Published:Updated:

ஐந்து மாநிலங்களுக்குப் புதிய ஆளுநர்கள் - தெலங்கானா ஆளுநராக தமிழிசை நியமனம்!

தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் 4 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழக பா.ஜ.க தலைவராக கடந்த ஆகஸ்ட் மாதம் 2014-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார் தமிழிசை சவுந்தரராஜன். ஏறக்குறைய கடந்த 5 ஆண்டுகளாக தமிழக தலைவராக இருந்து வந்தார். கடந்த மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டவர் தமிழிசை. மத்திய அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி, நீட் உள்ளிட்ட நடைமுறைகளின்போது, மத்திய அரசுக்கு எதிரான கருத்துகளுக்கு விளக்கமளித்தவர். முன்னதாக தமிழக பா.ஜ.க தலைவர் மாற்றப்பட உள்ளார் என்ற தகவல் பரவி வந்தது.

tamilisai
tamilisai

இந்நிலையில், தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை நியமிக்கப்பட்டுள்ளார். இதன்காரணமாக அவர், தமிழக பா.ஜ.க தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். புதிய தலைவரை நியமிக்கும் வரை, தற்காலிகத் தலைவர் நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. கரு.நாகராஜன், நயினார் நாகேந்திரன் ஆகிய இருவரில் ஒருவர் தமிழக பா.ஜ.க தலைவராக நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது. ஹிமாசலப் பிரதேச ஆளுநராக இருந்துவந்த கல்ராஜ் மிஸ்ரா மாற்றப்பட்டு, ராஜஸ்தான் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஹிமாசலப்பிரதேச ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா நியமிக்கப்பட்டிருக்கிறார். அதேபோல், கேரள ஆளுநராக இருந்துவந்த ஓய்வுபெற்ற நீதிபதி சதாசிவம் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக ஆரிஃப் முகமது கான் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு