Published:Updated:

பிரதமர் மோடிக்காகக் கட்டப்பட்ட கோயில்... ஓரிரு நாள்களிலேயே அகற்றப்பட்ட சிலை! - புனேயில் பரபரப்பு

பிரதமர் மோடி கோயில்
பிரதமர் மோடி கோயில்

புனேயில் பிரதமர் நரேந்திர மோடிக்காகக் கட்டப்பட்ட கோயிலிலிருந்து மார்பளவு சிலை அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரதமர் நரேந்திர மோடிக்காக மகாராஷ்டிரா மாநிலம், புனேயிலுள்ள அவுந்த் என்ற இடத்தில் கோயில் கட்டப்பட்டிருந்தது. இந்தக் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடியின் மார்பளவுக்குச் சிலை வைக்கப்பட்டிருந்தது. பாஜக பிரமுகர் மயூர் முண்டே என்பவர் ராஜஸ்தானிலிருந்து மார்பிள் கற்களைக் கொண்டு வந்து இந்தக் கோயிலைக் கட்டியிருந்தார். இந்தக் கோயில் கட்டி முடிக்கப்பட்டு ஒரு சில நாள்கள் மட்டுமே ஆகின்றன. இதைக் காண தினமும் ஏராளானோர் வந்து சென்றனர். மறுபுறம், இந்தக் கோயில் கடுமையான விமர்சனத்துக்கும் உள்ளானது. இந்தநிலையில், திடீரென கோயிலிலிருந்த மார்பளவு சிலையைக் காணவில்லை. அங்கிருந்து சிலை அகற்றப்பட்டிருந்ததுது. கோயிலைக் கட்டியவர் அகற்றினாரா அல்லது வேறு யாரும் அகற்றினார்களா என்பது தெரியவில்லை. இது குறித்து கோயிலைக் கட்டிய மயூர் முண்டேவிடம் கேட்டதற்கு, என்ன நடந்தது என்று தெரிவிக்க மறுத்துவிட்டார்.

பிரதமர் மோடி கோயில்
பிரதமர் மோடி கோயில்

ஆனால் சிலை அகற்றப்பட்டதை எதிர்த்து பாஜக தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். சிலை காணாமல்போனது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் கிண்டல் செய்திருக்கிறார்கள். கோயில் வளாகத்துக்கு வந்த சில தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் இது குறித்துக் கூறுகையில், ``புனேயில் நரேந்திர மோடி கோயில் கட்டி முடிக்கப்பட்டவுடன் எரிபொருள் விலை குறைந்துவிடும், பணவீக்கம் குறைந்துவிடும், வங்கி கணக்குக்கு ரூ.15 லட்சம் வந்துவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் நாங்கள் இங்கு வந்து பார்த்தால் கடவுளையே காணவில்லை” என்று தெரிவித்தனர்.

பெட்ரோல் விலையைக் குறைக்க முடியாததற்கு மோடி அரசு சொன்ன காரணம்! |The Imperfect Show

ஆனால், `அயோத்தியில் ராமர் கோயில் கட்டிவரும் நரேந்திர மோடியை கௌரவிக்கும்விதமாக இந்தக் கோயிலைக் கட்டியதாக’ மயூர் தெரிவித்தார். ``மோடி ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டின் வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறார். 370-வது சட்டப்பிரிவை நீங்கியதோடு மட்டுமல்லாமல் முத்தலாக் முறையை ஒழித்திருக்கிறார். அதோடு, ராமர் கோயிலும் கட்டுகிறார்” என மயூர் குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் கோயிலை ரூ.1.6 லட்சத்தில் கட்டி முடித்ததாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு