குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக தமிழகத்தின் பல பகுதிகளிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், திரைக்கலைஞர்கள், எழுத்தாளர்கள் எனப் பலரும் போராட்டங்களில் கலந்துகொண்டு தங்களது எதிர்ப்பைப் பதிவுசெய்துவருகின்றனர். அந்த வகையில், மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளரும் நாகப்பட்டினம் எம்.எல்.ஏ-வுமான தமிமுன் அன்சாரி, கடந்த பத்து நாள்களாக தமிழகம் முழுவதும் நடைபெறும் போராட்டங்களில் கலந்துகொண்டு மத்திய அரசையும் தமிழக அரசையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். மறுபுறம், `இந்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அ.தி.மு.க-வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்விதமாக, அ.தி.மு.க-வின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வான தமிமுன் அன்சாரி, அந்தப் பதவியிலிருந்து விலகவேண்டும்’ எனவும் சில குரல்கள் ஒலிக்கின்றன. இந்த நிலையில், அவரைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘‘குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு இந்திய குடிமக்கள் பயப்படத் தேவையில்லை’ என மத்திய அரசு சொன்ன பிறகும் போராட்டங்கள் ஏன்?’’

‘‘மக்கள் தற்போது போராடுவது குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக மட்டுமல்ல... தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) எனப்படும் கறுப்புச் சட்டத்துக்கு எதிராகவும்தான். தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டத்தில், தான் இந்த நாட்டின் குடிமகன் என்பதை ஆவணங்கள் மூலமாக ஒருவர் நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபிக்கத் தவறிய இஸ்லாமி யர்கள் அல்லாத மாற்று மதத்தினருக்கு, குடியுரிமை சட்டத்திருத்தத் தின் மூலம் குடியுரிமை கிடைத்துவிடும். ஆனால், இஸ்லாமியர்களின் நிலை அவ்வளவுதான். அதனால்தான் பெரியளவில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. பல ஆண்டுகளாக இந்த மண்ணில் வாழ்ந்துவரும் இஸ்லாமிய மக்களை, திட்டமிட்டுத் தனிமைப்படுத்தும் வேலை இது.

பிற நாடுகளிலிருந்து அகதிகளாக வரும் இஸ்லாமிய மக்களை மட்டும் இந்த அரசு ஏற்க மறுப்பதை எந்த ஓர் இந்தியனும் தமிழனும் விரும்பவில்லை. நாங்கள் ஒன்றும் சீனாவில், மலேசியாவில், ஜரோப்பாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை கொடுக்கச் சொல்லவில்லை. பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இஸ்லாமிய மக்கள் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர்கள்தானே; இந்தியாவின் பூர்வகுடி மக்கள்தானே! ஏதோ ஒரு சூழ்நிலையால் அங்கு சென்று, தற்போது தன் தாய் நிலமான இந்தியாவுக்குத் திரும்ப விரும்பும் அவர்களுக்கு குடியுரிமை வழங்க மறுப்பது ஏன் என்பதே எங்கள் கேள்வி.’’

‘‘இங்கு இருக்கும் கட்சிகளும் அமைப்புகளும் தேவையில்லாத அச்சத்தை இஸ்லாமிய மக்கள் மத்தியில் பரப்புவதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறதே?’’

‘‘இந்தப் போராட்டங்களை அரசியல் கட்சிகளோ, இயக்கங்களோ, தலைவர்களோ முன்னெடுக்கவில்லை. மக்கள்தான் முன்னின்று நடத்திவருகிறார்கள். இது மக்களின் குடியுரிமைக்காக, வாழ்வுரிமைக்காக, ஒற்றுமைக் காக மக்களே நடத்திவரும் போராட்டம். அதனால்தான் இது வீரியமிக்கப் போராட்டமாக மாறியிருக்கிறது. கடந்த முப்பது ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு போராட்டத்தை நாடு கண்டதில்லை. இங்கே நடைபெறும் போராட் டங்கள் இஸ்லாமியர்களுக்கு ஆதரவானது மட்டுமல்ல... முப்பது ஆண்டுகளாக இங்கே வாழ்ந்துவரும் ஈழத்தமிழர்களுக்குக் குடியுரிமை மறுக்கப்பட்டிருப்பதற்கு எதிரானதும்கூட. தவிர, நேபாளம், பூடானில் கடும் ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகிவரும் கிறிஸ்துவர்களுக்கு ஆதரவானதும் கூட. அகதிகளாக வருபவர்களிடம் பாகுபாடு காட்டக் கூடாது என்பதே எங்களின் கருத்து.’’

‘‘ஒருசில இஸ்லாமிய இயக்கங்கள், அமைப்புகளின் தலைவர்கள் இந்தச் சட்டத்துக்கு ஆதரவாகப் பேசிவருகின்றனரே?’’

‘‘துரோகிகள் எல்லா சமூகங்களிலும் இருப்பதுபோல் இஸ்லாமிய சமூகத்திலும் இருக்கின்றனர். அவர்களை வரலாறு அம்பலப்படுத்தும்.’’

‘‘நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக அ.தி.மு.க வாக்களித்திருக்கிறதே...’’

‘‘அ.தி.மு.க தலைமை எடுத்திருக்கும் இந்த முடிவை கட்சியின் பல அமைச்சர்களும் எம்.எல்.ஏ-க்களும் தொண்டர்களுமே ஏற்க வில்லை. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் கொள்கைகளுக்கு எதிராக, ஒரு வரலாற்று துரோகத்தைச் செய்திருக்கிறார்கள். அ.தி.மு.க-வும் பா.ம.க-வும் வாக்களிக்கா விட்டாவில் இந்தச் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேறியிருக்காது.

இவர்கள் செய்த பாவத்துக்கு ஒரே ஒரு பரிகாரம் இருக்கிறது. நிதிஷ்குமார், நவீன் பட்நாயக், மம்தா, பினராயி விஜயன், உத்தவ் தாக்கரே போன்றோர் அறிவித்ததுபோல், இந்தச் சட்டத்தை நம் மாநிலத்தில் அனுமதிக்க மாட்டோம் என்கிற முடிவை தமிழக முதல்வரும் எடுக்கவேண்டும்.’’

‘‘நீங்கள் இதுகுறித்து முதல்வரிடம் கோரிக்கை வைத்தீர்களா?’’

‘‘அமைச்சர்கள் சிலரிடம் பேசினேன். அவர் களால் முழுமையாக என் கருத்தை நிராகரிக்க முடியவில்லை. ஆனால், யாருடைய பேச்சையும் கேட்கும் நிலையில் இன்றைய அ.தி.மு.க-வின் தலைமை இல்லை. வழக்குகளிலிருந்தும் நெருக்கடிகளிலிருந்தும் தப்பிப்பதற்காகத்தான் இந்தப் பாதகச் செயலைச் செய்திருக்கிறார்கள்.’’

‘‘போராட்டங்களுக்கு ஆதரவாக, நீங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று சிலர் சொல்லிவருகிறார்களே?’’

‘‘எங்கள் சமூகத்தின் செல்வாக்குமிக்க இயக்கங்களோ தலைவர்களோ சொன்னால் அதில் ஒரு நியாயம் இருக்கும். ஆனால், தற்போது கோரிக்கைவைப்பவர்கள் பா.ஜ.க-வின் ஊதுகுழல்கள். நான் பதவி விலகவேண்டும் என்று அ.தி.மு.க தலைமை சொன்னால்கூட, அதில் ஒரு நியாயம் இருக்கிறது. பா.ஜ.க-வை திருப்திப்படுத்தவே இதுபோன்ற கோரிக்கை களை முன்வைக்கிறார்கள்.

எம்.எல்.ஏ-வாக இருந்தால் இன்னும் கூடுதல் வலுவோடு போராட முடியும். சட்டமன்றத்தில் பேச முடியும். அது தெரிந்தும், அவர்கள் வேண்டுமென்றே இதுபோன்ற கருத்துகளை அவர்களின் சுயலாபத்துக்காகப் பேசி வருகிறார்கள்.’’