Published:Updated:

`அரிசி,மளிகைப் பொருள்கள்,காய்கறிகள்’ - தொழிலாளர்கள் துயர்துடைக்கும் தஞ்சை முன்னாள் எம்.பி

பரசுராமன்
பரசுராமன் ( ம.அரவிந்த் )

``உதவி என்பது நான் புதிதாகச் செய்வதல்ல. தொடக்கத்திலிருந்தே கஷ்டப்படும் மக்களுக்கு உதவி வருகிறேன். என் சக்திக்கு என்ன முடியுமே அதை எந்த சத்தமும் இல்லாமல் செய்து வருகிறேன்.

கொரோனா ஊரடங்கால் வேலையிழந்து வருமானமின்றி தவித்த குடும்பங்கள் மற்றும் தெருவோரம் வசிக்கும் ஆதரவற்றவர்கள் என பலருக்கு தன்னார்வர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் நேசக்கரம் நீட்டி உதவி செய்து அவர்களின் துயரை துடைக்கக் கூடிய செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

உதவும் பரசுராமன்
உதவும் பரசுராமன்

இந்தநிலையில் அளும் அதி.மு.க அரசு உணவு பொட்டலம் கொடுப்பதாக இருந்தாலும் அரசின் மூலமே கொடுக்க வேண்டும் நேரடியாக எந்த நிவாரணப் பணிகளிலும் ஈடுபடக்கூடாது என அறிவிப்பை வெளியிட்டது. பேரிடர் சூழல் நிலவும் இந்த நேரத்திலும் கூட தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் நற்பெயரை வாங்கிவிட கூடாது என்ற நோக்கத்திலேயே அரசு இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

தி.மு.க தலைவர் ஸ்டாலின் உட்பட பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். களத்திலிருந்து வறியவர்களின் துயர் துடைத்து கொண்டிருந்த தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்களுக்கும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் அரசின் இந்த அறிவிப்பு கண்டித்த தக்கது என்றும் குரல் கொடுத்தனர்.இதையடுத்து அ.தி.மு.க அரசு தன்னார்வலர்களுக்குத் தடை விதிக்கவில்லை என விளக்கமளித்தது. மேலும், தமிழகத்தின் பல பகுதிகளிலும் அ.தி.மு.கவை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் களத்தில் நிவாரண பணிகளை செய்து வருகின்றனர்.

கொரோனா பணியில் பரசுராமன்
கொரோனா பணியில் பரசுராமன்

தஞ்சாவூர் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அ.தி.மு.கவின் தஞ்சை மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளருமான பரசுராமன் பம்பரமாக சுழன்று பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரண பொருள்களை வழங்கி வருகிறார். 25 கிலோ அரிசி, மளிகை மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பொருள்களை கிட்டதட்ட 500 குடும்பங்களுக்கு மேல் வழங்கியுள்ளதுடன் இன்னும் பலருக்கு வழங்கி கொண்டிருக்கிறார்.இதே போல் தஞ்சையில் உள்ள தூய்மை பணியாளர்களையும் நேரில் அழைத்து உதவிக் கொண்டிருக்கிறார்.

எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு சீட் பெற்று விட வேண்டும் என எண்ணி மற்ற அ.தி.மு.க நிர்வாகிகளை பின்னுக்கு தள்ளிவிட்டு நிவாரண செயல்களில் முன்னுக்கு நின்று செயல்பட்டு வருகிறார் என அவரின் ஆதரவாளர்கள் சிலர் பேசி கொள்கின்றனர். இந்தநிலையில் மக்கள் மத்தியில் அவருடைய செயல் பாராட்டை பெற்று வருவதும் குறிபிட தக்கது.

அ.தி.மு.க முன்னாள் எம்.பி பரசுராமன்
அ.தி.மு.க முன்னாள் எம்.பி பரசுராமன்

இதுகுறித்து பரசுராமனிடம் பேசினோம். ``உதவி என்பது நான் புதிதாகச் செய்வதல்ல. தொடக்கத்திலிருந்தே கஷ்டப்படும் மக்களுக்கு உதவி வருகிறேன். என் சக்திக்கு என்ன முடியுமே அதை எந்த சத்தமும் இல்லாமல் செய்து வருகிறேன். ஒரத்தநாடு பகுதிகளில் உள்ள பல கிராமங்களில் வருமானமின்றி தவித்த பல குடும்பங்களுக்கும், இதே போல் தஞ்சாவூர் பகுதியில் உள்ள நீலகிரி ஊராட்சி, பிள்ளையார் பட்டி ஊராட்சி உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு 25 கிலோ அரிசி, மளிகை பொருள்கள் மற்றும் காய்கறிகளை வழங்கியுள்ளேன்.

`முழு ஊரடங்கு; 3 நாள்களுக்கு முன்னரே அறிவிப்பு!’- கொரோனா பரவலைத் தடுக்க தஞ்சை அதிகாரியின் அதிரடி

மேலும், தூய்மை பணியாளர்களை அழைத்து அவர்களுக்கு தேவையானதையும் கொடுத்துள்ளேன்.தங்கள் குடும்பத்தை மறந்து தன்னலத்தோடு உழைக்கும் அவர்கள் எந்த கஷ்டமும் இல்லாமல் இருக்க வேண்டும்,உரிய மரியாதை செய்ய வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு உதவினேன். என்னுடைய அலுவலகத்திற்கு உதவி கேட்டு தினமும் பலர் வருகின்றனர். அவர்களுக்கு வேண்டியதையும் உடனடியாக செய்து கொடுத்து வருகிறேன்.என்னுடைய இந்த நிவாரண பணிகள் எந்த தங்கு தடையுமின்றி தொடர்ந்து கொண்டிருக்கிறது’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு