Published:Updated:

சுட்டிக்காட்டிய ஜூ.வி... மலரும் சென்னை மாநகராட்சி பூங்காக்கள்!

புத்துயிர் பெரும் பூங்காக்கள்
புத்துயிர் பெரும் பூங்காக்கள்

சிதிலமடைந்து, புதர்மண்டிக் காணப்பட்ட சென்னை பூங்காக்கள், பராமரிப்பில் நடந்த முறைகேடுகளை RTI-யில் நமக்குக் கிடைத்த பதில்கள் மூலம் நேரில் கள ஆய்வு செய்து தகுந்த ஆதாரங்களோடு அந்தக் கட்டுரையை வெளியிட்டிருந்தோம். அதன் விளைவு தற்போது சென்னை பூங்காக்கள் புத்துயிர் பெற்றிருக்கின்றன....

‘சென்னையில் சிதிலமடைந்த பூங்காக்கள்! - என்ன செய்கிறது மாநகராட்சி?’ என்ற தலைப்பில் 08/12/2019 ஜூனியர் விகடன் இதழில், சென்னையில் உள்ள பூங்காக்களின் பராமரிப்பு என்ற பெயரில் நடைபெறும் முறைகேடுகளை அம்பலப்படுத்தியிருந்தோம். தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் நமக்குக் கிடைத்த பதில்கள் மூலம் களஆய்வு செய்து தகுந்த ஆதாரங்களோடு அந்தக் கட்டுரையை வெளியிட்டிருந்தோம்.

சிதிலமடைந்த பூங்காக்கள்
சிதிலமடைந்த பூங்காக்கள்

சென்னையின் 15 மண்டலங்களில் உள்ள 700-க்கும் அதிகமான பூங்காக்கள் உள்ளன. அவற்றில் ஒரு சில பூங்காக்கள் மட்டுமே நல்ல நிலையில் பராமரிக்கப்படுகின்றன. பல நூறு பூங்காக்கள் எவ்விதப் பராமரிப்பும் இல்லாது புதர்மண்டி, மக்கள் பயன்படுத்த முடியாத அவலத்தில் உள்ளன. பராமரிப்பும் பணியாட்களும் இல்லாததால் பல பூங்காக்கள் சமூக விரோதிகளின் கூடாரங்களாக மாறியுள்ளன. தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் நமக்குக் கிடைத்த பதில்கள் மூலம் நேரில் களஆய்வு செய்து தகுந்த ஆதாரங்களோடு அந்தக் கட்டுரையை வெளியிட்டிருந்தோம்.

விளைவு... களமிறங்கியது சென்னை கார்ப்பரேஷன். புதர்கள் அகற்றப்பட்டன. மைதானங்கள் மீட்கப்பட்டன. விளையாட்டு உபகரணங்கள் மாற்றப்பட்டன. இன்னும் மாற்ற வேண்டியவை நிறையவுள்ளன.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

முன்பு நாம் ஆய்வு செய்திருந்த பல பூங்காக்களிலிருந்து சில பூங்காக்களைத் தேர்வு செய்து களஆய்வு மேற்கொண்டோம். அப்போதும் இப்போதும் பூங்காக்கள் எப்படி இருந்தது என்பதை பின்வருமாறு காணலாம்.

ஸ்பென்சர் பிளாசா அருகிலிருந்த பூங்கா அன்றும் இன்றும்

அப்போது...புதர் மண்டி, உடைந்த இருக்கைகளுடன் இருந்தது.

நடைபாதை முன்-பின்
நடைபாதை முன்-பின்
முன் - பின்
முன் - பின்
இருக்கைகள் முன் - பின்
இருக்கைகள் முன் - பின்

இப்போது...புதர்கள் அகற்றப்பட்டு, புதிதாகச் செடிகள் நடப்பட்டு பூங்கா பளிச்சிடுகிறது. இருக்கைகளும்.

மேற்கு சி.ஐ.டி நகர் முதல் தெருவில் அமைந்துள்ள பூங்கா அன்றும் இன்றும்

அப்போது...மது பாட்டில்கள் சிதறிக்கிடந்தன. இருள் மயமாய் இருந்தது.

முன் - பின்
முன் - பின்

இப்போது...பூங்கா சுத்தம் செய்யப்பட்டு புதிய மின்விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.

மக்களுக்கு ஒரு வேண்டுகோள்...பூங்கா அருகில் ஒரு குப்பைத்தொட்டி உள்ளது. மக்கள் பூங்காவையும் குப்பைத்தொட்டியாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இது உங்கள் பூங்கா!

வடபழனி ஆற்காடு சாலையில் அமைந்துள்ள இரண்டு சிறுவர் பூங்காக்கள் அன்றும் இன்றும்

அப்போது...புதர் மண்டி சுற்றுச்சுவர்களின்றி திறந்தவெளி பார் ஆக இருந்தது.

முன் - பின்
முன் - பின்
முன் - பின்
முன் - பின்
முன் - பின்
முன் - பின்
முன் - பின்
முன் - பின்

இப்போது...புதர்கள் அகற்றப்பட்டு, புதிய மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. சுற்றுச்சுவர் புதிதாய்க் கட்டப்படுகிறது.

``சந்திரமுகி, புலிகேசி மட்டுமில்ல... இதையெல்லாம்கூட நான்தான் வரைஞ்சேன்!'' - கலை இயக்குநர் தேவா

அதுபோல, விருகம்பாக்கம் பகுதியிலிருந்த பல பூங்காக்களில் புதர்கள் அகற்றப்பட்டுள்ளன. பல பூங்காக்களில்இப்போதுதான் பணியாட்களைக் காணமுடிகிறது. ஆனால், இன்னும் சில பூங்காக்களில் விளையாட்டு உபகரணங்கள் முழுமையாகச் சரிசெய்யப்படவில்லை.

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னையில் ஆயிரத்துக்கும் அதிகமான பூங்காக்கள் இருக்கின்றன. பெரும்பாலானவை இன்னும் மோசமாகத்தான் உள்ளன. அனைத்துப் பூங்காக்களையும் புனரமைத்து புதுப்பொலிவாக மாற்ற ஒரு குழு உருவாக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உறுதி கூறியிருக்கிறார். இன்னும் இரண்டு மாதங்களுக்குள் சென்னை நகரிலுள்ள அனைத்துப் பூங்காக்களும் சரி செய்யப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

நம்புவோம்... நிச்சயம் செய்து முடிப்பாரென்று!

அடுத்த கட்டுரைக்கு