Published:Updated:

உ.பி: யோகி அமைச்சரவையில் நிஷாத் கட்சி... நேரில் வாழ்த்திய தமிழக மீனவப் பிரதிநிதிகள்!

சஞ்சய் நிஷாத்துடன் தமிழக மீனவ அமைப்பினர்
News
சஞ்சய் நிஷாத்துடன் தமிழக மீனவ அமைப்பினர்

உ.பி-யில் அமைச்சராகப் பொறுப்பேற்ற வட மாநிலத் தலைவருக்கு தமிழக மீனவப் பிரதிநிதிகள் மகிழ்ச்சி தெரிவித்திருப்பது கவனத்தை ஈர்த்திருக்கிறது.

Published:Updated:

உ.பி: யோகி அமைச்சரவையில் நிஷாத் கட்சி... நேரில் வாழ்த்திய தமிழக மீனவப் பிரதிநிதிகள்!

உ.பி-யில் அமைச்சராகப் பொறுப்பேற்ற வட மாநிலத் தலைவருக்கு தமிழக மீனவப் பிரதிநிதிகள் மகிழ்ச்சி தெரிவித்திருப்பது கவனத்தை ஈர்த்திருக்கிறது.

சஞ்சய் நிஷாத்துடன் தமிழக மீனவ அமைப்பினர்
News
சஞ்சய் நிஷாத்துடன் தமிழக மீனவ அமைப்பினர்

உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் நிஷாத் கட்சியின் சஞ்சய் நிஷாத் இடம்பெற்றுள்ளதற்கு தமிழக மீனவர் அமைப்பினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

சஞ்சய் நிஷாத்
சஞ்சய் நிஷாத்

இது குறித்து நம்மிடம் பேசிய தேசிய பாரம்பர்ய மீனவர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சேனாதிபதி சின்னதம்பி, "தமிழக மீனவர்களின் பிரச்னையை மத்திய அரசுக்குக் கொண்டு செல்ல உதவியவர் நிஷாத் கட்சியின் தலைவர் சஞ்சய் நிஷாத். இவர் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர், உள்நாட்டு மீனவர்கள் மற்றும் கடல்புற மீனவர்கள் நலனுக்காகக் கட்சி நடத்திவருகிறார்.

உ.பி தேர்தலில் பாஜக-வுடன் கூட்டணிவைத்து வெற்றிபெற்று தற்போது கேபினட் அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். அவரை நேரில் சென்று வாழ்த்தினோம். விரைவில் மத்திய மீன்வளத்துறை அமைச்சரை அழைத்துக்கொண்டு தமிழக மீனவர் பிரச்னையைத் தீர்க்கும் வகையில் மீனவர்களைச் சந்திக்க ராமேஸ்வரம் வருவதாகத் தெரிவித்துள்ளார்." என்றார்.

சஞ்சய் நிஷாத் - சின்னதம்பி
சஞ்சய் நிஷாத் - சின்னதம்பி

நிஷாத் கட்சியின் தமிழக நிர்வாகி பிரவீன்குமார் பரதவர் விடுத்துள்ள அறிக்கையில், "உத்தரப்பிரதேச அமைச்சரவையில் மீனவத் தலைவனுக்கு கேபினெட் மந்திரி பதவி கிடைத்துள்ளது.

தலைவர் சஞ்சய் நிஷாத் தமிழக மீனவர்களுக்கு அளித்துள்ள செய்தியில், தேர்தலில் நிஷாத் கட்சி வெற்றிபெற்றதற்கும், அமைச்சராகப் பதவியேற்றதற்கும் நேரிலும், தொலைபேசி மூலமாகவும் வாழ்த்துகளைத் தெரிவித்த தமிழகத்தைச் சேர்ந்த மீனவ உறவினர்கள் அனைவருக்கும் நன்றி.

சஞ்சய் நிஷாந்துடன் தமிழக மீனவ அமைப்பினர்
சஞ்சய் நிஷாந்துடன் தமிழக மீனவ அமைப்பினர்

கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தமிழகத்துக்குச் சுற்றுப்பயணம் செய்துவருகிறோம். கடலோர மீனவர்கள் மற்றும் உள்நாட்டு மீனவர்கள் என்னைச் சந்தித்து தீர்க்கப்படாத பல பிரச்னைகளை முறையிட்டுள்ளனர். மீனவர்களின் குறைகள் மற்றும் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண மத்திய அரசை ஒருங்கிணைத்துத் தகுந்த நடவடிக்கை எடுக்க எனது தலைமையிலான குழு விரைவில் தமிழகம் வரவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்’’ என பிரவீன்குமார் பரதவர் தெரிவித்துள்ளார்.

உ.பி-யில் அமைச்சராகப் பொறுப்பேற்ற வட மாநிலத் தலைவருக்கு, தமிழக மீனவப் பிரதிநிதிகள் மகிழ்ச்சி தெரிவித்திருப்பது கவனத்தை ஈர்த்திருக்கிறது.