பது, இந்திய அரசியலில் புயலை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது பேச்சுக்கு ஆதரவு, எதிர்ப்பு என பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர். இந்த நிலையில், ரஜினிகாந்த்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்துவரும் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியனைச் சந்தித்துப் பேசினோம்.

“ ‘அ.தி.மு.க., தி.மு.க அல்லாத மாற்று அரசியலை உருவாக்குவதுதான் என்னுடைய நோக்கம்’ என்று அடிக்கடி சொல்கிறீர்கள். ஆனால், கடந்த காலங்களில் தி.மு.க-வுடனும் இணைந்து பயணித்திருக்கிறீர்களே?”

“தி.மு.க மட்டுமல்ல, பல கட்சிகளுடன் இணைந்து பயணித்திருக்கிறேன். நேர்மையான என்னால் அங்கெல்லாம் நீடிக்க இயலவில்லை. எனது 50 ஆண்டுக்கால பொதுவாழ்க்கையில், நான் சார்ந்திருந்த கட்சிகள் தி.மு.க., அ.தி.மு.க என மாறி மாறி கூட்டணிவைத்திருக்கலாம். ஆனால், எந்த நிலையிலும் இரட்டை இலைக்கோ, உதயசூரியனுக்கோ நான் வாக்களித்தது கிடையாது. என் இலக்கு பழுதில்லாமல் இருக்கிறது.”

“வைகோவை முதல்வர் ஆக்குவேன் என்றுகூட சொன்னீர்களே?”

“வைகோ என்னிடம், ‘தி.மு.க., அ.தி.மு.க-வுடன் எனக்கு ஒட்டுமில்லை... உறவுமில்லை. மாற்று அரசியலை வளர்த்தெடுப்பேன்’ என்று சொன்னார். அதனால்தான் அவரை ஆதரித்தேன். தயவுசெய்து வரலாற்றை நீங்கள் புரட்டிப் பார்க்கவேண்டும். தனிப்பட்ட முறையில், வைகோ போர்க்குணம்மிக்கவர். அவர் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால், ஊழல் கறை படியாமல் இருப்பார் என்ற எண்ணத்தில் அப்படிச் சொன்னேன். அப்போது அவருக்காக எல்லை மீறி என் சக்தியைப் பயன்படுத்தி நான் பாடுபட்டேன். இப்போது வைகோ எங்கேயோ போய்ச் சேர்ந்துவிட்டார். அது அவரது விருப்பம். அவரை நான் விமர்சிக்க மாட்டேன்.”

“இப்போது ரஜினியை நீங்கள் ஆதரிப்பதன் பின்னணி என்ன?”

“ஏற்கெனவே நான் சொல்லிவருவதுதான். தி.மு.க., அ.தி.மு.க இந்த இரண்டும் அல்லாத மாற்று அரசியலை வளர்த்தெடுக்க வேண்டும் என்பது மட்டுமே என் நோக்கம். இந்த நேரத்தில்தான் ரஜினிகாந்த் வருகிறார். அவருடன் பேசுகிறேன்... ‘எந்த நிலையிலும் தி.மு.க., அ.தி.மு.க-வுடன் ஒட்டும் உறவும் கிடையாது’ என்று அவரும் உறுதியாகச் சொல்கிறார். இந்த நிலைப்பாட்டிலிருந்து அவர் பிறழமாட்டார் என்பதை நான் உறுதியாகச் சொல்லிக்கொள்கிறேன். ‘ஒருவேளை ரஜினிகாந்த் வார்த்தை தவறிவிட்டால்...’ என்று நீங்கள் கேள்வி கேட்பீர்களேயானால், ‘ரஜினிகாந்த் பக்கத்தில் தமிழருவி மணியன் இருக்க மாட்டான்’ என நீங்களே ஒரு பதிலை எழுதிக்கொள்ளலாம்.”