Published:Updated:

சொந்தக் கட்சிக்கே வேட்டுவைக்கிறாரா டெல்லி பிரதிநிதி?! - குமுறும் குமரி அ.தி.மு.க

ஒருவேளை மீண்டும் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால், அமைச்சர் பதவிக்கு தனக்கு யாரும் போட்டியாக வந்துவிடக் கூடாது என்கிற எண்ணத்தில் கன்னியாகுமரியிலுள்ள தொகுதிகளை பா.ஜ.க-விடமே ஒப்படைத்துவிடுமாறு டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் கட்சிக் தலைமையிடம் வற்புறுத்துகிறாராம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரியில், மாநிலத்தையே ஆளும் அ.தி.மு.க-வுக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர்கூட இல்லை. ராஜ்யசபா எம்.பி விஜயகுமார் மட்டும்தான் மாவட்டத்திலுள்ள கட்சிக்கான மக்கள் பிரதிநிதி!

இதனால், வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் கண்டிப்பாக ஜெயித்தே தீர வேண்டும் என்ற எண்ணம் ர.ர-க்களிடம் உள்ளது. தேசியக் கட்சிகளின் கோட்டை குமரி என்பதால், பா.ஜ.க-வும் தன் பங்குக்குத் தொகுதிகளைக் கோருகிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய குமரி மாவட்ட அ.தி.மு.க-வினர், ``அ.தி.மு.க-வில் தளவாய்க்கும் லோக்கல் நிர்வாகிகளுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். கன்னியாகுமரி அல்லது நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றைக் கேட்டு தளவாய்சுந்தரமும், அ.தி.மு.க கலைப்பிரிவு இணைச் செயலாளரும், திரைப்பட இயக்குநருமான நாஞ்சில் அன்பழகனும் மனு போட்டுள்ளனர். தளவாய் பிள்ளைமார் சமூகத்தையும், நாஞ்சிலார் அய்யாவழி நாடார் சமூகத்தையும் சேர்ந்தவர்கள்.

முன் எப்போதும் இல்லாத வகையில் மண்ணின் மைந்தர் கோஷம் இந்தத் தேர்தலில் அதிகமாகவே எதிரொலிக்கிறது. அதிலும், குமரியில் இம்முறை நாடார் மட்டுமே வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டுமென போர்க்கொடி தூக்குகிறார்கள் கட்சியினர். சாமித்தோப்பு அய்யாவழி பாலபிரஜாபதி அடிகளாரும்கூட நாடார் சமூகத்துக்கு மட்டுமே சீட் கொடுக்க வேண்டும் என்கிறார்.

நாஞ்சில் அன்பழகன்
நாஞ்சில் அன்பழகன்

இந்தக் கடும் எதிர்ப்பால் நிலைகுலைந்துபோன தளவாய், தனது சமூகத்தைச் சார்ந்த, முதல்வர் எடப்பாடியின் வலதுகரமாகத் திகழும் நபரைப் பிடித்து தூது அனுப்பி, தொகுதியைக் கேட்டு நச்சரிக்கிறாராம். ஒருவேளை இந்தத் தேர்தலில் ஜெயித்து மூன்றாவது முறையாக அ.தி.மு.க ஆட்சி அமைந்தால், அதில் தான் மட்டுமே மாவட்ட அமைச்சராக அமர வேண்டும் என்ற ஆசையால், `கன்னியாகுமரி, நாகர்கோவில் தவிர மீதமுள்ள பத்மநாபபுரம், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய நான்கு தொகுதிகளையும் பா.ஜ.க-வுக்குக் கொடுத்துவிடுங்கள்’ என அந்த சேலம் பிரதிநிதி மூலம் முதல்வரிடம் தூது விட்டிருக்கிறாராம் தளவாய்" என்பதோடு முடித்துக்கொண்டார்.

குமரி: பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்படவுள்ள தொகுதிகள் எவையெவை... யாருக்கு சீட்?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு