Published:Updated:

``தேசிய அளவில் மாற்றம் வரும், அதை யாராலும் தடுக்க முடியாது!" - தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்

சந்திரசேகர் ராவ்

``தேசிய அளவில் மாற்றம் வரும், அதை யாராலும் தடுக்க முடியாது. இந்தியா மாறும்... இந்தியா மாற வேண்டும்" - தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்

``தேசிய அளவில் மாற்றம் வரும், அதை யாராலும் தடுக்க முடியாது!" - தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்

``தேசிய அளவில் மாற்றம் வரும், அதை யாராலும் தடுக்க முடியாது. இந்தியா மாறும்... இந்தியா மாற வேண்டும்" - தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்

Published:Updated:
சந்திரசேகர் ராவ்

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், 2024 நாடாளுமன்றத் தேர்தலை மையமாகவைத்து எதிர்க்கட்சித் தலைவர்களைத் தொடர்ந்து சந்தித்துவருகிறார். இந்த நிலையில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தெலங்கானா தலைநகர் ஹைதராபாத் சென்றிருந்தபோது பிரதமரை வரவேற்காமல் முன்னாள் பிரதமர் தேவகவுடா, அவரின் மகன் குமாரசாமி ஆகியோரைச் சந்திக்க சந்திரசேகர் ராவ் பெங்களூரு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ``பரம்பரைக் கட்சிகளால் நாட்டின் இளைஞர்களுக்கு அரசியலில் வாய்ப்பு கிடைக்கவில்லை. குடும்பக் கட்சிகள், தங்கள் வளர்ச்சியை மட்டுமே நினைக்கின்றன. ஏழை மக்களைப் பற்றிக் கவலைப்படாத இந்தக் கட்சிகள், ஒரே குடும்பம் எவ்வளவு காலம் ஆட்சியில் இருக்க முடியுமோ, அவ்வளவு கொள்ளையடிக்கலாம் என்பதில்தான் அவர்களின் கவனம் இருக்கிறது. இந்தக் குடும்ப அடிப்படையிலான கட்சிகள் தங்கள் சொந்த வங்கிக் கணக்குகளை நிரப்புவதில் மும்முரமாக உள்ளன" எனக் கடுமையாகச் சாடியிருந்தார்.

மோடி
மோடி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நிலையில், பிரதமரின் விமர்சனத்துக்கு மறைமுகமாகத் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், ``நிறைய விதவிதமான உரைகள் உள்ளன, இதற்கு முன்பு பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. இன்னும் பல வாக்குறுதிகள் அளிக்கப்படுகின்றன. ஆனால் உண்மைநிலை என்ன... பல தொழில்கள் மூடப்படுகின்றன, மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்துவருகிறது, பணவீக்கம் அதிகரித்துவருகிறது... விவசாயிகள், பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் மகிழ்ச்சியாக வாழ முடியவில்லை.

மேலும், சமீபத்தில் தேவகவுடாவையும் குமாரசாமியையும் சந்தித்தோம், எல்லாவற்றையும் விவாதித்தோம்.

கே.சந்திரசேகர் ராவ்
கே.சந்திரசேகர் ராவ்

தேசிய அளவில் மாற்றம் வரும், அதை யாராலும் தடுக்க முடியாது. இந்தியா மாறும்... இந்தியா மாற வேண்டும். நாம் எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும். நாட்டின் நிலையை மாற்ற வேண்டும். இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குப் பிறகு பரபரப்பான செய்திகளை இந்தியா பார்க்கும்.

அடுத்து யார் மத்தியில் ஆட்சிக்கு வருவார்கள் என்று என்னால் சொல்ல முடியாது, ஆனால் இந்தியாவுக்கு ஒரு புகழ்பெற்ற எதிர்காலம் உள்ளது என்று மட்டும் என்னால் கூற முடியும். இந்தியா மாறுவதைக் காணவேண்டிய கடமை நாட்டின் இளைஞர்கள், அறிவாளிகள், பத்திரிகையாளர்களுக்கு உள்ளது" என பதிலளித்துள்ளார்.

மோடி
மோடி

2024-ல் பாஜக-வுக்கு எதிராக ஐக்கிய முன்னணியை ஒருங்கிணைப்பதற்காக நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களை கேசிஆர் சந்தித்துவருகிறார். சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோரைச் சந்தித்தார்.

அடுத்து முதல்வர் மம்தா பானர்ஜியைச் சந்திக்க அவர் மேற்கு வங்கத்துக்கும், முதல்வர் நிதிஷ் குமார், எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவைச் சந்திக்கப் பீகாருக்கும் செல்லவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism