Published:Updated:

தஞ்சை: நிர்வாகிகள் நியமன சர்ச்சை! - எம்.எல்.ஏ-வுக்கு எதிராகக் கொதிக்கும் உடன்பிறப்புகள்

ஸ்டாலின்
ஸ்டாலின் ( ம.அரவிந்த் )

`திருவையாறு தொகுதிக்குட்பட்ட தன்னுடைய ஆதரவாளர்களையே ஒன்றியச் செயலாளர்களாக நியமனம் செய்துள்ளார்’ எனத் தி.மு.க நிர்வாகி ஒருவரே புகார் கூறுகிறார்.

தஞ்சாவூரில் தி.மு.க-வில் உள்ள ஒன்றியங்கள் பிரிக்கப்பட்டு ஒன்றியச் செயலாளர் நியமிக்கப்பட்டதில் எம்.எல்.ஏ-வும் தெற்கு மாவட்டச் செயலாளருமான துரை.சந்திரசேகர் தன்னிச்சையாகச் செயல்பட்டதாகப் புகார் வாசிக்கிறார்கள் உடன்பிறப்புகள். மேலும் அவர், தன் சுயலாபத்தை நோக்கமாகக் கொண்டே ஒன்றியச் செயலாளர்களை நியமனம் செய்துள்ளதாகவும் தி.மு.க தரப்பைச் சேர்ந்த சிலரே புகார் கூறி வருகின்றனர்.

தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயம்
தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயம்

தி.மு.க-வில் உள்ள ஒன்றியங்கள் அனைத்தும் பிரிக்கப்பட்டு ஒன்றியச் செயாலளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். 10 ஊராட்சிகளை உள்ளடக்கி ஒவ்வொரு ஒன்றியமும் பிரிக்கப்படுகிறது. கட்சியின் நிர்வாக வசதிக்காக இதை தி.மு.க தலைமை செயல்படுத்தி வருகிறது. அதன்படி தஞ்சாவூர் ஒன்றியம் ஏற்கெனவே மூன்று ஒன்றியங்களாகப் பிரிக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.

இந்நிலையில், தற்போது கூடுதலாக 1 ஒன்றியம் என மொத்தம் நான்கு ஒன்றியங்களாகப் பிரிக்கப்பட்டு ஒன்றியச் செயலாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளரும், திருவையாறு தொகுதி எம்.எல்.ஏ-வுமான சந்திரசேகர், கட்சியினரை ஆலோசிக்காமல், தன்னிச்சையாகச் செயல்படுவதுடன், தன் சட்டமன்ற தொகுதியான திருவையாறு தொகுதிக்குட்பட்ட தன்னுடைய ஆதரவாளர்களையே 4 ஒன்றியங்களுக்கும் செயலாளர்களாக நியமனம் செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

துரை.சந்திரசேகர்
துரை.சந்திரசேகர்

இதுகுறித்து தி.மு.க கிளைக்கழகச் செயலாளரான நாஞ்சிக்கோட்டை ராஜா என்பவர் கூறுகையில், ``தி.மு.க-வில் தஞ்சாவூர் ஒன்றியம் 4 ஒன்றியங்களாகப் பிரிக்கப்பட்டு ஒன்றியச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், தெற்கு ஒன்றியத்துக்கு அருளானந்தசாமி, வடக்கு முரசொலி, கிழக்கு செல்வக்குமார், மேற்கு உலகநாதன் ஆகியோரை ஒன்றியச் செயாலளராக துரை.சந்திரசேகர் நியமனம் செய்துள்ளார். இதில், ஏற்கெனவே ஒன்றியச் செயலாளராக இருந்த மூன்று பேர் அந்தப் பதவியில் தொடர்கின்றனர். கிழக்கு ஒன்றியத்துக்குப் புதிய செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தி.மு.க:`பொதுச் செயலாளர் பதவி; திடீர் கோபம் ஏன்?’ - கொதித்த துரைமுருகன்

இதில், தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 6 ஊராட்சிகள் மற்றும் திருவையாறு சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட 4 ஊராட்சிகளை இணைத்து கிழக்கு ஒன்றியம் பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கு எம்.எல்.ஏ-வும் தெற்கு மாவட்டச் செயலாளருமான துரை.சந்திரசேகர், தன்னுடைய ஆதரவாளரான செல்வக்குமார் என்பவரை ஒன்றியச் செயலாளராக நியமனம் செய்துள்ளார். இவர் திருவையாறு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டாலின் மற்றும் டி.கே.ஜி நீலமேகத்துடன் ராஜா
ஸ்டாலின் மற்றும் டி.கே.ஜி நீலமேகத்துடன் ராஜா

இதேபோல் வடக்கு, மேற்கு என இரண்டுக்கும் ஒன்றியச் செயலாளர்களாக இருப்பவர்களும் திருவையாறு சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்தவர்களே. எம்.எல்.ஏ சந்திரசேகர் கட்சியின் வளர்ச்சிக்காக உழைக்காமல், தன் ஆதரவைப் பெருக்கிக் கொள்ளவும், வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில், தனது வெற்றியை மட்டுமே கவனத்தில் கொண்டும் இதைச் செய்துள்ளார். தி.மு.க-வின் வெற்றியே, தன் வெற்றி என்பதை அவர் மறந்துவிட்டார்.

தஞ்சாவூர்: `எம்.எல்.ஏ மகனுக்கு பதவி!’ - அதிருப்தியில் பேராவூரணி அ.தி.மு.க நிர்வாகிகள்

மேலும், ஒன்றியச் செயலாளர்களை நியமிக்கும்போது முக்கிய நிர்வாகிகள் கட்சியின் வளர்ச்சிக்காக உழைக்கும் அந்தந்த ஊராட்சிகளைச் சேர்ந்தவர்கள் என யாரையும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்து தனக்கான ஆதரவாளர்களை, தன் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டவர்களை ஒன்றியப் பொறுப்பில் அமர வைத்துள்ளார்.

தி.மு.க தலைவர் ஸ்டாலின்
தி.மு.க தலைவர் ஸ்டாலின்

நாஞ்சிக்கோட்டை ஊராட்சி, தமிழகத்தில் உள்ள பெரிய ஊராட்சிகளில் ஒன்று. 24 கிளைக் கழகங்கள், 30 பூத்துகளை உள்ளடக்கி தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க வெற்றி பெறுவதற்கு காரணமான ஊராட்சியாகவும் இருக்கிறது. மேலும், கிழக்கு ஒன்றியத்தில் இணைக்கப்பட்ட தஞ்சை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 ஊராட்சிகளில் 64 கிளைக் கழகங்களில் 80,000 வாக்குகள் உள்ளன.

ஆனால், திருவையாறு சட்டமன்றத் தொகுதியிலிருந்து கிழக்கு ஒன்றியத்தில் சேர்க்கப்பட்ட 4 ஊராட்சிகளில் 13 கிளைக் கழகங்களையும் சேர்த்து சுமார் 5,000 வாக்குகள் மட்டுமே உள்ளது. அதிலிருந்து ஒருவரை ஒன்றியச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளது எந்த விதத்தில் நியாயம். இவை தலைமையின் கண்காணிப்பில் நடக்கிறதா எனத் தெரியவில்லை.

தஞ்சாவூர் அதிர்ச்சி: டாஸ்மாக் கடை வாசலில் இறைச்சிக் கடைக்காரர் வெட்டிக் கொலை!

உடனடியாக, கட்சித் தலைமை, இதில் தலையிட்டு மறுபரிசீலனை செய்து, தகுதி வாய்ந்த தஞ்சை சட்டமன்ற தொகுதிக்குள் வரும் ஒருவரை கிழக்கு ஒன்றியச் செயலாளராக நியமனம் செய்ய வேண்டும். அ.தி.மு.க, அ.ம.மு.க, பி.ஜே.பி உள்ளிட்ட கட்சிகள் அழைத்தும் செல்லாமல் தி.மு.க-வை உயிராக நினைத்து பல தொண்டர்கள் செயல்பட்டு வருகின்றனர். கட்சியின் வளர்ச்சிக்காக உழைக்கின்றனர். அவர்களின் சின்னச் சின்ன உணர்வுகளுக்கு மதிப்பளித்து நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்கள் செயல்பட வேண்டும்.

மேலும், கிளைக் கழகச் செயலாளர்கள் நியமனம் முடிவதற்குள்ளேயே ஒன்றியச் செயலாலர்களை அறிவித்துள்ளது எப்படி எனத் தெரியவில்லை. ஒன்றியச் செயலாளர் நியமனம் குறித்து தஞ்சை தொகுதி எம்.எல்.ஏ, டி.கே.ஜி நீலமேகத்திடம் முறையிட்டதற்கு, `என்னிடம் ஆலோசிக்காமல் சந்திரசேகர் இதைச் செய்திருக்கிறார்’ என வருத்தப்பட்டார்.

தி.மு.க நிர்வாகி ராஜா
தி.மு.க நிர்வாகி ராஜா

இப்படி தன்னிச்சையாகவும், தன் சுயலாபத்துக்காகவும் தன் தொகுதியைச் சேர்ந்தவர்களையே மூன்று ஒன்றியத்துக்கும் ஒன்றியச் செயலாளர்களாக நியமித்துள்ள சந்திரசேகரிடம் தளபதி ஸ்டாலின் விளக்கம் கேட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சந்திரசேகரின் செயலை நான் தலைமைக்கு புகாராகவும் அனுப்ப உள்ளேன். இதை, எனக்காகச் செய்யவில்லை. கட்சியின் வளர்ச்சிக்காக இதைச் செய்ய உள்ளேன்’’ என்று தெரிவித்தார்.

இதுகுறித்து எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரிடம் பேசினோம். ``கட்சி பணிகளை எளிதாகச் செய்வதற்காக ஒன்றியங்கள் பிரிக்கப்பட்டுள்ளதுடன், ஆக்டிவாக இருப்பவர்கள் ஒன்றியச் செயலாளராகவும் நியமனம் செய்யப்படுள்ளனர். இதில், செல்வக்குமார் பாரம்பர்யமான தி.மு.க குடும்பத்தைச் சேர்ந்தவர். நன்றாக வேலை செய்யக்கூடியவர். அதன் அடிப்படையில் அவருக்குப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

`கே.என்.நேரு vs அன்பில் மகேஷ்' -  போஸ்டர் அரசியல்; திருச்சி தி.மு.க-வில் புதிய கலகம்?

என் ஆதரவாளர் என்பதால் கொடுக்கப்பட்டது எனச் சொல்வது தவறு. அத்துடன் மாநகரச் செயலாளர் அறிவிக்கப்படும்போது கிழக்கு ஒன்றியம், அதில் சேர்ந்துவிடும். அது புரியாமல் சிலர் பேசி வருகின்றனர். கட்சிக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும் தலைமை கொடுக்கும் உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டு அதைக் கடைப்பிடித்து, என் பணியைச் செய்து கொண்டிருக்கிறேன்’’ என்பதோடு முடித்துக் கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு