Published:Updated:

`நினைத்த காரியம் நிறைவேறியது' - துர்கா ஸ்டாலினின் சமயபுரம் பாதயாத்திரை!

அந்தக் காரியம் நிறைவேறியதால் இரண்டு கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரையாகவே சென்று சமயபுரம் மாரியம்மனை வழிபட்டார். இந்த முறை நேருவின் குடும்பத்தினரும், துர்கா ஸ்டாலினுடன் வழிபாட்டில் கலந்துகொண்டனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழக முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், இரண்டு நாள்கள் திருச்சியில் ஆன்மிகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். நினைத்த காரியம் நிறைவேறியதால், இரண்டு கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரையாக வந்து சமயபுரத்தில் பிரார்த்தனையை நிறைவேற்றியிருக்கிறார்.

துர்கா ஸ்டாலின்
துர்கா ஸ்டாலின்

நெல்லையப்பர் கோயில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் இரண்டு இடங்களிலும் பிரார்த்தனையை முடித்துவிட்டு, நேற்று மாலை திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு வந்திருக்கிறார்.

அதுவும் சமயபுரம் டோல்பிளாசாலிருந்து பாதயாத்திரையாக இரண்டு கிலோமீட்டர் நடந்தே சென்று சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். அம்மனின் சந்நிதிக்கு முன்பு நின்று 15 நிமிடங்கள் கண்ணை மூடிப் பிரார்த்தித்தார்; அம்மனை தரிசனம் செய்ததோடு, தன் குடும்பத்தினர் பெயரில் விசேஷ அர்ச்சனையும் செய்தார்.

துர்கா ஸ்டாலின் மரியாதை செலுத்தினர்
துர்கா ஸ்டாலின் மரியாதை செலுத்தினர்
`துரைமுருகனுக்கு டோஸ்விட்ட முதல்வர் தொடங்கி செல்லம் கொஞ்சும் அ.தி.மு.க மாஜி வரை!'- கழுகார் அப்டேட்ஸ்

இன்று காலை ஸ்ரீரங்கம், வெக்காளியம்மன் கோயிலுக்கும் சென்று வழிபாடு நடத்தினார். அவருடன் கே.என்.நேருவின் மனைவி அவரது மகள்கள் பாதயாத்திரையில் கலந்துகொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என்ன வேண்டுதல் என்பது குறித்து துர்கா ஸ்டாலினின் நெருங்கிய தரப்பிடம் பேசினோம். ``அண்ணியார் திருச்சிக்கு வந்தால் கண்டிப்பாக சமயபுரம் மாரியம்மன், வெக்காளியம்மன் கோயில்களுக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அமாவாசையன்று மாரியம்மனை வழிபட்டு நேர்த்திக்கடன் வைத்தால் நினைத்த காரியம் நடக்கும் என்பது ஐதிகம்.

தூர்கா
தூர்கா

அதுபோல, நடந்து முடிந்த தேர்தல் பிரசாரத்தின்போது 'விடியலுக்கான முழக்கம்' என்கிற பெயரில் தி.மு.க மாநாடு சிறுகனூரில் நடைபெற்றது. அப்போது தன்னுடைய கணவரும், தி.மு.க தலைவர் ஸ்டாலின் முதல்வர் சீட்டில் அமர வேண்டும் என்று மாநாட்டுக்கு வந்தபோது வேண்டுதல் வைத்திருக்கிறார்.

தூர்கா ஸ்டாலின் கோயில் வழிபாடு
தூர்கா ஸ்டாலின் கோயில் வழிபாடு

அந்தக் காரியம் நிறைவேறியதால் இரண்டு கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரையாகவே சென்று சமயபுரம் மாரியம்மனை வழிபட்டார்" என்றனர். இந்த முறை நேருவின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர். ஆனால்,அன்பில் மகேஷின் குடும்பத்தினர் கலந்துகொள்ளவில்லை. அதனால் அவருடைய ஆதரவாளர்கள் கிசுகிசுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு