Published:Updated:

``காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்தான் எங்களின் உண்மையான எதிரிகள்... பாஜக அல்ல!" - சிவசேனா

சிவசேனா

`சிவசேனாவின் உண்மையான எதிரி பா.ஜ.க கிடையாது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்தான் உண்மையான எதிரிகள்.' - சிவசேனா

``காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்தான் எங்களின் உண்மையான எதிரிகள்... பாஜக அல்ல!" - சிவசேனா

`சிவசேனாவின் உண்மையான எதிரி பா.ஜ.க கிடையாது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்தான் உண்மையான எதிரிகள்.' - சிவசேனா

Published:Updated:
சிவசேனா

மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைந்திருக்கின்றன. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக இருக்கிறார். அவரைக் கட்டுப்படுத்துபவராக சரத் பவார் இருக்கிறார். மூன்று கட்சிகளுக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும், பிரச்னையின்றி ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக பா.ஜ.க-வுடன் சிவசேனா கூட்டணி அமைத்திருந்தது. ஆனால், முதல்வர் பதவி தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் சிவசேனா பா.ஜ.க-வுடனான உறவை முறித்துக்கொண்டது. இதனால் சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்கும் வேலையில் பா.ஜ.க தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது. ஆனால், ஒவ்வொரு முறையும் இதில் பா.ஜ.க தோல்வியையே சந்தித்துவருகிறது. இந்த நிலையில், சிவசேனா இளைஞரணித் தலைவர் விகாஸ் கோகாவாலா தெரிவித்திருக்கும் கருத்து மாநில அரசியலில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம், கொங்கன் பகுதியிலிருக்கும் மஹாட் என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய விகாஸ் கோகவாலா, ``சிவசேனாவின் உண்மையான எதிரி பா.ஜ.க கிடையாது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்தான் உண்மையான எதிரிகள். பா.ஜ.க-வுக்கு இந்தப் பகுதியில் அதிக வாக்குவங்கி கிடையாது. எனவே, நமது கூட்டணிக் கட்சிகள்தான் நமது உண்மையான எதிரியாகும். சிவசேனா தொண்டர்களின் பணிகளை நமது கூட்டணிக் கட்சிகளான தேசியவாத காங்கிரஸும், காங்கிரஸ் கட்சியும் போலியாக உரிமை கொண்டாடுகின்றன.

உத்தவ் தாக்கரே, தன் தந்தையுடன் விகாஸ் கோகாவாலா
உத்தவ் தாக்கரே, தன் தந்தையுடன் விகாஸ் கோகாவாலா

காங்கிரஸ், சிவசேனாவிலிருந்து தலைவர்களை தேசியவாத காங்கிரஸ் இழுக்கிறது. கடந்த மாதம் நான்கு முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர்கள், ஒரு சிவசேனா கவுன்சிலர் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ந்திருக்கின்றனர். நாங்கள் கூட்டணியைப் பாதுகாக்க முயல்கிறோம். ஆனால், அவர்கள் அதைக் கெடுக்கும்விதமாக நடந்துகொள்கின்றனர்" என்று குற்றம்சாட்டினார்.

கடந்த வாரம் மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா பட்டோலேவும் தேசியவாத காங்கிரஸ் தங்கள் முதுகில் குத்திவிட்டதாகக் குற்றம்சாட்டியிருந்தார். கடந்த வாரம் நடந்த கோண்டியா ஜில்லா பரிஷத் தலைவர் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சி பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்துவிட்டது. எனவேதான் நானா பட்டோலே இவ்வாறு குற்றம்சாட்டினார். சிவசேனாவின் தானாஜி சாவந்தும் சிவசேனா கூட்டணி ஆட்சியில் அதிக அளவு நிதியைப் பெற்று பயனடைந்தது தேசியவாத காங்கிரஸ் என்று தெரிவித்திருந்தார். விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், இந்தக் கருத்து வேறுபாடுகள் காரணமாக மூன்று கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!