Published:Updated:

தஞ்சை: `கிளை செயலாளர் பதவிக்கு ரூ. 1 கோடியா?!’ - தி.மு.க போஸ்டர் ஏற்படுத்திய பரபரப்பு

போஸ்டர்
போஸ்டர் ( ம.அரவிந்த் )

`கிளை செயலாளர் பதவிக்கு இரண்டு தப்பினர் போட்டி போட்டனர். அதில் ஒரு தரப்பினரிடம் முருகானந்தம் தரப்பினர், இந்த முறை நீங்க கொஞ்சம் விட்டு கொடுங்க. அரசியல் செய்வது முன்ன மாதிரி கிடையாது’ எனக் கூறியிருக்கிறார்கள்.

``தி.மு.க.வில் கிளை செயலாளர் பொறுப்புக்கு ரூ. 1 கோடி இருந்தால் தான் வர முடியும் என ஒன்றிய செயலாளர் சொல்வது உண்மையா?” என தஞ்சாவூரில் தி.மு.க தலைவர் ஸ்டாலினிடம் கேட்பது போல் ஒட்டப்பட்ட போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுதியுள்ளது.

தி.மு.கவை சேர்ந்த சிலர் ஒட்டிய போஸ்டர்
தி.மு.கவை சேர்ந்த சிலர் ஒட்டிய போஸ்டர்

தஞ்சாவூர் அருகே உள்ள பூதலூர் பகுதி தி.மு.கவின் வடக்கு மாவட்டத்திலும், திருவையாறு சட்டமன்ற தொகுதிக்குள்ளும் வருகிறது. தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளரான துரை.சந்திரசேகர், திருவையாறு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் தி.மு.கவில் உள்ள ஒன்றியங்கள் பிரிக்கப்பட்டு ஒன்றிய செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பூதலூர் தெற்கு ஒன்றியத்தின் ஒன்றிய செயலாளராக மனோகரன் என்பவர் நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து கிளை செயலாளர் பதவிக்கான நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற்றது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் பூதலூர் பகுதியில் தி.மு.கவிவை சேர்ந்த சிலரால் போஸ்டர் ஒன்று ஒட்டப் பட்டிருந்தது. `கழகத் தலைவர் தளபதி அவர்களுக்கு ஓர் கோரிக்கை’ என தொடங்கும் அந்த போஸ்டரில், `தி.மு.கவின் கிளை செயலாளர் பதவிக்கு ரூ. 1 கோடி இருந்தால் தான் வரமுடியும் என ஒன்றிய செயலாளர் சொல்வது உண்மையா?,

கிளை செயலாளர் பதவிகளை பூதலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் முருகானந்தம் விலை பேசி விற்பது தலைமைக்கு தெரியுமா, ஒன்றியத்தின் 32 கிளைகளை பதிவு செய்யாமலும், பல கிளைச் செயலாளர்கள் பதவிகளை விட்டு எடுத்தும் கட்சி நடத்தும் ஒன்றிய செயலாளருக்கு ஆதரவாக எம்.எல்.ஏ., இருக்கிறாரா?. இது குறித்த பலமுறை கட்சி தலைமைக்கு புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

முருகானந்தம்
முருகானந்தம்

இவருடைய செயல் கட்சியின் மாவட்ட தலைமைக்கு தெரியுமா, கட்சிகாரர்களிடத்தில் அவப்பெயர் எடுத்து தன்னிச்சையாக செயல்படும் அவரை மாற்றி புதியவரை பொறுப்பிற்கு அறிவிக்க வேண்டுகிறோம்” இவண் பாதிக்கப்பட்ட, பாவப்பட்ட கழக தொண்டர்கள்” என குறிபிடப்பட்டிருந்தது. இந்த போஸ்டர் தஞ்சை மாவட்ட தி.மு.க மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து தி.மு.க தரப்பில் விசாரித்தோம், ``கிளை செயலாளர் பதவிக்கு இரண்டு தப்பினர் போட்டி போட்டனர். அதில் ஒரு தரப்பினரிடம் முருகானந்தம் தரப்பினர், இந்த முறை நீங்க கொஞ்சம் விட்டு கொடுங்க. அரசியல் செய்வது முன்ன மாதிரி கிடையாது, நிறைய பணம் செலவு செய்ய வேண்டும். கோடி கணக்குல பணம் வைத்திருப்பவர்கள் தான் அரசியல் செய்ய முடியும். மற்றொரு தரப்பை சேர்ந்தவர் பணம் செலவு செய்யக்கூடியவர். பிறகு உங்களுக்கு வேறு எதாவது செய்கிறேன் என கூறியிருக்கிறார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

அதற்கு அவர் ரூ. 1 ஒரு கோடி இருந்தால் தான் கிளை செயலாளர் பொறுப்புக்கு வர முடியுமா என கேட்டு விட்டு அதிருப்தியில் சென்றார். அதன் பிறகு இதனை போஸ்டராக அடித்து எங்கும் ஒட்டிவிட்டனர். இந்த விவகாரம் தலைமையின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்” என்றனர்.

இது குறித்து பூதலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் முருகானந்தத்திடம் பேசினோம், ``தேர்தல் வர இருப்பதால் கட்சிக்கும், எனக்கும் கெட்டப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் எதிர்கட்சிகளின் தூண்டுதலின் பேரில், எங்க கட்சியை சேர்ந்த சிலர் இதனை செய்துள்ளனர்” என்று முடித்து கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு