Published:Updated:

மத்திய பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் தமிழ் மன்னன் ராஜேந்திர சோழன் படம்!  

ராஜேந்திர சோழனின் படம்
ராஜேந்திர சோழனின் படம்

தமிழகத்தை ஆண்ட ராஜேந்திர சோழன், வட நாட்டின் மீது படையெடுத்துச் சென்று கங்கை வரை தனது ஆதிக்கத்தை நிலைநாட்டினான். கடற்படையைக் கட்டியமைத்த அந்த மன்னின் படம் மத்திய பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் எம்.பி-யான தருண் விஜய், தமிழ் மீது ஆர்வம் கொண்டவர். குறிப்பாக, திருக்குறள் மீது பற்றுக் கொண்ட அவர், திருவள்ளுவர் குறித்து வட இந்தியர்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கங்கைக் கரையில் திருவள்ளுவர் சிலையை நிறுவினார். 

அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் தருண் விஜய்
அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் தருண் விஜய்

தன்னைச் சந்திக்கும் பிரபலங்கள் மற்றும் தான் சந்திக்கும் முக்கிய நபர்களுக்கு திருவள்ளுவர் சிலையையும் திருக்குறளையும் பரிசளிப்பதை தருண் விஜய் வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த நிலையில், கடந்த 6-ம்  மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவருக்குத் தமிழகத்தை ஆண்ட மன்னன் ராஜேந்திர சோழனின் படத்தைப் பரிசளித்துள்ளார்.

தமிழகத்தை ஆண்ட ராஜராஜ சோழன் சிறந்த நிர்வாகியாக விளங்கினார். தஞ்சை பெரிய கோயிலைக் கட்டியதன் மூலம் தமிழரின் கட்டடக் கலையின் நுணுக்கங்களை உலகம் வியக்கச் செய்தார். அத்துடன், தண்ணீர் மேலாண்மையிலும் தன்னிறைவு பெற்று விவசாயத்தைச் செழிக்கச் செய்து, `சோழ வளநாடு சோறுடைத்து’ என அழைக்கப்படக் காரணமாக இருந்தார்.

ராஜராஜ சோழனின் படம் பரிசளிப்பு
ராஜராஜ சோழனின் படம் பரிசளிப்பு

ராஜராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழன், தந்தையின் வழியைப் பின்பற்றி தன் நாட்டின் எல்லையை விரிவுபடுத்தினார். கிழக்கிலும் மேற்கிலும் உள்ள கடற்பகுதிகளைக் கைப்பற்றினார். அதனால், நாட்டிலேயே முதன்முதலாகக் கடற்படையை உருவாக்கி, கடல் கடந்து சென்று போரிட்டு பல தேசங்களையும் வென்றெடுத்தார்.

வடக்கில் கங்கைக் கரை வரையிலும் தன் எல்லையை விரிவுபடுத்திய ராஜேந்திர சோழன், கங்கையில் இருந்து புனித நீர் எடுத்து வந்து கோயிலுக்குக் குடமுழுக்குச் செய்தார். அத்தகைய சிறப்புக்குரிய சோழ மன்னன் ராஜேந்திர சோழனின் படத்தைப் பாதுகாப்பு அமைச்சருக்கு நினைவுப்பரிசாகத் தருண் விஜய் வழங்கினார். 

``காஷ்மீர் குழந்தைகளும் தேசியவாதிகள்தான்!” - என்.சி.சி முகாமில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

இது பற்றி அறிந்த பிரதமர் மோடி டெல்லியில் உள்ள பாதுகாப்புத் துறை அலுவலகத்தில், தேசங்களை வென்ற அந்தத் தமிழ் மன்னனின் படத்தை மாட்டி வைக்குமாறு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கைக் கேட்டுக் கொண்டுள்ளார். அதனால், அவரது அலுவலகத்தில் அந்தப் படம் மாட்டப்பட்டுள்ளது. இது பற்றி அறிந்ததும், தமிழ் அறிஞர்கள் பலரும் பிரதமரையும் முன்னாள் எம்.பி தருண் விஜய்யையும் பாராட்டி வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு