Published:Updated:

``வட இந்தியர்களை அவமதித்த ராஜ் தாக்கரேவை அயோத்திக்குள் அனுமதிக்கமாட்டோம்!" - பாஜக எம்.பி எச்சரிக்கை

பிரிஜ் பூஷன்

வட இந்தியர்களை அவமதித்த ராஜ்தாக்கரேவை அயோத்திக்குள் அனுமதிக்கமாட்டோம் என பா.ஜ.க எம்.பி தெரிவித்திருக்கிறார்.

``வட இந்தியர்களை அவமதித்த ராஜ் தாக்கரேவை அயோத்திக்குள் அனுமதிக்கமாட்டோம்!" - பாஜக எம்.பி எச்சரிக்கை

வட இந்தியர்களை அவமதித்த ராஜ்தாக்கரேவை அயோத்திக்குள் அனுமதிக்கமாட்டோம் என பா.ஜ.க எம்.பி தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
பிரிஜ் பூஷன்

நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே மகாராஷ்டிராவில் மசூதிகளில் இருக்கும் ஒலி பெருக்கிகளை அகற்றவேண்டும் என்று மாநில அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார். அதோடு 4-ம் தேதிக்குப் பிறகு மசூதிக்கு வெளியில் ஹனுமான் பாடல்களை பாடுவோம் என்றும் தெரிவித்திருந்தார். இதையடுத்து மகாராஷ்டிரா முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராஜ்தாக்கரே கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அனால், `ஒலிபெருக்கிக்கு எதிரான எங்களின் போராட்டம் தொடரும்' என்று ராஜ்தாக்கரே அறிவித்துள்ளார். அதோடு அடுத்த மாதம் 5-ம் தேதி அயோத்திக்கு சென்று ராமரை வழிபடப்போவதாகவும் ராஜ்தாக்கரே அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராஜ்தாக்கரே அளித்திருந்த பேட்டியில், ``கரசேவகர்கள் ஏராளமானோர் தங்களது உயிரை தியாகம் செய்துள்ளனர்.

ராஜ் தாக்கரே
ராஜ் தாக்கரே

சுப்ரீம் கோர்ட் உத்தரவால் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. அதன் ஆரம்பக்கட்டப் பணிகளை பார்க்கப்போகிறேன்" என்று தெரிவித்திருந்தார். மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ்தாக்கரே மகன் ஆதித்யதாக்கரேவும் அயோத்தி செல்லப்போவதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ராஜ்தாக்கரேவை அயோத்திக்குள் விடமாட்டோம் என உத்தரப்பிரதேச மாநிலம் கைசர்கஞ்ச் பா.ஜ.க எம்.பி பிரிஜ் பூஷன் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிரிஜ் பூஷன்
பிரிஜ் பூஷன்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், ``வட இந்தியர்களை அவமதித்த ராஜ்தாக்கரே அயோத்தி எல்லைக்குள் நுழைய அனுமதிக்கமாட்டோம். அயோத்தி வரும் முன்பாக ராஜ்தாக்கரே அனைத்து வட இந்தியர்களிடம் கைகூப்பி மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

ராஜ்தாக்கரே சிவசேனாவிலிருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்த போது, வட இந்தியர்களுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன் வைத்தார். வட இந்தியர்களால்தான் மகாராஷ்டிரா கலாசாரம் பாதிக்கப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார். அதோடு வட இந்தியாவிலிருந்து மும்பைக்கு ரயில்வே தேர்வு எழுத வந்தவர்களை மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தொண்டர்கள் அடித்து விரட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism