Published:Updated:

`நரகம் உங்களுக்குக் காத்திருக்கிறது’ - சரத் பவாருக்கு எதிராக அவதூறு; மன்னிப்புக் கேட்க நடிகை மறுப்பு

கோர்ட்டுக்கு அழைத்துவரப்பட்ட நடிகை

ஃபேஸ்புக்கில் சரத் பவாருக்கு எதிராக அவதூறு பதிவிட்ட மராத்தி நடிகை, தனது செயலுக்காக மன்னிப்புக் கேட்க முடியாது என்றும், ஃபேஸ்புக் பதிவை நீக்க முடியாது என்றும் தெரிவித்துவிட்டார்.

`நரகம் உங்களுக்குக் காத்திருக்கிறது’ - சரத் பவாருக்கு எதிராக அவதூறு; மன்னிப்புக் கேட்க நடிகை மறுப்பு

ஃபேஸ்புக்கில் சரத் பவாருக்கு எதிராக அவதூறு பதிவிட்ட மராத்தி நடிகை, தனது செயலுக்காக மன்னிப்புக் கேட்க முடியாது என்றும், ஃபேஸ்புக் பதிவை நீக்க முடியாது என்றும் தெரிவித்துவிட்டார்.

Published:Updated:
கோர்ட்டுக்கு அழைத்துவரப்பட்ட நடிகை

மராத்தி டி.வி நடிகை கேதகி சித்தலே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு எதிராக ஃபேஸ்புக்கில் அவதூறாகப் பதிவிட்டதற்காக நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டார். அவரை போலீஸார் தானே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டில் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் அதிக அளவில் கூடியிருந்தனர். அவர்களில் சிலர் முட்டையை வீச முயன்றனர். இதனால் போலீஸார் சித்தலேயை கோர்ட்டின் பின்புறம் வழியாக உள்ளே அழைத்துச் சென்றனர்.

மேலும், தனக்காக வழக்கறிஞர் தேவையில்லை என்றும் தெரிவித்துவிட்டார் சித்தலே. அவரை வரும் 18-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டது. இது குறித்து தானே குற்றப்பிரிவு துணை கமிஷனர் லட்சுமி காந்த் பாட்டீல் கூறுகையில், ``சித்தலேயிடம் ஃபேஸ்புக் பதிவை யார் போடச்சொன்னது என்பது குறித்து விசாரிக்கப்படும். 2020-ம் ஆண்டும் இதே போன்ற பதிவைப் பதிவிட்டிருக்கிறார்” என்று தெரிவித்தார். கோர்ட்டுக்கு வந்திருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மும்பை தலைவர் ஆனந்த் பராஞ்பே இது குறித்து கூறுகையில், ``கருத்துகளைத் தெரிவிக்க அனைவருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் இது போன்ற அவதூறுப் பதிவுகளை நியாயப்படுத்த முடியாது” என்று தெரிவித்தார்.

சித்தாலே, சரத் பவார்
சித்தாலே, சரத் பவார்

சித்தலேயைக் கைதுசெய்த நவிமும்பை போலீஸார் அவரிடம் விசாரித்தபோது, தான் ஃபேஸ்புக்கில் சரத் பவாருக்கு எதிராகப் பதிவிட்டதற்கு மன்னிப்புக் கேட்க முடியாது என்று தெரிவித்தவர், அது தனது கருத்து சுதந்திரம் என்றும் குறிப்பிட்டாராம்.

அதோடு சரத் பவாருக்கு எதிரான பதிவை ஃபேஸ்புக்கிலிருந்து நீக்க முடியாது என்றும் தெரிவித்துவிட்டாராம். மேலும் அவர் கைதுசெய்யப்படும்போது சிலர் அவர்மீது மை வீசினர். எனவே தனக்கு காவி சேலை வேண்டும் என்று கேட்டிருக்கிறார். இதற்கிடையே புதிதாக மும்பையில் சித்தலே மீது இரண்டு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அதோடு வழக்கறிஞர் நிதின் பாவே என்பவரின் கவிதை ஒன்றை சித்தலே தனது ஃபேஸ்புக் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'நரகம் காத்திருக்கிறது', 'நீங்கள் பிராமணர்களை வெறுக்கிறீர்கள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சரத் பவாரைக் கருத்தில்கொண்டு இந்த வரிகளை சித்தலே பதிவிட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. எனவே போலீஸார் வழக்கறிஞர் நிதின் யார் என்பது குறித்தும் விசாரித்துவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism