Published:Updated:

ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் தஞ்சாவூர் ஆணையர்; சர்ச்சையாக்கும் திமுக-வினர்! - பின்னணி என்ன?

தஞ்சாவூர் ஆணையர் சரவணக்குமார்

தஞ்சாவூர் ஆணையர் சரவணக்குமார் ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் கலந்துகொண்டார். அங்கு பாஜக தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை, எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆகியோரை வரவேற்று அவர்களிடம் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்.

ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் தஞ்சாவூர் ஆணையர்; சர்ச்சையாக்கும் திமுக-வினர்! - பின்னணி என்ன?

தஞ்சாவூர் ஆணையர் சரவணக்குமார் ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் கலந்துகொண்டார். அங்கு பாஜக தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை, எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆகியோரை வரவேற்று அவர்களிடம் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்.

Published:Updated:
தஞ்சாவூர் ஆணையர் சரவணக்குமார்

ஆளுநர் ரவி ஏற்பாடு செய்த தேநீர் விருந்தில் கலந்துகொள்ளாமல் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக கூட்டணிக் கட்சிகள், தமிழக அரசு அதிகாரிகள் புறக்கணித்த நிலையில் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் அந்தத் தேநீர்விருந்தில் கலந்துகொண்டதுடன், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோருடன் பேசிக்கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார்
தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார்

தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக இருப்பவர் சரவணக்குமார். இவர் பதவியேற்றதிலிருந்தே நகரம் வளர்ச்சி பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார். ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியாத நிலையிலிருந்த மாநகராட்சி நிர்வாகத்தின் வருமானத்தைப் பெருக்கி, வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு சென்றார். குறிப்பாக மாநகராட்சிக்கு சொந்தமான தனிநபர்கள் கட்டுப்பாட்டிலிருந்த சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான இடங்களை மீட்டெடுத்தார். இதனால் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் ஆணையர் சரவணக்குமாருக்கு நற்பெயர் ஏற்பட்டதுடன் பலராலும் பாராட்டப்பட்டுவருகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், பழைய பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கடைகளை ஓப்பன் டெண்டர் முறையில் வாடகைக்கு விட்டது உள்ளிட்ட பல காரணங்களால் தஞ்சாவூர் தி.மு.க எம்.எல்.ஏ டி.கே.ஜி நீலமேகத்துக்கு சரவணக்குமாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஏற்பாடு செய்த தேநீர் விருந்தை முதலமைச்சர் ஸ்டாலின், திமுக கூட்டணிக் கட்சிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் நீட் தேர்வு ரத்து மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாத காரணத்தால் புறக்கணித்தனர்.

முதல்வர் ஸ்டாலின் - ஆளுநர் ரவி
முதல்வர் ஸ்டாலின் - ஆளுநர் ரவி

இந்த விவகாரம் தமிழக அரசியலில் விவாத்துக்கு உள்ளானது. இந்நிலையில் முதல்வர் புறக்கணித்த தேநீர் விருந்தில் தஞ்சாவூர் மாநகராட்சியில் ஆணையராக இருக்கும் சரவணக்குமார் கலந்துகொண்டார். இது குறித்த வீடியோ தஞ்சாவூர் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. எம்.எல்.ஏ டி.கே.ஜி நீலமேகத்தின் ஆதரவாளர்கள் இதை சர்ச்சையாக்கிவருவதாக மாநகராட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து தி.மு.க மாநகராட்சி கவுன்சிலரும், கட்சியின் மாநகர துணைச் செயலாளருமான நீலகண்டன் கூறுகையில், ``நீட் தேர்வு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து சட்டமன்றத்தில் மசோதாக்கள் நிறைவேற்றி, அவற்றை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதற்காக தமிழக ஆளுநர் ரவிக்கு அனுப்பட்டது. ஆனால் ஆளுநர் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லை. இதனால் ஆளுநர் தமிழக நலனுக்கு எதிராகச் செயல்படுவதாக பல்வேறு கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துவந்தனர்.

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்நிலையில் கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் பாரதியார் சிலை திறப்புவிழா மற்றும் தமிழ்ப் புத்தாண்டு தின நிகழ்ச்சிக்காகவும் ஆளுநர் ரவி தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்ததுடன், முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பலருக்கும் அழைப்பு கொடுத்தார். தமிழக நலனுக்கு எதிராகச் செயல்படும் அந்தத் தேநீர் விருந்தை ஸ்டாலின், கூட்டணிக் கட்சித் தலைவர்கள், தமிழக அரசு அதிகாரிகள் புறக்கணித்தனர்.

இந்நிலையில் தஞ்சாவூர் ஆணையர் சரவணக்குமார் ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் கலந்துகொண்டார். அதுமட்டுமில்லாமல் திமுக-வுக்கு எதிரான கருத்துகளைப் பேசிவரும் பாஜக, தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை, எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆகியோரை வரவேற்று அவர்களிடம் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். இது தொடர்பான காட்சிகள் தனியார் டி.வி ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.

திமுக கவுன்சிலர் நீலகண்டன்
திமுக கவுன்சிலர் நீலகண்டன்

தமிழக அரசுக்கு கீழ் செயல்படும் அரசு அதிகாரி ஒருவர் முதல்வர் புறக்கணித்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது எங்களைப் போன்ற திமுக-வினருக்கு அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது. ஆக்கிரமிப்பு அகற்றுதல், கடைகளை வாடகைக்குவிட்டது போன்றவற்றில் அவர் திமுக அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டார். ஒன்றிய பாஜக அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டுவருவதாக நாங்கள் ஏற்கெனவே கூறிவந்தோம்.

அதேபோல் தஞ்சாவூர் மாநகராட்சியில் நடைபெறும் பணிகளுக்கு கோவை, திருப்பூர் பகுதியிலிருந்து ஒப்பந்ததாரர்களை அழைத்துவந்து பணிகளைச் செய்துவருகிறார். அவருக்கு நெருக்கமான கம்பெனிகளுக்கு ஒப்பந்தப் பணிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இது போன்ற பலவற்றில் தன்னிச்சையாகச் செயல்பட்டுவருகிறார். ஆணையர் சரவணக்குமார் தேநீர் விருந்தில் கலந்துகொண்டது, தஞ்சாவூர் மாநகராட்சியில் நிலவும் குளறுபடி உள்ளிட்ட அனைத்தையும் முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்துக்கு எடுத்துச் சென்றுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் ஆணையர்
ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் ஆணையர்

மாநகராட்சி அலுவலர்கள் மட்டத்தில் பேசினோம். ``பெற்றோரை இழந்த மாணவன் ஒருவர் டாக்டருக்குப் படிப்பதற்கு ஆணையர் சரவணக்குமார் உதவி செய்துவருகிறார். ஒரு பக்கம் வறுமை, மறுபக்கம் ஆதரவுக்கு யாரும் இல்லை என்ற நிலையில் முறைசாராக் கல்வி மூலம் வேலை செய்துகொண்டே ப்ளஸ் டூ மற்றும் நீட் தேர்வில் பாஸ் செய்து டாக்டருக்குப் படிக்கும் அளவுக்கு வளர்ந்த அந்த மாணவனுக்கு ஆறுதலாக இருந்து அனைத்து உதவிகளையும் செய்துவருகிறார். இதனால் அந்த மாணவன் ஆணையரை அப்பா ஸ்தானத்தில் வைத்து நெகிழ்ந்து வருகிறார்.

பாரதியார் குறித்து அந்த மாணவன் எழுதிய கட்டுரை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் பரிசு கொடுப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. ``எனக்குனு யாரும் இல்லை. பரிசளிப்பு விழாவில் கலந்துகொள்ள நீங்க வரணும்" என அந்த மாணவன் அழைத்தன் பேரில் ஒரு கார்டியனாகச் சென்று அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது மரியாதைக்காக அண்ணாமலை உள்ளிட்டவர்களைச் சந்திக்க நேர்ந்தது. எம்.எல்.ஏ டி.கே.ஜி நீலமேகம் தரப்பினர் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இதைச் சமூக வலைதளங்களில் பரப்பி சர்ச்சையை ஏற்படுத்திவருகின்றனர்” எனத் தெரிவித்தனர்.

ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் தஞ்சாவூர் ஆணையர்; சர்ச்சையாக்கும் திமுக-வினர்! - பின்னணி என்ன?

இது குறித்து ஆணையர் சரவணக்குமாரிடம் பேசினோம். ``ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் கலந்துகொண்டது குறித்து மேலிடத்துக்கு விளக்கமாகத் தெரிவித்துவிட்டேன்” என்பதோடு முடித்துக்கொண்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism