Published:Updated:

`காந்தியவாதி, அகிம்சை வழியில் இருப்போம்'னு நினைக்காதீங்க' -சீமானைக் கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம்

``காங்கிரஸ்காரன்னா ஏதோ காந்தியவாதின்னு நினைச்சிக்கிட்டு இருக்கே. என்ன பேசுனாலும் காங்கிரஸ்காரன் பொறுத்துக்கிட்டு அகிம்சை வழியில் இருப்பான்னு நினைக்காதீங்க." - காங்கிரஸ் லெனின் பிரசாத்

`காந்தியவாதி, அகிம்சை வழியில் இருப்போம்'னு நினைக்காதீங்க' -சீமானைக் கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

``காங்கிரஸ்காரன்னா ஏதோ காந்தியவாதின்னு நினைச்சிக்கிட்டு இருக்கே. என்ன பேசுனாலும் காங்கிரஸ்காரன் பொறுத்துக்கிட்டு அகிம்சை வழியில் இருப்பான்னு நினைக்காதீங்க." - காங்கிரஸ் லெனின் பிரசாத்

Published:Updated:
கண்டன ஆர்ப்பாட்டம்

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பற்றி அவதூறாகப் பேசியதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானைக் கண்டித்து, இளைஞர் காங்கிரஸ் சார்பில் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சல மன்றம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் விச்சு (எ) லெனின் பிரசாத் தலைமையில் நடைபெற்ற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு சீமானை ‘பாலியல் குற்றவாளி, அரசியல் வியாபாரி, தீவிரவாதிகளை ஆதரிக்கும் இனத்துரோகி’ எனக் கடுமையாக விமர்சித்து கோஷங்களை முழங்கினர். மேலும், சீமானின் உருவப்படத்தை துடைப்பம், காலணிகளால் அடித்தும், சீமானின் உருவ பேனரைக் கொளுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

போராட்டத்துக்குப் பின்னர் இளைஞர் காங்கிரஸின் மாநிலத் தலைவர் லெனின் பிரசாத் நிருபர்களிடம் பேசினார். அப்போது, ``நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியையும், காங்கிரஸ் கட்சியின் தலைவர்களையும் அவதூறாகப் பேசிவருகிறார். இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். வயிற்றுப் பிழைப்புக்காக இலங்கைத் தமிழர்களைவைத்து அரசியல் செய்து, இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பணம் வசூல் செய்து சாப்புடுற நீ எங்கே, இந்த நாட்டுக்காக உயிர்த் தியாகம் செஞ்ச ராஜீவ் காந்தி எங்கே..! அவரைப் பத்தி பேச உனக்கு என்ன தகுதி இருக்கு... அதேபோல நேத்து எங்க நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியை ‘நான் என்ன அவங்க கையைப் புடிச்சி இழுத்தேனா’ன்னு கீழ்த்தரமா பேசியிருக்கே.

கண்டன ஆர்ப்பாட்டம்
கண்டன ஆர்ப்பாட்டம்

பிரபாகரன் என்கிற பெயரை வைத்துக்கொண்டு இளைஞர்களைத் தவறாக வழிநடத்திக்கிட்டு இருக்கே... பழ.நெடுமாறன், வைகோ போன்ற தலைவர்களெல்லாம் பிரபாகரனோட நெருக்கமாக இருந்தது ஊருக்கே தெரியும். ஆனா, நீ ஒரே ஒரு போட்டோவை மார்பிங் பண்ணிவெச்சுக்கிட்டு நான் ஈழத் தமிழர்களுக்காக போராடுறேன்னு சொல்லிக்கிட்டு இருக்கே. காங்கிரஸ்காரன்னா ஏதோ காந்தியவாதின்னு நினைச்சுக்கிட்டு இருக்கே. என்ன பேசுனாலும் காங்கிரஸ்காரன் பொறுத்துக்கிட்டு அகிம்சை வழியில் இருப்பான்னு நினைக்காதே. அதே காந்தி இருந்த கட்சியிலதான் நேதாஜியும் இருந்தாரு. நேதாஜியின் கொள்கைகளையும் எங்களுக்குக் கடைபிடிக்கத் தெரியும். சீமான் இத்துடன் அடாவடிப் பேச்சையும், அராஜகப் பேச்சையும் நிறுத்திக்கொள்ள வேண்டும். தொடர்ந்து காங்கிரஸையும், அதன் தலைவர்களையும் அவதூறாகப் பேசுகிற, விஜயலட்சுமி கேஸில் பாலியல் குற்றவாளியான சீமானைக் குழு அமைத்து தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism