Published:Updated:

`ஆணையர் மனைவி - நான் கணவர்'... கடன் இல்லாத மாநகராட்சி என தஞ்சாவூர் மேயர் பெருமிதம்

தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன்

``உலக வங்கியிலிருந்த ரூ.5 கோடி கடன் மற்றும் சிறு சிறு கடன்கள் என அனைத்துக் கடன்களையும் அடைத்திருக்கிறோம். இதன் மூலம் தமிழகத்திலேயே தஞ்சாவூர் மாநகராட்சி கடன் இல்லாத மாநகராட்சியாக உருவெடுத்துள்ளது.”

`ஆணையர் மனைவி - நான் கணவர்'... கடன் இல்லாத மாநகராட்சி என தஞ்சாவூர் மேயர் பெருமிதம்

``உலக வங்கியிலிருந்த ரூ.5 கோடி கடன் மற்றும் சிறு சிறு கடன்கள் என அனைத்துக் கடன்களையும் அடைத்திருக்கிறோம். இதன் மூலம் தமிழகத்திலேயே தஞ்சாவூர் மாநகராட்சி கடன் இல்லாத மாநகராட்சியாக உருவெடுத்துள்ளது.”

Published:Updated:
தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன்

``தஞ்சாவூர் மாநகராட்சி தமிழகத்திலேயே கடன் இல்லாத மாநகராட்சியாக உருவெடுத்துள்ளது’’ எனப் பெருமிதத்துடன் தெரிவித்த மேயர் சண்.ராமநாதன், `ஆணையர் எனக்கு மனைவி மாதிரி, நான் அவருக்குக் கணவர் மாதிரி, நல்ல குடும்பமாக இருந்து செயல்பட்டதால் மாநகராட்சியின் தரம் உயர்த்தப்பட்டிருப்பதாக’ப் பேசியிருக்கிறார்.

மேயர் சண்.இராமநாதன்,
ஆணையர் சரவணக்குமார்
மேயர் சண்.இராமநாதன், ஆணையர் சரவணக்குமார்

தஞ்சாவூர் மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயர் சண்.ராமநாதன் தலைமை வகித்தார். துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் வார்டிலுள்ள குறைகள், தேவையான திட்டங்கள் குறித்துப் பேசினர்.

பின்னர் மேயர் சண்.ராமநாதன் கூறுகையில், ``தமிழகத்திலுள்ள 20 மாநகராட்சிகளில் முதன்முதலாக தஞ்சாவூர் மாநகராட்சிதான் கடன் இல்லாத மாநகராட்சியாக உருவெடுத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகள் ஆட்சிசெய்த அ.தி.மு.க கடும் நிதிச்சுமையை வைத்திருந்தது. நான் மேயராகப் பொறுப்பேற்ற பிறகு புதிதாகக் கட்டப்பட்ட வணிக வளாகங்கள் பொது ஏல முறையில் வெளிப்படையாக டெண்டர்விடப்பட்டதன் மூலம் வருமானம் கிடைத்தது.

தஞ்சாவூர் 
மாநகராட்சி
தஞ்சாவூர் மாநகராட்சி

அந்த நிதியில் உலக வங்கியிலிருந்த ரூ.5 கோடிக் கடன் மற்றும் சிறு சிறு கடன்கள் என அனைத்துக் கடன்களையும் அடைத்திருக்கிறோம். இதன் மூலம் தமிழகத்திலேயே தஞ்சாவூர் மாநகராட்சி கடன் இல்லாத மாநகராட்சியாக உருவெடுத்திருக்கிறது. கடன் இல்லாததால் இனி வரும் வருவாய் புதிய திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும்.

ஆணையர் எனக்கு மனைவி மாதிரி, அவருக்கு நான் கணவர் மாதிரி. நல்ல குடும்பமாக இருந்து செயல்பட்டதால்தான் மாநகராட்சியின் தரம் உயர்தப்பட்டிருக்கிறது. தமிழகத்திலேயே சிறந்த மாநகராட்சியாக இதை உருவாக்க வேண்டும். அதற்காக உழைத்துக்கொண்டிருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

ஆணையர் சரவணக்குமார்
ஆணையர் சரவணக்குமார்

கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு வரை ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்க முடியாமல் கடும் நிதிச்சுமையில் சிக்கித் தவித்தது தஞ்சாவூர் மாநகராட்சி. ஆணையர் சரவணக்குமார் பொறுப்பேற்ற பிறகு தனித்திறனுடன் செயல்பட்டார். கடும் எதிர்ப்புகளை மீறி ஆக்கிரமிப்புகளை அகற்றினார். வணிக வளாகங்களை ஓப்பன் டெண்டர் முறையில் வெளிப்படையாக ஏலம்விட்டார். அதன் மூலம் வருமானம் பெருகியது.

முதலில் ஊழியர்களுக்குச் சம்பளம் போடப்பட்டது. இப்போது வரை தடையில்லாமல் ஊழியர்களுக்குச் சம்பளம் செல்கிறது. ஓய்வுபெற்றவர்களுக்கு கொடுக்கப்படாமல் இருந்த ஓய்வூதியப் பலன்களை கொடுக்கப்பட்டன. இந்த தீபாவளிக்கு ஊழியர்கள் அனைவருக்கும் முன்பணம் கொடுக்கப்பட்டது. அதைப் பெற்றுக்கொண்ட ஊழியர்கள் ஆணையரை மனதார வாழ்த்திய நெகிழ்ச்சி சம்பவமும் அலுவலகத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது.