Published:Updated:

``சொத்து வரி உயர்வை ரத்து செய்வது தொடர்பாக ஸ்டாலின் விரைவில் நல்ல முடிவெடுப்பார்!" - துரை வைகோ

துரை வைகோ

`சொத்து வரி உயர்வை எதிர்த்து போராடும் அதிமுக-வினர், மத்திய அரசு உயிர்காக்கும் மருந்துகளின் விலை, பெட்ரோல் விலை உயர்த்தியதை எதிர்த்து ஏன் போராட்டம் நடத்தவில்லை?" - துரை வைகோ

``சொத்து வரி உயர்வை ரத்து செய்வது தொடர்பாக ஸ்டாலின் விரைவில் நல்ல முடிவெடுப்பார்!" - துரை வைகோ

`சொத்து வரி உயர்வை எதிர்த்து போராடும் அதிமுக-வினர், மத்திய அரசு உயிர்காக்கும் மருந்துகளின் விலை, பெட்ரோல் விலை உயர்த்தியதை எதிர்த்து ஏன் போராட்டம் நடத்தவில்லை?" - துரை வைகோ

Published:Updated:
துரை வைகோ

தேனியில் மதிமுக மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ தலைமை வகித்து கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், ``பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டேயிருக்கிறது விலையைக் கட்டுக்குள் வைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், வீடு வாடகைக்கு ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். நடுத்தர வர்க்கத்தை பாதிக்கும் இதை திரும்பப் பெற வேண்டும், முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிக்குக் கொண்டு செல்லும் பொருள்களைத் தடுத்து நிறுத்தக் கூடாது. சுங்கக் கட்டணத்தை உயர்த்துவோம் என ஒன்றிய நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சுங்கக் கட்டணத்தை உயர்த்தக் கூடாது” உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

துரை வைகோ
துரை வைகோ

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த துரை வைகோ, ``கொரோனாவிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்துகொண்டிருக்கும் மக்களுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வு மரண அடியாக அமைந்துள்ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் விலையை உயர்த்த வேண்டியிருக்கிறது என்று கூறும் ஒன்றிய அரசு, ஐந்து மாநில தேர்தலுக்கு பின்னர்தான் விலையை உயர்த்தியுள்ளது. மேலும் கொரோனா ஊரடங்கின்போது சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 40 டாலருக்கும் கீழ் குறைந்திருந்தபோதும்கூட கலால் வரியை 70 சதவிகிதம் அளவுக்கு உயர்த்தி அப்போதும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தத்தான் செய்ததே தவிர ஒன்றிய அரசு குறைக்கவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

துரை வைகோ
துரை வைகோ

மேலும் முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் முந்தைய அதிமுக அரசின் செயல்பாடுகளைக் காட்டிலும் திமுக அரசின் செயல்பாடுகள் சிறப்பாகவே உள்ளன” என்று தெரிவித்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தொடர்ந்து, ``நியூட்ரினோ திட்டத்தை முதன்முதலில் எதிர்த்தவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோதான். அவரின் எதிர்ப்பால்தான் இந்தத் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சரும் இந்தத் திட்டம் நிறுத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். வைகோ அவர்கள் போராட்டத்தின் மூலம் பெற்ற பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகளில் நியூட்ரினோ திட்டமும் ஒன்றாகும்.

துரை வைகோ
துரை வைகோ

சொத்து வரி உயர்வு குறித்து தமிழக முதல்வரிடம் மதிமுக சார்பாக, கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நடுத்தர மக்களை பாதிக்கும் சொத்து வரி உயர்வை ரத்துசெய்வது தொடர்பாக மு.க.ஸ்டாலின் விரைவில் நல்ல முடிவெடுப்பார் என நம்புகிறோம். மேலும் சொத்து வரி உயர்வை எதிர்த்து போராடும் அதிமுக-வினர், மத்திய அரசு உயிர்காக்கும் மருந்துகளின் விலை பெட்ரோல் விலை உயர்த்தியதை எதிர்த்து ஏன் போராட்டம் நடத்தவில்லை?” என்றும் குற்றம்சாட்டினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism