Published:Updated:

மீண்டும் அக்னிப்பரீட்சை: மகாராஷ்டிரா சட்டமேலவை தேர்தலில் கூடுதலாக ஒரு வேட்பாளரை நிறுத்தியுள்ள பாஜக

உத்தவ் தாக்கரே - சரத் பவார்

மகாராஷ்டிரா சட்டமேலவைத் தேர்தலில் பாஜக கூடுதலாக ஒரு வேட்பாளரை நிறுத்தியிருப்பதால் சிவசேனா கூட்டணிக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

மீண்டும் அக்னிப்பரீட்சை: மகாராஷ்டிரா சட்டமேலவை தேர்தலில் கூடுதலாக ஒரு வேட்பாளரை நிறுத்தியுள்ள பாஜக

மகாராஷ்டிரா சட்டமேலவைத் தேர்தலில் பாஜக கூடுதலாக ஒரு வேட்பாளரை நிறுத்தியிருப்பதால் சிவசேனா கூட்டணிக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

Published:Updated:
உத்தவ் தாக்கரே - சரத் பவார்

மகாராஷ்டிரா சட்டமேலவைக்கு காலியாகும் 10 இடங்களுக்கு வரும் 20-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் ஒரு வேட்பாளர் வெற்றி பெற 26 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவையாக இருக்கிறது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தலா இரண்டு வேட்பாளர்களை நிறுத்தியிருக்கின்றன. ஆனால் பாஜக நான்கு இடங்களில் மட்டும் வெற்றிபெற முடியும் என்ற சூழ்நிலையில் 5 வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறது. ஏற்கெனவே சமீபத்தில் நடந்த ராஜ்ய சபா தேர்தலில் பாஜக இரண்டு இடங்களில் வெற்றிபெற முடியும் என்ற சூழ்நிலையில் மூன்ரு வேட்பாளர்களை நிறுத்தி வெற்றிபெற்றது. இது சிவசேனாவுக்கு மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்பட்டது.

சித்திரிப்பு படம்
சித்திரிப்பு படம்

சிவசேனா சார்பாக நிறுத்தப்பட்ட இரண்டாவது வேட்பாளர்தான் இதில் தோல்வியைத் தழுவினார். சுயேச்சை எம்.எல்.ஏ-க்கள் பாஜக-வுக்கு ஆதரவாக வாக்களித்ததால் அதன் வேட்பாளர் வெற்றிபெற்றார். தற்போது அது போன்ற ஒரு நிலை காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டிருக்கிறது. சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியால் தலா இரண்டு இடங்களில் வெற்றி பெற முடியும். ஆனால் காங்கிரஸ் கட்சி இரண்டு இடங்களில் வெற்றி பெற கூடுதல் உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அனில் தேஷ்முக், நவாப் மாலிக் ஆகியோர் சிறையில் இருக்கின்றனர். அவர்கள் வாக்களிக்க ஒரு நாள் பரோல் கேட்டு தாக்கல் செய்த மனுவை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடிசெய்துவிட்டது. அவர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகவிருக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஐந்து வேட்பாளர்களை நிறுத்தியிருக்கும் பாஜக-வுக்கு அவையில் 106 உறுப்பினர்கள் இருக்கின்றனர். சிவசேனா-வுக்கு 55 உறுப்பினர்களும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 51 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சிக்கு 44 உறுப்பினர்களும் இருக்கின்றனர். இது தவிர சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் 25 பேர் இருக்கின்றனர். சட்டமேலவைத் தேர்தலில் இந்த 25 பேரின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பாஜக இவர்களில் எட்டுப் பேர் ஆதரவு தங்களுக்கு இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. மேலும் 11 உறுப்பினர்களின் ஆதரவு பாஜக-வுக்குத் தேவையாக இருக்கிறது. சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதில் பாஜக-வும், சிவசேனா கூட்டணியும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

பாஜக - சிவசேனா
பாஜக - சிவசேனா

சிவசேனா கூட்டணிக் கட்சிகள் உத்தவ் தாக்கரே தலைமையில் கூடி இது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தின. இது குறித்து சிவசேனா பிரமுகர் உதய் சாவந்த் கூறுகையில், ``ராஜ்ய சபா தேர்தலில் கவனக்குறைவாகச் செயல்பட்டுவிட்டோம். ஆனால் அது போன்ற தவறு சட்ட மேலவைத் தேர்தலில் நடைபெறாது” என்று தெரிவித்தார். சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் பவாயில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். ராஜ்ய சபா தேர்தலில் சிவசேனா வெற்றிபெற காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சரியாக உதவவில்லை என்று சிவசேனா கருதுகிறது. மூன்று கட்சிகளிடையே சரியான ஒத்துழைப்பு இல்லாமல் இருக்கிறது. அதனால் அதைப் பயன்படுத்தி தங்களால் வெற்றிபெற முடியும் என்று பாஜக கருதுகிறது.

இது குறித்து மத்திய அமைச்சர் ராவ்சாஹேப் தன்வே கூறுகையில், ``மிகவும் கவனத்துடன் ஆய்வு செய்த பிறகுதான் ஐந்து வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறோம். இம்முறை தேர்தலில் வெற்றிபெற புதிய யுக்தியைக் கையாளவிருக்கிறோம்” என்று தெரிவித்தார். சுயேச்சை எம்.எல்.ஏ-க்களின் தொகுதிகளுக்கு சிவசேனா கூட்டணி அரசு சரியாக நிதி ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. அதை பாஜக தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism