Published:Updated:

மகாராஷ்டிரா: முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயைச் சந்தித்து வாழ்த்து கூறிய பால் தாக்கரே மருமகள்-நடந்தது என்ன?

ஷிண்டேயைச் சந்தித்த ஸ்மிதா

மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரே மருமகள் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

மகாராஷ்டிரா: முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயைச் சந்தித்து வாழ்த்து கூறிய பால் தாக்கரே மருமகள்-நடந்தது என்ன?

மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரே மருமகள் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

Published:Updated:
ஷிண்டேயைச் சந்தித்த ஸ்மிதா

மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரே மகன் ஜெய்தேவ் தாக்கரே, தன் தந்தையின் குடும்பத்திலிருந்து விலகியிருந்தார். அதோடு அவர் தன் மனைவி ஸ்மிதா தாக்கரேயிடமிருந்தும் விலகியே இருந்தார். ஆனால் ஸ்மிதா தாக்கரே பால் தாக்கரேவுக்கு மிகவும் நெருக்கமானவராகவே கடைசிவரை இருந்தார். ஸ்மிதா திரைப்படங்களைத் தயாரிப்பது, சமூக சேவையில் ஈடுபடுவது போன்ற வேலைகளில் ஈடுபட்டுவருகிறார். பால் தாக்கரே மறைவுக்குப் பிறகு ஸ்மிதா தாக்கரேவுக்கு கட்சியில் செல்வாக்கு இல்லை. இதனால் உத்தவ் தாக்கரே முதல்வராகப் பதவியேற்றபோதுகூட ஸ்மிதா தாக்கரே கலந்துகொள்ளவில்லை.

ஷிண்டேயைச் சந்தித்த ஸ்மிதா
ஷிண்டேயைச் சந்தித்த ஸ்மிதா

தற்போது சிவசேனா இரண்டாக உடைந்துவிட்டது. சிவசேனா அதிருப்தி கோஷ்டியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே பாஜக-வுடன் இணைந்து ஆட்சியமைத்திருக்கிறார். அவரை பால் தாக்கரே மருமகள் ஸ்மிதா தாக்கரே சந்தித்துப் பேசினார். சிவசேனாவில் பிளவு ஏற்பட்ட பிறகு தாக்கரே குடும்பத்திலிருந்து ஒருவர் ஏக்நாத் ஷிண்டேயைச் சந்திப்பது இதுவே முதன்முறை. இந்தச் சந்திப்புக்குப் பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த ஸ்மிதா தாக்கரே, ``மிகவும் பழைய சிவசேனா தொண்டர் முதல்வராகியிருக்கிறார். அவருக்கு வாழ்த்து கூறவே வந்தேன். கடந்த பல ஆண்டுகளாக ஏக்நாத் ஷிண்டேயையும், அவரின் பணிகளையும் எனக்கு நன்றாகத் தெரியும். எங்கள் இருவருக்கும் ஒருவரை ஒருவர் நீண்ட நாள்களாகத் தெரியும். அதனால் அவரைச் சந்திக்க வந்தேன். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு” என்றார்.

சிவசேனாவில் பிளவு ஏற்பட்டிருப்பது குறித்து கேட்டதற்கு, ``எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது. நான் சமூக சேவகர். நான் அரசியலில் இல்லை. எனவே, அதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது” என்று தெரிவித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!