Published:Updated:

தேனி: திமுக பெண் கவுன்சிலர்களின் கமிஷன் ஆடியோ விவகாரம்; தங்க தமிழ்செல்வன் விளக்கம்

தங்க தமிழ்செல்வன்

நகராட்சித் தலைவர் ரேணுப்ரியா, தி.மு.க கவுன்சிலர் சந்திரகலா ஈஸ்வரி ஆகியோரின் ஆடியோ விவகாரத்தில், தங்க தமிழ்செல்வன் விளக்கமளித்திருக்கிறார்.

தேனி: திமுக பெண் கவுன்சிலர்களின் கமிஷன் ஆடியோ விவகாரம்; தங்க தமிழ்செல்வன் விளக்கம்

நகராட்சித் தலைவர் ரேணுப்ரியா, தி.மு.க கவுன்சிலர் சந்திரகலா ஈஸ்வரி ஆகியோரின் ஆடியோ விவகாரத்தில், தங்க தமிழ்செல்வன் விளக்கமளித்திருக்கிறார்.

Published:Updated:
தங்க தமிழ்செல்வன்

தேனி-அல்லிநகரம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் 19 வார்டுகளை தி.மு.க கைபற்றியது. தி.மு.க நகரப் பொறுப்பாளர் பாலமுருகன் சேர்மன் பதவிக்காக ஆரம்பம் முதல் செயல்பட்டு வந்த நிலையில், சேர்மன் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் வடபுதுபட்டி ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த தனது மனைவி ரேணுப்ரியாவை தேனி-அல்லிநகரம் நகராட்சி 10-வது வார்டில் போட்டியிட வைத்தார். அவரும் 20-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ரேணுப்ரியா-பாலமுருகன்
ரேணுப்ரியா-பாலமுருகன்

இதையடுத்து அல்லிநகரம் நகராட்சித் தலைவர் பதவியை கட்சி தலைமை காங்கிரஸுக்கு ஒதுக்கிய நிலையில், 10-வது வார்டில் போட்டியிட்ட ரேணுப்பிரியா பாலமுருகன் அல்லிநகரம் நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்றினார். இதன்காரணமாக ரேணுப்ரியாவின் கணவரும் 20-வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதையடுத்து, தேனி நகரப் பொறுப்பாளர் பாலமுருகன் கட்சியிலிருந்து நீக்கி தலைமை உத்தரவிட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேனி-அல்லிநகரம் நகராட்சி கூட்டம்
தேனி-அல்லிநகரம் நகராட்சி கூட்டம்

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நகர்மன்றத் தலைவர் ரேணுப்பிரியா மற்றும் 29-வது வார்டு கவுன்சிலர் சந்திரகலா ஈஸ்வரி ஆகியோர் பேசும் ஆடியோ வெளியானது. அந்த ஆடியோவில் பணம் பேரம் சம்பந்தமாக பேசியிருந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக தேர்தலுக்கான பணப்பட்டுவாடா மாவட்டப் பொறுப்பாளர் தங்க தமிழ்செல்வனால் நடத்தப்பட்டது எனவும் கூறப்பட்டிருந்தது.

தங்கதமிழ்ச்செல்வன்
தங்கதமிழ்ச்செல்வன்

இந்நிலையில் தேனி தி.மு.க வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் தங்க தமிழ்செல்வன் தலைமையில் தி.மு.க கவுன்சிலர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 21-வது மற்றும் 23-வது வார்டு உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொள்ளவில்லை. அதேபோல, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பாலமுருகன் கூட்டத்தில் கலந்துகொண்டார். ஒரு மணி நேரத்திற்கு மேலாக கூட்டம் நடைபெற்றது.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த தங்க தமிழ்செல்வன், ``நகராட்சித் தலைவர் ரேணுப்ரியா மற்றும் தி.மு.க கவுன்சிலர் சந்திரகலா ஈஸ்வரி ஆகியோரின் ஆடியோ விவகாரத்தில், அவர்கள் பேசியது போல் எந்தப் பணமும் மாவட்டச் செயலாளரான என்னிடம் கொடுக்கப்படவில்லை. அதை தேனி அல்லிநகரம் நகராட்சித் தலைவர் ரேணு ப்ரியாவும் உறுதி செய்திருக்கிறார். ஆடியோவில் பேசிய சம்பந்தப்பட்ட தி.மு.க கவுன்சிலர் மற்றும் நகராட்சித் தலைவி ஆகியோர் தவறு செய்திருக்கும் பட்சத்தில் அவர்கள் மீது கட்சி ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

சந்திரகலா ஈஸ்வரி
சந்திரகலா ஈஸ்வரி

தேனி அல்லிநகரம் நகராட்சித் தலைவர் பதவி தி.மு.க சார்பில் காங்கிரஸுற்கு ஒதுக்கப்பட்டது. அதில் தி.மு.க கவுன்சிலர் நகராட்சித் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். இன்னும் தலைமை கழகத்தின் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. தலைமை முடிவுக்கு பிறகு மாற்றம் இருக்கவும் வாய்ப்புள்ளது. அந்த பேச்சுவார்த்தை முடியும் வரையில் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க உறுப்பினரான ரேணு ப்ரியாவே நகராட்சித் தலைவராக தொடர்வார்... அவர் தலைமையிலே அடுத்த நகர்மன்றக் கூட்டம் நடைபெறும். ஆடியோ விவகாரம் மற்றும் தேனி அல்லிநகரம் நகராட்சித் தலைவர் பதவி ஆகியவற்றில் கட்சித் தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவதாக அனைத்து தி.மு.க கவுன்சிலர்களும் உறுதி அளித்துள்ளனர்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism